செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

சிவஞான போதத்தின் 6‍வது பாடல்

சிவஞான போதத்தின் 6‍வது பாடல்,  நம்மைச்   சிந்திக்க வைப்பது ஆகும். "சிவம் எது? எங்கே இருக்கிறது?" என்ற வினாவிற்கு, உலகத்தைக் காட்டலாம். நம் கண்ணுக்குத் தெரிவது இவ்வுலகமும் இதன்கண் இருக்கின்ற படைக்கப்பட்ட பொருள்களுமே . ஆனால் இவ்வுலகு சிவத்தால் படைக்கப்பட்டதொன்றே யன்றி, சிவம் ஆகாது. காரணம்,காரியம் என்ற இரண்டனுள் உலகத்திற்குக் காரணமாகியது சிவம். உலகம் சிவத்தின் காரியம் அல்லது செயலுரு ஆகும்.
இதையே "உணர் உரு" என்கிறது இந் நூல்.

உலகம் சிவமன்று. அடுத்து யாது உள்ளது  - எது சிவம் என்ற கேள்விக்குச் சுட்டுவதற்கு? ஒன்றுமில்லை!. சூன்யம் எனப்படும் இன்மையையே சுட்டுதல்  ஆகும் (கூடும் )  . சூழவுள்ள வெட்டவெளியில் ஒன்றுமில்லை.
எனவே சூன்யம் சிவமென்று சுட்டுவதாயின், அது சிவமாகாது என்பதே கேளவிக்கான பதிலாகும். இவ்விரண்டாம் திறத்ததும் மாயைதான் . உணர ஓர் உருவற்ற இன்மையும் மாயை. உணர் உருவாகிய உலகமும் மாயையே என்பர்.

உலகத்தினும் இன்மையினும் வேறாக நிற்பதே சிவ சத்து.   அதாவது
சிவமாகிய ஒருமை. தானன்றிப் பிறிது எதுவும் தனக்கீடில்லாத சிவமாகிய ஒருமை..இச் சிவத்தொருமை உணர, உலகமும் இன்மையும் ஏதுக்களாக நின்றன என்று புரிந்துகொள்ள வேண்டும்.

இதையே ஆறாம் பாடல் கூறுகின்றது. பாடல் பார்ப்போம்.

உணர் உரு  அசத்து எனின் உணராது இன்மையின்
இரு திறன் அல்லது  சிவ சத்து  ஆமென‌
இரண்டு வகையின் இசைக்குமன்  னுலகமே.

இதனுரை பின்  காண்போம்.













ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

நீட்டப் பட்டமிளகாய்

பட்ட மிளகாய்களிற் சில நீட்டமாகவும்  சில குட்டையாகவும் இருக்கும்.  சில காரமாகவும் வேறு சில காரம் குறைந்தும் இருக்கும்.  இதை எண்ணெயில் பொரித்துண்டால்  சோற்றுக்குச் சுவையாய் இருக்கக்கூடும்.  மோர் மிளகாய் என்றும் ஒரு வகையுண்டு. பெயரைக் கொண்டு பார்த்தால்  மோரில் ஊற  வைத்து அப்புறம் காயவைத்த மிளகாய் போல் "தெரிகிறது',  இவைகளெல்லாம் மிளகாய்  வகைகள் எனலாம்.

இவண் யாம் சொல்ல விழைந்தது யாது?

நீட்டப் பட்டமிளகாய்  என்பதற்கும்  நீட்டப்பட்ட மிளகாய் என்பதற்கும் ஒரு வேறுபாடு  உண்டு.

நீட்டபட்ட  மிளகாய் என்பது பட்டமிளகாய் வகைகளில் ஒன்றாக இல்லாமல் இருக்கக்கூடும். பச்சை மிளகாய் வகையே கொஞ்சம் நசுக்கி நீட்டப்பட்டதாகவோ அல்லது செயற்கையில் அறிவியல் முறையில் நீட்டம் அடைவிக்கப்பட்ட மிளகாயாகவோ இருக்கலாம்.  அதாவது குட்டையாக இருந்து பின் நீட்டம் அடையச் செய்யப்பட்டது  என்று பொருள்.  ----சொற்பொருளுக்காக  யாம் சொல்கிறேம்    (இது சரியான வினைவடிவம்.  தெரிந்துகொள்க ).

நீட்டப்    பட்டமிளகாய் நீட்டமான ( நெடிதான )   பட்டமிளகாய் வகைகளிலொன்று.

இத்தகு மிளகாய்கள் உள்ளனவோ இவை இல்லாதனவோ  எனின் இவற்றை நீங்களே  மிளகாய்  அறிஞர்பால்   உசாவி  அறிக.

லீலா LeelA leelai

 இன்று லீலா ‍  லீலை என்ற சொல்வடிவங்களைச் சற்றுக்  காண்போம்.

இலைத்தல் என்றால் தன்மை குன்றுதல் என்று பொருள். இதை உண்மை குன்றுதல் என்றும் சொல்லலாம்.  அதாவது, ஒரு மந்திரவாதி கயிற்றைப் பாம்பாக மாற்றுகிறான் என்றால், அது பாம்பாக மாறிவிட்டது போன்ற காட்சியை ஏற்படுத்துகிறான்.   அது  "போன்மை உருவாக்க" மாகும்.  அதனை இலைத்தல் என்பது பொருத்தமானதே ஆகும். ( இளைத்தல் என்பது வேறு. )

இங்கு இரண்டாவது சொல்லை (வருமொழியை) முதலில் எடுத்துக்கொள்வோம்.

இலை என்பது  தன் தலையை இழந்து,  ‍  -லை  >  -லா   என்று சொல்லில் நின்றது.    பல சொற்களில் இதுபோலத்  தலை இழந்திருத்தலால் இதற்கு விரித்துரை தேவை இல்லை.  வேண்டின்   எம் பழைய இடுகைகளைக் காண்க.

லீலா என்ற சொல்லில் முன் நிற்பது  (நிலைமொழி )  இல் என்ற இன்மை குறிக்கும் சொல்.  "நடப்பில் இல்லாதபடி, அல்லது உண்மை இல்லாதபடி,"  என்று இங்கு பொருள்படும்.

இல்+ இலை > இலிலை > இலீலை > லீலை.>  லீலா


இல்+ இலை > இல்லிலை > இலிலை >  இலீலை > லீலை.>  லீலா

உண்மை இல்லாதபடிக்குத் தன்மை குன்றுதல். இதைத் தமிழர் விளையாடல் என்று கூறினர்.  விளை ‍  :  உண்டாக்குதல், விழை -  விரும்பு.   விழை  விளை யானது என்பர் அறிஞர்  சிலர்.

சொல்லை  மேற்கண்ட படி அமைத்தனர்  என்க.

அதை இலக்கண முறைப்படி  வடிவமைத்துக் காட்டுவதாயின்:

இல் + இலை =  இல்லிலை (லகர இரட்டிப்பு) (இலை: முதனிலைத் தொழிற்பெயர்)
இல்லிலை > இலிலை ( இடைக்குறை)
இலிலை >  இலீலை  (இலை > ஈலை, முதனிலை திரிந்த தொழிறெயர்),   அதாவது: இல் + ஈலை = இலீலை)
இலீலை > லீலை  ( முதற்குறை) (தலையெழுத்திழப்பு)
லீலை > லீலா  (திரிபு)

எனக்காண்க.

தமிழிலக்கணப்படி   லகரம் சொல்லின் முதலெழுத்தாய்  ஆகாது எனினும் இது ஒருவரின் பெயராய் வருங்காலை கவிதையிலன்றி  மற்ற விடத்து இலீலை என்று எழுதவேண்டுவதில்லை.   பாண்டையர் எழுதியவை பெரும்பாலும் பாடல்களும் அவற்றிற்கு உரைகளுமே. அது செய்யுளுக்குரிய இலக்கணம்.  செய்யுளில் போற்றற்குரியது  அவ்விலக்கணம்.

இயற்கையை மீறிய செயல்காட்சிகளும் இலீலைகளாய் அடங்கின.

இவ்விதமாக இலீலை என்ற சொல்லும் தமிழ்ச்சொற்களினடிப் பிறந்த திரிசொல் ஆகும்.

இதை ஒரு play  என்று ஆங்கிலத்தில் குறிக்கலாம். இறைவன் அப்படி மாயங்கள் காட்டினால்  அதையும் லீலைகள் என்கிறோம். திருவிளையாடல் என்றும் சொல்கிறோம்.

Play என்ற சொல்லைப் பாருங்கள்.  விளை  compares with pla.   வி and p are interchangeable, in many languages.    ~lay and  ளை   are  of proximate sound. There are many Tamil words which are close to English and other European language words. A Tamilian published a long list of such words but I do not know if the  list is still available.

மாய(ம்)  and magic,   மா  =  ma.   g  (ic)  -  pronounced  -j-  ஜ -  ய  interchangeable.   -ic  suffix.

ஒரு சொல் எம்மொழியில் தொடங்கிற்று என்பதே இவ்வாய்வு. அது எங்கு சென்று குடியேறிற்று  என்பது இவ்வாய்வின் இலக்கு அன்று.


====================================================================

Notes

மாயம் <  மாய்தல்.  மாய் + அம் . அறிவை மாய்ப்பது.


mAyA

f. art , wisdom , extraordinary or supernatural power (only in the earlier language) ; illusion , unreality , deception , fraud , trick , sorcery , witchcraft magic RV. &c. &c. ; an unreal or illusory image , phantom , apparition ib. (esp. ibc= false , unreal , illusory ; cf. comp.) ; duplicity Illusion (identified in the Samkhya with Prakriti or Pradhana and in that system , as well as in the Vedanta , regarded as the source of the visible universe) IW. 83 ; 108 ; (with Saivas) one of the 4 Pasas or snares which entangle the soul Sarvad. (with Vaishnavas) one of the 9 Saktis or energies of Vishnu L. ; Illusion personified (sometimes identified with Durga , sometimes regarded as a daughter of Anrita and Nirriti or Nikriti and mother of Mrityu , or as a daughter of Adharma) Pur. ; compassion , sympathy L. ; Convolvulus Turpethum L. ; N. of the mother of Gautama Buddha MWB. 24 ; of Lakshmi1 W. ; of a city Cat. ; of 2 metres Col. ; du. (%{mAye@indrasya}) N. of 2 Sa1mans ArshBr. - Lexicon.

lIlA f. (derivation doubtful) play , sport , diversion , amusement , pastime MBh. Ka1v. &c. ; mere sport or play , child's play , ease or facility in doing anything ib. ; mere appearance , semblance , pretence , disguise , sham Ka1v. Katha1s. Pur. (ibc. sportively , easily , in sport , as a mere joke [903,3] ; also = %{lIlayA} ind. for mere diversion , feignedly) ; grace , charm , beauty , elegance , lovelniess Ka1lid. Katha1s. Ra1jat. ; (in rhet.) a maiden's playful imitation of her lover , Dalar. Sa1h. Prata1p. ; a kind of metre (4 times $) Col. ; N. of a Yogini HParis3

Note: Derivation was doubtful for the lexicographers because they did not look into Tamil before writing their lexicon. It only proves the present exposition,

Some of these meanings are not etymological. (subsequently acquired meanings ).











வியாழன், 18 பிப்ரவரி, 2016

அயல்.

அயல் என்ற சொல் எவ்வாறு அமைந்தது.

அ =  அங்கு என்று பொருள்படும் சுட்டு ஆகும்.

அல் என்பது அன்மைக் கருத்து.  அல்லாதது என்று பொருள்.

அங்கு இல்லாதது,  இங்கும் இல்லாதது எங்கோ வெளியிடத்துக் குரியதென்று பொருள்.

அ + அல் =  அயல்.

யகர உடம்படுமெய் வந்துள்ளது,

அ + ( ய்    )  +  அல் =  அயல்.

இவ்வாறு அ என்னும் சுட்டும்  அல் என்ற   மறுப்பும்  சேர்ந்தது  அயல் ஆகும்.

விருத்தி.

விருத்தி என்பது உலக வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் அவ்வப்போது வழங்கும் சொல். " மரம் நட்டு உரமெல்லாம் போட்டுப் பார்த்தாகிவிட்டது, ஒன்றும் விருத்தி ஆகவில்லை" என்று பேசுவது கேட்டிருக்கலாம். "குடும்பம் ஒன்றும் விருத்திக்கு வரவில்லை" என்றும் சொல்வர். இப்போது ஆங்கிலம் கலந்து பேசும் பழக்கம் பரந்து காணப்படுவதால், விருத்தி என்ற சொல்வழக்கு சற்று மறைந்துவருகிறது என்று தெரிகிறது.

விருத்தியுரை என்ற வழக்கும் காணலாம்.  விரித்து எழுதப்பட்ட உரை விருத்தியுரை.  அகலவுரை என்ற பயன்பாடும் உளது. An elaborate commentary or gloss.

விரி >  விரு >  விருத்தி.

விரி > விரித்தி >  விருத்தி.

இரண்டும் ஒன்றே.  இதன் அடிப்படைக் கருத்து விரிவு என்பது.

விருத்தி என்பது விரித்தி என்ற பேச்சு வழக்கிலிருந்து வந்தது ஆகும்.  நாளடைவில் அது பல்வேறு  கருத்துவளர்ச்சிகளை உள்ளடக்கி விரிப்புற்றது.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

அந்நியன் ஒரு மறுபார்வை

அந்நியன்  என்ற  சொல்லுக்கு முன் விளக்கம் எழுதியுள்ளோம்.  அதை இங்கு சுருங்கச் சொல்வதானால்      அ  என்பது தமிழில் ஒரு சுட்டு,   அங்கு என்று படர்க்கையை  அது சுட்டும்,   ஆனால்  அ  என்பது  அன்மை என்றும் பொருள் படுவது,   அன்மையாவது  அல்லாமை;  அல்லாதது.  அல்லாதன;  அல்லாதவன்  என விரியும் . இதுவன்று   அவை அல்ல   என வரும்.  அல் திணை >  அஃறிணை ;  அல்வழி '  அன்மொழி என்பவை பழஞ்சொற்கள்

அல்  தன்  லகர ஒற்றை இழந்து  அ என்றும் நிற்கும்.   மங்கலம் >  அமங்கலம் போல.  அதாவது  மங்கலம் அல்லாதது.

அல்  + நீ  + அன் =  அன்னியன்    (  நீ  அல்லாதவன் ;   அடுத்தவன்;  பிறன் )
இங்கு  நீ  என்பது  நி  என்று   குறுகியது.  நீ  சிலவிடத்து   நி  என்று  குறுகும்.   நின்  என்ற சொல்லில்  அது குறுகியது காண்க.   நின்  புகழ்  =  உன் புகழ்.

அல்  என்பது   அ  என்றும் குறையும்  என்பதால்     அ + நீ + அன் =  அந்நியன்
என்றும்   ஆகும்.  நகரம் இரட்டித்தது. மற்றும் முன் கூறியதுபோல   நீ  குறிலாகிற்று.

நீ  என்பது நீக்கப் பொருளது என்பதை முன் இடுகையில் விளக்கியுள்ளேன்,
http://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_13.html
அதையும் மறுபார்வை செய்துகொள்ளுங்கள்.   நிவாரணம் என்ற சொல்லில்
நீ  குறுகியுள்ளது.   நீ +  வரு+   அணம்  >  நிவாரணம் .    நீங்கி வருதல்.   நீக்க நிலை  அண்மி வருதல் என்று விரிக்கலாம் எனினும்   ஒன்றே.     இந்தச்     சொல் எங்கும் பரவிப் புகழ் பெற்ற  சொல்.  நீ . என்பதே நீங்குதல்

அடுத்து  அயல் என்பது காண்போம்.

குறிப்பு:
பழனி  என்பதில்  பழம் நீ  என்பது  நி என்று  குறுகிற்று என்ப


செடியிற் பூத்ததொரு சிறுபூ‍‍‍‍

ஒரு வலைத்தளத்தைப்  புகழ்ந்து எழுதியது,

செடியிற்  பூத்ததொரு சிறுபூ‍‍‍‍----  அதன்
செழுமைஎன் சொல்வது
வளமையில்  வெல்வது
அடியில் இருந்து நுனி வரையில் ‍‍--- பார்க்கின்
அதுவொரு தேனடை
அழகாம்  தமிழ் நடை,

பழுத்து  விளைந்தபல  கருத்து ----  அது
பயன்மிகத் தந்தது
பளிங்கென்  றொளிர்ந்தது
தழுக்கும் தமிழுணர்வும் உலகில்  ---- பெறும்
தகுந்த  ஊக்கமினி
தகைத்தல் நீக்கும்கனி  .



சொற்குப்  பொருள் காட்டும்   ஆடி ---- தமிழ்
சொந்தம்  எனவு ணர்த்தும்
சோர்வில்  நிலைஇ  ணர்த்தும் ;
தெற்கில்  இலகு தமிழ்  உலகை ---  எந்தத்
திக்கும்  புகழ்ந்திடவே
தக்க   நிகழ்ந்திடவே.,                                            (செடியிற்)

தகைத்தல்  =  இளைத்தல், களைத்தல் .
தழுக்கும் -  செழிக்கும்.
சொற்கு  -  சொல்லுக்கு 
ஆடி  -  கண்ணாடி 
சோர்வில்  -  சோர்வு இலாத 
இணர்த்தும் -  நெருங்கச்  செய்யும் 
இலகு  - விளங்கும் 
தக்க   -  தக்கவை .



திங்கள், 15 பிப்ரவரி, 2016

ஆசாரி ஆனாலும் பூசாரி ஆனாலும் MURDER

ஆசாரி  ஆனாலும்  பூசாரி  ஆனாலும்
கூசாமல்  கொத்துவோர்  நிற்பரோ -----  நேசமொடு
நோய்ப்பட்டார்  என்றே  இரங்குவரோ சாவினது
வாய்ப்பட்டார்க் கியாமிரங்கு வோம் ,


யாப்பியல் குறிப்பு:
டார்க் கியாமி  இங்கு அலகு பெறாது.  பொதுவொரு நாலசையே என்பது காரிகை . நாலசை வருமென்பார் பண்டித நா.மு.வே . நாட்டார்.


ஒரு சீனக்கோவிலில் நடந்தது ஒரு கொலை   அது பற்றி:


https://sg.news.yahoo.com/case-of-dead-man-in-temple-reclassified-to-murder-094659836.html






சிவ,போதம் பா,5 உவமை நயம்

முன் இடுகை  http://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_56.html   இங்குக்  தொடர்கிறது . பாடல் மற்றும்   அதன் பொருள்  அவண் காண்க .  உவமை  நயம் மட்டும் இங்குக்  காண்போம்/


ஐந்தாம் பாடல் காந்தக் கல்லின் முன்னிருப்பினால் இரும்புத்  துண்டு அசைவு கொள்வதுபோல்,  சிவம் முன்னிருப்பதனால் உயிரர்கள் விடையங்களை அறியலாகின்றது என்று தெளிவுறுத்தியது.

இவ் வுவமையின் நயம்  அறிந்து இன்புறுகிறோம்.   இரும்பு காந்தத்தினால் ஈர்க்கப்படினும் இரும்பே அவ்வீர்ப்பினால் அசைவதன்றி  காந்தத்துக்கு எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

இறைவன் முன்னிற்பினால் உயிரர்கள் விடைங்களை அறிதலாற்றல்
பெற்று இயங்குதல் நடைபெறுகின்றதெனினும் இதனால் இறைவற்கு மாறுதல் அசைவு யாதும் உண்டாவதில்லை. அவன் யாண்டும் முன்னிருந்தபடியே இருக்கின்றான்.

எனவே காந்த உவமை மிக்கப் பொருத்தமாய இனிய உவமை என்பது உணரப்படும்,

உயிரர்கள் என்றும் சித்துருவாய் உள்ளனர். ஆனால் அவர்கள் மெய் வாய் முதலான இந்திரியங்கள் அல்லது பொறிகள் போலும் சடங்கள் அல்லர். இவ்விந்திரியங்கள் உயிரர்களின் உறுப்புகளாயிருந்து அறிபொருளை உள்வாங்கி உயிரர்கட்கு அறிவிக்கின்றன எனினும்
அவை சடப்பொருள்களே. அவை உயிரரை இல்லாமல் இயங்க வல்லன அல்ல. அவைகட்கு தன்னியக்கம் இல்லை.  உயிரனுக்கும் இறையின்றித் தன்னியக்கம் இலது, உயிரும் உறுப்புகளும் இறையை எதிரிட்டு இயங்குவனவல்ல. உயிர் இறைச்சார்பும் இந்திரியங்கள் உயிரன் சார்பும் உடைமை அறிக. சார்பின்மை இயக்கம் இவற்றுக்கில்லை.

will edit and review later


சனி, 13 பிப்ரவரி, 2016

நீயும் நிவாரணமும்

  நிவாரணம் என்ற பதத்தில்  நல்ல பொருள் பதிந்துள்ளது.  நீயும் நிவாரணமும் ஆய்வோம் .

தொடர்புடைய வெளிப்பொருள் உள்சென்று பதிவதனாலேயே அது பதம் ஆகிறது. இயற்கையில் எந்த ஒலிக்கும் பொருள் இல்லை. எல்லாம் ஒலிகளே.  ஓர் ஒலி புறப்பட்டவுடன் அதற்கு முன்னரே கொடுக்கப்பட்ட அல்லது ஏற்பட்டுள்ள ஒரு பொருளில்  நாம் அதனைப் புரிந்துகொள்கிறோம். ஆகவே பொருள் பதிவு பெற்ற பின்னரே அது பதமாகிறது. பதி + அம் = பதம். கட்டட வேலை நடக்கும் ஓரிடத்தில் ஒலிகள் பல எழுகின்றன.
இரும்பும் இரும்பும் மோதும் டம்டம் ஒலி கேட்கிறது. அதில் ஏதும்
நாம் உணரத்தக்க பொருள் இல்லை, டமாரம் அல்லது தமாரம் என்று
சொல்லை உண்டாக்கி  அதற்குப் பொருளை ஊட்டியவுடன் அந்த ஊட்டத்தில் அது பதமாகிறது, சொல் பொருளை அருந்துகிறது.  சொல்லுக்குப் பொருள் அருத்தப்படுகிறது.  (Feeding meaning into a word or term )  - .அருத்தமாகிறது. அர் என்பது ஒலி என்றும் பொருள் படும்,  ஆகையால் அர்த்தம் என்ற சொல் ஓர் இருபிறப்பி ஆம், ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் பொருந்திய சொல்,

நிவாரணம் ஆவது துன்பம் அல்லது இடர் நீங்குவது.   நீங்கு என்பதிலும்  நிவ் > நீவு > நீவுதல் என்பதிலும் நீ உள்ளது. நீவுதல் இரண்டாகப் பிரிப்பதுபோலும் எழுகைத் தடவல். நீட்டுதல் என்பதிலும் நீ இருக்கிறது.தொடங்கிய இடத்திலேயே முடங்கிவிட்டால் அது நீட்டல் அன்று. அப்பால் அகன்று விரித்தலே நீட்டமாகும். என்னிலிருந்து நீங்கி வேறான ஒருத்தி "நீ". ஆகவே ஒரு தாய் தன் பிள்ளையை "நீ" என்பது எத்துணைப் பொருத்தம்.நான் என் தோழியை நீ என்கையில், அவள் என்னில் இருந்து பிறந்து நீங்கியவள் அல்லள் எனினும் இடத்தால் விலகி நிற்பவள் ,  அதனால் முன்னிலையாக "நீ"  பொருந்துதல் ஒப்புமை கருதியாகும்.

நீ என்பது சீன மொழியிலும் உள்ளது.இதை நான் சில ஆண்டுகட்கு முன்பே  எழுதியிருந்தேன்,

இதை உணர்ந்தபின் நிவாரணம் என்ற சொற்குப் பொருள் சொல்வது
எளிதன்றோ?  அது கொம்பிலாக் குதிரை,

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?

=== இத்தலைப்புடைய நூலை கவி கா.மு. ஷெரீப் எழுதியுள்ளார். இது கலாம் பதிப்பகம். 6 இரண்டாவது பிரதான சாலை, சி ஐ டி காலனி மயிலாப்பூர் சென்னை 600 0024 என்ற முகவரியில் கிடைக்கிறது. தொ.பே. 044 2499 7373 ஆகும்.

ஒளியச்சு, வடிவழகு, வெளியீடு என்றெலாம் நூல் முன் பக்கங்களிலேயே காணப்படுகிறது. வெளியீட்டாளர்தம் தமிழ்ப்பற்றினை இது தெளியக் காட்டுகிறது.

இந்நூலாசிரியர் சிறந்த கவிஞர், சீறாவின் உரையாசிரியர், தமிழ் முழக்கம் என்னும் இதழாசிரியர், பல இனிய திரைப்பாடல்களை ஆக்கியவர் என்று இவர்தம் பெருமையை அடுக்கலாம். வாராய் வாராய் (மந்திரிகுமாரி), பாட்டும் நானே (திருவிளையாடல் ) என்று பல பாடல்களை எழுதியவர். எழுதிய பாடல் சில வேறு கவிஞர்களின்  பெயரில் வெளிவரவும்  வழிதந்தவர்.


இவர்தம் திரைப்பாடல்களில் "முடிவிலா மோன நிலையை நீ மலை முடிவில் காணுவாய் வாராய்' என்றும், "அலைகள் வந்து மோதியே ஆடியுன்றன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே." "உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே" என்றும் வரும் வரிகள் கேட்போரின் செவிகளை இன்புறுத்தும் சொல்லினழகும் கருதினாழமும் கொண்டவை. தெளிந்த நீரைப் போன்ற காதல் என்பது இவர்தம் ஒப்பீடு.  " பாடும் உனை  நான் (கடவுள்)  பாட வைத்தேனே .... என்னிடம் கதை சொல்ல  வந்தாயா?"  என்பது நகைச்சுவையுடன் இறையாற்றலைப் புலப்படுத்தும் வரிகள். .

இஸ்லாம் ஒரே கடவுட் கொள்கையுடைய மதம். இதில் மறுபேச்சுக்கு என்றும் இடமில்லை. இந்து மதத்திலும் ஒருகடவுட் கொள்கை, நூல்களில் பரக்கக் காணப்படுகிறது.வேதங்கள், உப நிடதங்கள், குறள் எனப்பல. பல் பெயரும் பல் வடிவுமும் ஒரு குறியதே என்பது இந்து மதம். இவற்றில் பல ஒற்றுமைகளை எடுத்துக்காட்டி ஆசிரியர் இம்மதங்கள் ஒன்றுக்கொன்று மாறுபடுவன அல்லவென்று நிறுவுகிறார். கொள்கைவிளக்கில் ஒருதன்மையன எனினும் கடைப்பிடியில் வேறுபடுவன என்பதைக் குறிக்கிறார். ஓர் உயர்கொள்கையை யாண்டும் நிலவுமாறும் மாறுபடுதல் சிறிதுமின்றியும் நிலை நிறுத்திய பெருமைத்து இஸ்லாமியமென்று இவர் கூறுகையில் அஃது மறுக்கொணா உண்மையென்றே ஒப்புவோம். நாள்தொறும் பயில்முறையில் இந்து மதம் வேறுபடினும் இந்துக்களும் முஸ்லீம்களும் காலகாலமாய் ஒன்றுபட்ட நாட்டுவாழ்வினரென்பதைச் சுட்டுகின்றார். தம் ஆட்சி நிற்கவைக்க, முஸ்லீம்கள் இந்துக் கோயில்களை இடித்தனரென்று பரப்புரைத்த 1   ஆங்கிலேயன் புனைகதையை ஆசிரியர் அம்பல மாக்கியுள்ளார்.


செந்தமிழ்க்  கவியின் இந் நூல் படிக்க இனியதே.  


அரிதின்  முயன்றார்  அழகுத் தமிழில் 
இனிதே புனைந்த கவிஷரீபின்  இன்னூல் 
பலரும் படித்துநயம் பண்பொடு பெற்று 
குழறு   படிதீர்வர் கூறு.   ---  Sivamala,


1  Much of the theories in history concocted during the British Raj by British historians and researchers seem intended to retain India in their possession.   Examples are the Aryan Invasion
Theory and Aryan Migration Theory. That Muslims were against Hinduism was a similar theory. In any case, the British were successful in dividing India and causing rifts. The author Sheriff pointed out that Muslim rulers including  Aurangzeb  had donated extensively even for the building of Hindu temples. Many Hindus were also in their employ.

Political assasinations

காட்டர சென்று கழறும் குலைவாட்சி
மீட்டுற  மக்கள் மிடையொழுங்கு சட்டமே
நின்று நிலைப்பட  நேராம்  செயலமைப்பு
என்றாகும் மன்னோ இனி.

குலைவாட்சி  - ( அராஜகம்.) ஆட்சிக் குலைவு
அல்லது குலைந்துவிட்ட ஆட்சி 
மிடை -  அணுகும்.

Bihar BJP vice-president killed, another shot dead


http://www.thehindu.com/todays-paper/bihar-bjp-vicepresident-killed-another-shot-dead/article8230535.ece



விக்ருதி விகுதி difference

விக்ருதி  என்ற  சமஸ்கிருதச் சொல் வேறு;   விகுதி  என்ற தமிழ்ச் சொல் வேறு   ஆகும்.

விக்ருதி என்பது பின்னொட்டுப் பெறாத திரிபு. எடுத்துக்காட்டாக:

திருஷ்டி   என்பது மூலச்சொல்  ( பிராகிருதி )  என்று வைத்துக்கொண்டால், திட்டி என்பது விக்ருதி ஆகும்.1  நாம்  தமிழில் சொல்லும் விகுதி இதுவன்று.  தமிழில் விகுதி என்பது  பின்னொட்டு அல்லது இறுதிநிலை. சொல்லிறுதியில்  நிற்பதே  விகுதி.

எனவே இவை வெவ்வேறு  சொற்கள்.

குறிப்புகள் 

1.  தெலுங்கு ஆசிரியன்மார்  இங்ஙனம் முடிவு செய்கிறார்கள்.
2  திருஷ்டி  என்பது தெருட்டி என்பதன் திரிபு.    தெருள்:  தெளிவு.
  

வியாழன், 11 பிப்ரவரி, 2016

ஓரம் என்ற சொல்

ஓரமென்பது  ஒரு பக்கத்தின் முடிவு அல்லது எல்லை.    இதை ஓர் என்ற சொல்லுடன் தொடர்புறுத்தவேண்டும்.  ஓர்  என்பது ஒரு பெயர்ச்சொல்  அல்லது எண்ணுப்பெயர் ,  ஓர்தல் என்ற வினைச்சொல் உண்டென்றாலும்  அது ஒருபக்க இறுதிக்குச் செல்வதைக் குறிக்கவில்லை.  இதிலிருந்து நாம் அறிவது யாதெனின்  ஒரு பெயரிலிருந்து விகுதி இணைந்து இன்னொரு பெயர் தோன்றுமென்பதுதான்,  விகுதி வினைச்சொல்லில்தான் இணையவேண்டுமென்பதில்லை என்று உணர்ந்துகொள்ளவேண்டும்,

ஓர் ​+ அம் >  ஓரம்   ஆகும்.
ஓர் + அல்  =  ஓரல்   (பொருள்:  ஒடுக்கம்).

ஒரு பக்கமாகப் போ என்றும் பேச்சில் உள்ளது.  ஓரம் கடந்தால் வீழ்ச்சி  ஏற்படலாம் ஆகையால்  வீழ்ச்சி ஏற்படுமுன் உள்ள இடமே பக்கத்தின் எல்லை  ஆகும்.

விகுதி பெறும் சொல்  உண்மையில்  நீண்டு விடுகின்றது ,   நீள்வது  மிகுதி . மிகுதி என்பது விகுதி என்று திரிந்து வழங்குகிறது.   ம -  வ  திரிபு  இது.

மிஞ்சுதல் -   விஞ்சுதல் .
மழித்தல்  -  வழி த்தல்
மிரட்டுதல் -  விரட்டுதல்
         விரட்டுதல் என்பதற்கு  அச்சுறுத்தல் என்றும் பொருளுண்டு.
மிருகம் :  இது விருகம் என்றும் வரும்.
மீதம் -   வீதம் ( விடப்பட்டது,  மிகுந்தது  என்ற பொருளில் )
(  மிகுதம் > மீதம் ,     பகுதி > பாதி எனல் போல.
பகு  பா,   மிகு > மீ.

இது  மிகுதி > விகுதி என்பதை உறுதி செய்கிறது,

விகற்பித்தல் என்பதும் மிகற்பித்தல்  (மிகல்+ பு+ இ+ தல் ) என்பதன் திரிபே.. மிகுதி என்பதும்  வேறுபடுதலே.  குறைதல் இன்னொரு வேறுபாடு.\\

சொற்கள் சிறப்புப் பொருளில் வழங்கிப்   பின் பொதுப்பொருள் அடைகை  இயல்பாம்.

இதன்மூலம்  ஓரம் என்பது விளக்கப்பட்டதுடன், தொடர்புடைய சிலவும் அறிந்து இன்புற்றோம்.


   






புதன், 10 பிப்ரவரி, 2016

சி-போதம் ஐந்தாம் பாடற் பொருளை......

முன்  இடுகை:http://sivamaalaa.blogspot.sg/2016/01/5.html


சிவஞான  போதம் ஐந்தாம் பாடற் பொருளை இப்போது அறிந்து மகிழ்வோம்.

விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு 
அளந்தறிந்து  அறியா  ஆங்கவை போல 
தாம் தம் உணர்வில் தமியருள் 
கா ந்தங் கண்ட பசாசத்து  அவையே ,

விளம்பிய  உள்ளத்து -  முன் சொன்ன  உடற்கண் உள்ளதாகிய உயிரால்;

உள்ள அத்து  = உள்ள அது = உள்ள (உயிர்)  காரணமாக;  அது என்பது  உயிரைச்  சுட்டியது.

இங்கு அது என்பது அத்து என்று  இரட்டித்து நின்றது.

மெய்வாய் கண் மூக்கு செவி  : ( இங்கு கூறிய )  ஐந்து புலன்களும்

அளந்து  -   அளவிட்டு;

அறிந்து  -  தெரிந்து  (கொள்ளுமென்றாலும்)

அறியா  -   உண்மையில் அவை தாமே எதையும் அறியவில்லை;

ஆங்கு அவை  போல  -    அந்த ஐம்புலன்களும் தாமே அறிதல் போலும் தோற்றத்தை உண்டாக்கி ;

தம்  தமி  அருள் -  தம்    தம்மில் ஒன்றாயிருக்கும்  சிவத்தின் அருளினால்;; (அறிதல்  நடைபெறுகின்றது )

தமி =   தமித்து இயங்கும்  சிவம்;  வேறோர்  ஆற்றலின் துணையின்றி இயங்கும் .  இறைவன்;

காந்தம் கண்ட பசாசத்து  =  காந்தத்தை  அணுகிய இரும்பு  போல  ஐம்புலன்களுக்கும்  அவ்வாற்றல்  வந்து  சேர்ந்து  இயக்கத்தையும்  உணர் ஆற்றலையும்  அளிக்கும் தன்மை  அதுவாகும்,

பசாசம் - இரும்பு.    அது,    பசாசம் > பசாசம் அத்து என்று இரட்டித்தது. 
  பசாசம்   அதுவாகும் என்றபடி 

.பசாசம்  -   இச்சொல் பைசாசம் @ என்றும்  வழங்கும்.  பச்சை இரும்பு என்ற வழக்கும்  உள்ளது.    இரும்பு வேலைக்காரனால்   அடித்துச் செய்யப்படாத   இரும்பை   இது  குறிக்கும்.    பசுமை +  அசம்   =  பசாசம் . மை விகுதி கெட்டு  சகரம்  நீண்டது.    அயம் ( இரும்பு ) >  அசம்     யகரம் - சகரமாய்த் திரிந்தது.   நேயம் >  நேசம்  போல.

@   பசாசம் -  பைசாசம்   இது  பசுந்தமிழ் > பைந்தமிழ்  போன்ற திரிபு.   (  பிசாசு - பைசாசம்  என்பது வேறு .    குழம்பலாகாது. ) 

காந்தம்   <   காந்தி  இழுத்தல் .   காந்துதல்  அதன் இழுப்பு  ஆற்றலைக் குறித்தது. தீயினால்  காந்துதலோடு  ஒப்பிட்டு ச்  சொல் அமைந்துள்ளது.
சோற்றுப்பானை  சூடேறிச்   சோறு   காந்தும்போது   உள்  அடியில்  சோறு  ஒட்டிக் கொள்கிறது,   இதையறிந்த தமிழர் ,   இழுக்கும் இரும்பிலும்  உட்சூடு 
இருக்குமென்று  எண்ணி  அதைக் காந்தம்  ( காந்து ​+ அம )  என்றனர்.  இரும்புத் துண்டுகளை  உரசினால்  சூடு ஏறும்;  கூடினால் பொறிகூடப் பறக்கும்.   ஊர்மக்கட்கும்    கருமகற்கும்  இது  போதுமே!

Some changes in the commentary text were noticed and corrected.  Anti-Virus facility warned that some add-ons are making unintended changes. 





Print staff can mess up

சாதிசமம்  அக்கொடுமை தானெண்ணார்  பெண்ணடிமை 
 ஆதிப் புதியவுல  கார்/

-----  பண்டித  வீ  சேகரம் பிள்ளை . of  Colombo,
         circa 1938 in Singapore
Editor of  Puthiya Ulagam a Tamil Monthly Magazine. Singapore.
printed at Star Press/

The Kural veNpaa appeared as signature verse in the front page of the Magazine.

பதிப்பிப்பவர்களுக்குப்  புரியாவிட்டால் அவர்கள் பாட்டைத் திருத்த முற்படுவதுண்டு. பதிப்பின்போது:

"சாதிசம  மக்கொடுமை "  என்று  சேர்த்து எழுதப்பட்டிருந்ததால்  அதை அவர்கள் :சாதிசம  யக்கொடுமை "   என்று  மாற்றினராம்.   ஆசிரியர் பிள்ளை அவர்கள்  பதிப்போரை  மிகவும் கடிந்துகொண்டாராம்.  பின் அது திருத்தம்பெற்று வெளியிடப்பட்டதென்ப .  நவசக்தி ஆசிரியர்  திரு வி  க  அவர்களுக்கும்  நூற்படி  ( copy )    அனுப்பப் பட்டதென்பர்.

நம் காலத்துக்கு முந்திய வரலாற்றில்  ஒரு துணுக்கு.



ஆயிரம்

பத்து என்ற சொல் பல் ( பல,  பன்மை)  என்னும் சொல்லினின்று தோன்றியது. ஒன்று முதலாக எண்ணக்கற்றுக்கொண்ட மாந்தர்க்குப்  பத்தை எட்டியவுடன் அது மிகப்பலவாகத் தோன்றியதே,  பல் என்பதன் அடிப்படையில் பத்தை எண்ணியதற்குக் காரணம் ஆகும்.  இன்று மனிதன் ஆயிரங்  கோடிகளாகக் கணக்கிடுகின்றான்.
ஐந்துக்கு அப்பால் பெரியதாவது  ஆறு ;  இது நதி என்றும் பொருள் படுகிறது.  ஐந்துக்கு அப்பால் செல்வது ஆறுபோல் நீள்வது என்று அயர்ந்தான்  அவன். அந்த நீட்சி குறிக்க  ஆறு என்றே  கூறினான்.  அதிலிருந்து மேல் இன்னொன்றைச் சேர்த்தால்  அது  ஓர் எழுச்சி ஆகிவிட்டது .....எழு > ஏழ் > ஏழு  என்று அதைக் குறித்தான்.

இங்ஙனமே  ஆயிரத்தை அடைந்த போது  அவன் எண்களை  எண்ணுவது  "ஆகிவிட்டது -   இறுதி  ஆகிவிட்டது  -  இனி ஏது பிறவென்ற நிலைக்கு வந்து
அதை  "ஆய்  + இரு +  அம்  -=  ஆயிரம்  என்று கூறினான்.  எண்ணிக்கை முடிவாகி இருக்கின்றது  என்று  கருதினான்.

இன்னும் சென்ற காலை   இனி முடியுமோ -   திரும்பவன்றோ வேண்டும் என்ற கவலை.  கோடு  என்றால் மலையுச்சி.   கோடு என்றால் வளைந்து திரும்புதல்.   இதை  அடிப்படையாக ஏற்று,   கோடு> கோடி  என்றான். கோடி என்பதோ  முடிவு என்றும் பொருள்.  தெருக்கோடி என்ற வழக்கை உன்னுக.

ஆயிருக்கும் ஆயிரமும்  கோடுயர்ந்த கோடியும் கண்டு மகிழ்ந்தோம்.


செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

வாரணம் ஆயிரம்

வாரணம்  ஆயிரம் சூழ வலம்வந்து 

என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள் .

வாரணம் என்றால் யானை.  ஆயிரம் ஆனைகள்  ( யானைகள்  என்றும் எழுதப்பெறும் )  வலம்  வந்தன என்றால்  இங்கு காட்டு யானைகளைக் குறிக்கவில்லை.

வாரணம் என்ற சொல்லே காட்டு யானைகளைக் குறிக்காது.  அந்த யானைகள் வலம்  வர உதவாதவை என்பது மட்டுமன்று;  வாரணம் என்ற சொல்லே அவற்றை  உட்படுத்தாது.

வாரணம் என்பது  வரையப்பெற்ற யானைகளைக் குறிக்கும் என்று அறியவேண்டும். வண்ணங்கள் தீட்டப்பெற்று அழகு படுத்தப்பட்ட யானைகளையே  பாடல் குறிக்கும்;  அதில் வந்த சொல் குறிக்கும்.
வரி வரியாகத் தீட்டப்பட்டு வலம் வருபவை அவை .

வரி + அண் + அம்  =  வாரணம் .
அல்லது:
வரை +  அண் + அம்  =  வாரணம் .

இதில்  வ என்ற குறில்  வா என்று நீண்டது.

எடுத்துக்காட்டுகள்

படி  + அம்  =  பாடம்.
உங்கள் கண்ணும்  கருத்தும் எழுதப்பட்டவற்றில் படிந்து  பின் நீங்கள்  அவற்றைத்  தெரிந்து  வாயிப்பதால்  ( வாசிப்பதால் )  (வாய்விட்டுப் படிப்பதால் )  அது  பாடம் ஆகின்றது.

இதன் முன் கருத்து படிதலே.   படித்தல் பிறவினை.

இப்புணர்ச்சியில்   (ட் + இ = டி ​ )  இகரம்  மறைகிறது.   இகரம்  கெட்டது  என்பர் இலக்கணியர்.  சுடு  > சூடு என்று பெயர் ஆவது போல் முதல் (எழுத்து) நீண்டு
ப > பா  ஆகிறது.

இன்னும் பல உதாரணம் காட்டலாம் என்றாலும்  இக்கருத்தே வலியுறும்.
உங்களுக்கு நேரமில்லை அன்றோ?

இப்படித்தான்  வரி +அணம்  என்பதிலும்  முதல்  (தலை) நீண்டு  இகரம் கெட்டு
வாரணம் என்றாகி,  அலங்கரிக்கப் பட்ட யானையைக் குறிக்கிறது,

வரை + அணம்  என்பதில் ஐ கெட்டு  முதல் நீண்டு புணர்ந்தது என்றாலும்  அதுவும்  இதே.

என்மட்டில் இவற்றுள் எதையும் நீங்கள்கொள்ளலாம். பெரிய வேறுபாடு ஏதுமில்லை.  விவாதம்  வேண்டியதில்லை.  ( வி(ரி) + வா (ய் ) + து ​+   அம் )  

அறிந்து இன்புறுவீர்.


--------------------------------------------------
அணம்  என்ற  இடைச்சொல் -   முன் இடுகைகளில் காண்க.
will edit

தீபாவளிப்பொருள். & தீபாவளி பொருள் difference

தமிழ் இலக்கணத்தின்படி சில சொற்புணர்ச்சிகளில் வலி மிகும்.  அப்படியென்றால்  வல்லின எழுத்து மிகுந்து வரும்.  எடுத்துக்காட்டு:

தீபாவளி + பொருள் =  தீபாவளிப்பொருள்.  

இதன் பொருள் என்னவென்றால்  தீபாவளிக்குப்  பயன்படும்  உணவு  சிற்றுண்டிகள் ,  மற்றும் ஆடை அலங்காரப் பொருள்கள் முதலானவை என்பதாகும் .

Oct 21, 2014, 
மேற்கண்ட 
மேற்கண்ட இடுகைத் தலைப்பில் தீபாவளி  பொருள் என்று  வந்திருப்பதால் வலி மிகவில்லை.  இந்தச் சொற்றொடரை விரித்தால்  தீபாவளி என்னும் சொல்லின் பொருள் என்று  போதரும்.   இதனை  தீபாவளி :  பொருள்  என்றோ   தீபாவளி -  பொருள்  என்றோ  நிறுத்தக் குறிகளுடன்  (punctuation )  எழுதலாம்.

இத்தொடர் சரியாகவே பதிவாகி இருப்பதால்  மகிழ்ச்சி யன்றி வேறில்லை.

தட்டச்சுப் பிழைகள்  காணப்படின்  சுட்டிக்காட்டுவீர்கள் என்று  நம்புகிறோம்.

நன்றி முன் உரித்தாகுக /


திரவியம்.

தமிழுரை  நாவினார்  சொற்களில் இடையிலோர் ளகர  ஒற்று இருப்பதைப்  பெரும்பாலும் விரும்புவதில்லை. எனினும்  "கேள்வி " என்பதிற் போல் சொற்களில் வருமேனும்    ஆங்கு  ஒருவாறு  "கேளிவி :"   என்றோ "கேளுவி " என்றோ  எளிதாக்கிக் கொள்வர்.   கேள்ப்பார்  என்றும் சொல்லாமல் கேட்பார் என்றும் சொல்லாமல்  "கேப்பார்"  என்று மாற்றி  நாவுக்கு நல்லது மேற்கொள்வர்.  . கேப்பார் என்பதில் வினைப்பகுதி யாது?    கே  என்பது மட்டுமோ??

தேடித் திரட்டிக் கொள்வதே  திரவியம்.  கடலிற் திரளும் முத்து  போன்றவையும்  திரவியமே.

திரள் >  திரள்வு  >  திரள்வி .>  திரள்வித்தல்.  (திரட்டுதல்).
திரள்வி + அம்  =   திரள்வியம்.>  திரவியம் .( ள்   கெட்டது , அதாவது  மறைந்தது )

வேறு வழிகளிலும்  விளக்கலாம்.   திர்  > திர  > திரள் ;  திர் > திர  > திரவியம்
எனினுமதே.
 நீர்த்துளிகள் ஒன்றாகி வருவது திரை.   திரைகடல் எனக்காண்க.

இறுதியில் ள்  வரும் சொற்களில்  அது  மறைவதைக் கண்டிருக்கிறீர்களா?

அவ்  ஆள் >   அவ்வாள் >   அவா   (  ஆவல் குறிக்கும் அவா வேறு ).

அவா பெரியவா;  அவா சொன்னா  சரிதான்,


ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

தாழ்ப்பாள்

தாழ்  என்ற சொல்லுக்குப்  பல பொருள் உண்டு .  இதனுடன் தொடர்புடைய தாழ்தல்,  தாழ்த்தல் என்ற வினைகளும் உள.  நாம் இங்கு கருதும் "தாழ் "  ஆங்கிலத்தில்   bolt, bar, latch; என்று  பொருள்தருவதாகும் .

இப்போதெல்லாம் கதவுகளில்  மேல்  நடு கீழ் என்று  முந்நிலைகளிலும்  தாழ்ப்பாள்கள்  பொருத்தப்படுகின்றன.   ஆனால் தாழ் என்பதன் அடிப்படைப் பொருள்  கீழ் என்பதே.  பண்டையர்   பெரும்பாலும் தாழ்ப்பாள்களைக் கதவின் கீழ் நிலையிலேயே அமைத்தனர் என்பது  தாழ்ப்பாள் என்ற சொல்லைச்  சற்று அணுகி ஆய்ந்தாலே எளிதிற் புலப்படுவதாகும் .

தாழிடுதல் என்ற  சொல்  bolting     என்பதற்கு நேரானதாகும் . தாழ் என்ற பகுதியும்  தாழ்ப்பாள் என்று பொருள்படும் .

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றார் திருவள்ளுவர்.  அடைக்கும் என்று மிகுத்துச்  சொன்னதால்  ( qualified )    தாழ் என்பதன் வேறு பொருண்மைகள்  சென்று பொருள்  மாறுபாடு செய்யாவென்க,

இனித் தாழ்ப்பாள் என்ற சொல்லைக் காண்போம்.

தாழ் >  தாழ்ப்பு > தாழ்ப்பு +ஆள்  =    தாழ்ப்பாள்  .

ஆள் என்பது  ஆட்சி   அல்லது  மேலாண்மை  குறிக்கிறது.  ஆங்கிலத்தில்  control என்பதற்கு  இஃது ஈடானது ஆகும்.  பு என்பது விகுதி .

பாளம் என்பது நீண்டு தடித்துத் தட்டையான பக்கங்களைக்  கொண்ட பொருளைக் குறிக்கும் ..
அடிப்படைக் கருத்து  நீட்சி  என்பதாகும்,  

பாள்   >   பாளம்.

ஒப்பு  நோக்குக :

பாள் > வாள்   ( இதுவும் அடிப்படை நீட்சிக் கருத்துத்தான் )   அரிவாள்  கொடுவாள்  முதலியன  .
வாள்> வாளம்  :  கடிவாளம் . Something long and is put in place. or "bites in"
தண்டவாளம் . அதாவது தண்டு நீட்சி .

எனவே  நீட்சி கருத்தும் பொதியப்பெற்று தாழ்ப்பாள் என்பது மிகு அழகாக அமைந்த சொல் ஆகும்.



கம்பன் எய்திய முடிவு

இராமனைப் பாடி இரும்புகழ் பெறினும்
கோமகள் விரும்பிய குறுமதிப் பதியால்
நாமகள் அருளும் நாடுகா  வலனின்
ஏமமும் இழந்தவன் உழந்தவன்  கம்பன்.

கிழங்கு விற்பளாய் வழங்கினும் நல்லருள்
வழங்கினள் அல்லள் அழுந்தூர்க் கம்பற்கு
அழுந்துயர் அவனைப் பற்றிடக்  குடியும்
அழிந்திட ஒழிந்தது நலந்திகழ் முடிவோ?

 .

பொருள்

பதி   அம்பிகாபதி 
நாடுகாவலன் -  அரசன் 
ஏமம் -  பாதுகாப்பு.
அழுந்தூர்  -  திருவழுந்தூர்/
கிழங்கு  விற்பள்  -  கலைமகள் .எடுத்த உரு .     

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

Another view of PM Najib's case

The money came into Najib's acc without he ever knowing it! Just like when you were in a public place and had left your basket on the ground, someone without your knowledge had slipped some drugs into it. You did not know. Later you carried the basket and the narcotics officer stops and arrests you for possession. Actus reus is there. No mens rea (guilty mind) my brothers. The account was operated by the bank in actual fact. Najib did not know what went into it. Najib had nominal control only. The bank had actual control. The bank received the money and made the documents and entered the sum into Najib account. When exactly was Najib informed by the Bank? What should Najib have done after the fact of this uninformed deposit? Can this case be argued from this line......? No mens rea! Discuss.......

ref comment: this AG had been appointed by a Prime Minister who had just unconstitutionally sacked the previous AG, which he had no right to do. - well the previous AG was also appointed by a prime minister. If unconstitutional, who and how according to the constitution can remove the AG? You may say the removal was morally wrong but it is legally right. Writer should have quoted the constitutional provisions for the reader..

by  apm,


Read:  http://www.sarawakreport.org/talkback/legal-establishment-calls-foul-on-najibs-regime/#commentarea

Legal Establishment Calls Foul On Najib's Regime.

If you have leg pain..........

கடினப் பட்டு  நடைமேற் கொண்டதால்
காலில் நல்ல வலி!
உடனே வெந்நீர் ஊற்றி உதவியும்
ஒழியா தயர்ந்த தொலி .

சொந்த மருந்துகள் செய்து தடவிட
சூழ் நிலை ஒப்பிட வில்லை .
சொந்தப் பாட்டியும் எந்தப் பாட்டியும்
சொல்லவும் அருகினில்  இல்லை .

ஆங்கில மருத்துவர் கண்டேன் அன்புடன்
அவரென் கால்களைத் தடவி
வீங்கிட வில்லை வீணிலேன் கவலை
விந்தைக் களிம்பிது  வென்றார்.

செருப்பினில்  அழுக்கென்று சொல்லியும் கைபடச்
செம்மகன் கழற்றி  விட்டும் ,
பொறுப்புடன்  பிடித்து வழித்து  வலிதனைப்
போக்கினார் முடிந்த மட்டும்

அப்புறம் தந்த களிம்பொன்று  அதனையே...............
அன்பர்கள் நீவிர்  கேட்பீர்.
இப்பொழு ததன்பெயர் இங்குரைப்பேன் தேய்க்க
எவ்வலிக்  கினியும்  தோற்பீர். ?

Name of Gel:  Fastum.
This is not an ad.
Any other  pl share.

  

புதன், 3 பிப்ரவரி, 2016

இலக்கிய மொழியும் பேச்சு மொழியும்

தமிழர்கள் தங்கள் மொழியை எப்போதும் திருத்தமாகப் பேசியவர்கள் அல்லர் .
அவர்கள் பேச்சு மொழியில்  பல்வேறு வகைகளில் திரித்துச் சொற்களை வழங்கியதால் பல  கிளைமொழிகள் தோன்றி, அவற்றில் பல கிளைமொழிகளாகவே   தொடர்ந்தன.  சில  உயர்த்தம் பெற்றுத் தனிமொழிகள்  ஆய்விட்டன.   வெளி நாட்டிலிருந்து  நாவலந் தீவினுள் வந்து வழங்கிய  மேலைச் சொற்களையும்  உள் நாட்டில் வழங்கிய பல பாகத மற்றும் தமிழ்த்  திரிபுகளையும் ஏற்றுச்   சமஸ்கிருதமும்  நன்கு புனையப்பெற்றது.  திராவிட  ஒலி யமைப்பை  அடிப்படையாக வைத்தே  அது உருப்பெற்றது. வெளி நாட்டினர் ஈண்டு வந்தேறி வாழ்ந்தனர் எனினும் அவர்கள்  எல்லோரும் ஓரினத்தினர் என்பதற்கோ  ஆரியர் என்பதற்கோ  ஆதாரம் தேவைப் படுகிறது.  ஆரியர் வருகை என்பது ஒரு தெரிவியல்   theory  என்ற நிலையிலேயே தொடர்கிறது.

நாம் சொற்கள்ளை  எப்படியெல்லாம் திரித்து வழங்குறோம் ......

பண்ணிகிட்டிருக்கேன்   -    பண்ணிக் கொண்டிருக்கிறேன்.!

இருக்கிறேன் >  இருக்  க் + இ     ற்   + ஏ + ன்.>    இருக்கேன் ,

இ, மற்றும் ற்  என்ற ஈரொலிகள் தொலைந்தன,    க்  +   ஏ =  கே  ஆனது. 

இலக்கிய இலக்கண மொழியும்  பேச்சு மொழியும் ஒருங்கே வழங்குவதால் 
இருக்கிறேன்  இருக்கேன் என்று திரிதலை நாம் முன்வைக்குமிடத்து  அதனை ஐயுறுவாரில்லை  என்றுணர்க . இலக்கிய மொழி ஈண்டு இல்லையெனில் 
இதனை உணர்த்துவது  பெரும்பாடாகவன்றோ  இருக்கும் ?




வாலை நறுக்கென்று.....

பிள்ளைக்கு மென்குட்டிப்  பூனையுடன் ஓடியாடி
துள்ளிக் குதித்திடத் தூண்டிடும் வெள்ளையுளம்  ;

சொல்லிக் கொடுப்பவர்க் குள்ளிலோர் நல்லாசை
அள்ளிப் படிப்பதில் ஆகிடணும் மேலெனவே.

கவர்ச்சிப் பொருள்களுடன் கல்விக்கோ போட்டி!
தவற்றை அறியாத் தடுமாற்ற   மென்றே

உவர்ப்பாய் வரும்பேச்சு "ஒழுங்காய்ப் படித்தே
உயர்ந்திடப் புத்தியுனக் கில்லை!"யென  வைதிட்டார்.

பாவம் சிறுபிள்ளை என்று கருதி அவன்
நோவ ஒறுத்திடா நுட்பநெறி ஆரறிவார்

கோலை எடுத்தால் குரங்குமே  ஆடிவிடும்
வாலை நறுக்கென்று வாதமும்  வந்திடுமே!!

will edit.. A spy programme attached to our browsers by third party to read and edit have been removed successfully.

வெள்ளி, 29 ஜனவரி, 2016

அட்சய பாத்திரம்

அட்சயப்  பாத்திரம் என்பது ஓர்  அழகான பெயர்.  இது அள்ள அள்ளக்  குறையாது வழங்கிக்  கொண்டிருக்கும் ஓர் ஏனத்தைக்  (  utensil  ) குறிக்கும்.  பழைய  மணிமேகலைப் படத்தில்  " அட்சயப் பாத்திராமி தாருக்குச் சொந்தமே?   ஆனந்தமே" என்று  கே.பி. சுந்தராம்பாள் பாடுவார்.

இந்தச் சொல்லை ஆய்வு செய்வோம்.

எல்லோரும் வந்து உணவை அள்ளிக்கொண்டு போகும் ஐயப் பாத்திரம்.

ஐயம் = பிச்சை .

இப்போது மறுபுனைவில் ஈடுபடுவோம்,

அள்ளு + ஐய   பாத்திரம்,

அள்  சு  ஐய  பாத்திரம்.

அட்சு  ஐய  =  அட்சைய  பாத்திரம்.

> அட்சய பாத்திரம். (  சை > ச    )  ஐகாரக் குறுக்கம்)

அள்  என்பது  வினைப் பகுதி.     சு  ஒரு விகுதி 


அள் என்பது  அள்ளு என்று உகரத்தில் முடிகிறது. உ  ஒரு சாரியை. வினையாக்க விகுதி .எனலும் ஆம். எது என்ற ஆய்வு பின் ..

அள்ளையப் பாத்திரம் என்றால்  அள்ளு ஐயப் பாத்திரம் என்று  தமிழ்ப் பேச்சிலேயே தங்கிவிடும். வேலை கிட்டி வெளி நாடு செல்வோரை நாம் தடுக்கிறோமா? அதுபோலத்தான்.


இந்தச் சொற்புனைவில்  சிறிய மாற்றத்தையே செய்துள்ளனர்.

அள்ளு(தல் )>   அள்+ ள்​ +உ  >   அள் + ( ள் + ச்  + உ )  >  அள்சு  > அட்சு . இதில் ஒரு 
ச்  மட்டுமே நுழைக்கப்பட்டது.   மற்றவை இயல்பாக நிகழும் திரிபுகள்

ஒரே  ஒரு சகர ஒற்றைப் போட்டுப்  பெரிய மாற்றமாக வெளிப்பட்ட சொல் இதுவாகும். இதைப் புனைந்த புலவர் மிக்கக் கெட்டிக்காரர். இதுபோன்று புதுப்புனைவுகள் மேற்கொள்ளத்  திறன்பெறுதல் நன்று. 

இப்படியும் காட்டலாம்:

அள்ளு  ஐயப்  பாத்திரம்>
அள் சையப்  பாத்திரம் >
அட்சையப் பாத்திரம் >
அட்சயப் பாத்திரம்.

இதில் அய்ய அல்லது ஐய என்பது  சை ய  என்று ஆனது
அகர வருக்க -  சகர வருக்கத் திரிபு.
இன்னோர் உதாரணம்:  அமணர் > சமணர்.

திங்கள், 25 ஜனவரி, 2016

Tolkappiyam is not dependent on other languages

Tolkappiyam is not dependent on Sanskrit sources and a work that demanded not only vast knowledge but also a lot of thinking from its author, according to Alexander Dubyanskiy, veteran Tamil scholar from Moscow State University.


Read more:

http://www.thehindu.com/news/national/tamil-nadu/tolkappiyam-is-not-dependent-on-sanskrit-sources-tamil-scholar/article489121.ece



Also on Tolkappiyam


Sivamala: Tolkappiyam timeline




ஞாயிறு, 24 ஜனவரி, 2016

றகரம் ஷகரமாய் மாற்றப்படும்,

தமிழுக்கு ற என்னும் எழுத்து சிறப்பானது. இதுபோலவே, அயல்மொழிகட்கு ஷ, ஜ, ஸ என்பவை சிறப்பனவை. சிறப்பு என்றால் இவ்வெழுத்துக்கள் அம்மொழிக்காரர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்தவை. மற்றபடி, இவை எல்லாமும் மனித நாவினின்று வழிந்து பறந்து வெளிவந்து கேட்போனின் செவிப்பறைகளில் மோதுபவைதாம் . இவ்விடையத்தில் யாவும் ஒப்பனவாம்.

இப்போது பாருங்கள், றகரத்துக்குப் பதில் ஷகரம் இட்டுச் சொல்லை உருமாற்றிவிடலாம்.   படிப்போன்  ‍‍

நூறாண்டு புழங்கினும் மாறின எழுத்துகள்
கூறாது விடிலோ கொஞ்சமும் அறியான்.

ஆகையால்,  இப்போது ஒரு பயிற்சியில் ஈடுபடுவோம்.


சிறு >  சிஸு

சிறியர்  > சிஷ்ய‌
பெரியவரான குருவிடம், சிறியவர்களான சிஷ்யர்கள் பாடங்கேட்பர்,
வயது ஆகியிருந்தாலும் அறியார் குருவிற்குச் சிறியவர்தான்.

சிறுமைக்குள் அறிவுக் குறுக்கமும் அகவைச் சிறுமையும் அடங்குவன.

இறைவர் > இஷ்வர் > ஈஷ்வர். அல்லது  ஈஸ்வர்   .இகர நீட்சித் திரிபு. (முதனிலை நீண்டு நடு திரிதல்)

ஒரு சொல்லை மாற்றுகையில் ஒலிக்க எடுப்பாகவும் எளிமையாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும், இல்லையேல் பயன்படுத்துவோரிடம் எடுபாடாது கெடும்,

புள் >  புட்சி  >பட்சி.   உகர அகரத் திரிபும்  ஓர் விகுதி பெறுதலும்.
கதை  > கிதை  > கீதை.  (  அகர   ஈகாரத்  திரிபு. )  கிதை  என்றே விட்டுவிட்டால்
இன்னா ஒசைத்தாகிவிடும்.  (அதாவது  ஒலி  நயக்  கேடாம் )

will edit 

அம்மாவாசையும் அயல்சேவையும்

அம் என்றால் அழகு. இந்த அடிச் சொல்லுக்கும் அம்மா என்ற தாய் குறிக்கின்ற சொல்லுக்கும்கூட ஒரு தொடர்பு இருக்கின்றது. நாம் தொட்டிலில் கிடக்கும்போது முதன்முதல் நாம் கண்ட அழகு அம்மாதான். அம்மை அழகு.

மா என்பது கரிய நிறம் குறிக்கும் சொல். சற்றுக் குறைந்த கறுப்பினை மா நிறம் என்பதுண்டு. மா>  மால். கரிய மால் உந்தியில் வந்தோன் என்று ஔவையாரின் பாடலொன்றில் வரும் தொடரை நினைவு கூர்க. திருமால் கரியோன், கறுப்புசாமி எனவும் படுவார்.

வாய் என்றால் இடம் என்று பொருள்.  இதில் ஓர் ஐ விகுதி சேர்த்தால் வாயை என்று வரும்.  யகரம் சகரமாக உரிய இடங்களில் வருதலை என் பழைய இடுகைகளில் கண்டு மகிழலாம்.  மறதி என்றால் ஒன்றிரண்டு காட்டலாம்,  வாயில்> வாசல்.  நேயம் >  நேசம், தேயம் > தேசம்.  தோயை > தோசை.  நீருடன் கலந்த அல்லது தோய்ந்த மாவினால்  சுடப்படுவது.  ஆகவே வாயை என்பது வாசை ஆகிவிடும். இதிலேதும் வியப்பில்லை/

இப்போது அமாவாசை என்ற சொல் காண்போம்.

அழகிய கருமை கலந்த இடமாகிவிடுகிறது  அம்மாவாசை தினத்தன்று
நம் ஆகாயம், ஆகாயமே ஆகாசமன்றோ?

அமாவாசையின் போது  அம் மா வாயை நம் வானம். அம் = அழகிய;  மா = கருப்பான;   வாய்  =  இடம்;  ஐ =  விகுதி .

இது பின் திரிந்தது.  அம்மாவாசை >  அமாவாசை. மகரம் கெட்ட இடைக்குறை.

அம்மாவாசை தமிழ் வா(ய் )த்தியார்களுக்குப்1 பிடிக்காது,  அம்மா+ஆசை யா? சீ  அமாவாசை என்று எழுது என்று திருத்த,  அமாவாசை ஆகி, பின் அயல்சேவையும் செய்யத்தொடங்கிகிவிட்ட சொல்லை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சிதானே  ( 1, வாய்த்தியார்  வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பார் ,  உப அத்தியாயி  வேறு. என்னே குழப்பம் கற்பிப்போருக்கு ).

தைப்பூசத்தில் மகிழ்வு பொங்குக.

will edit

சனி, 23 ஜனவரி, 2016

"உபயம்"

கோயில்களில் பயின்று வழங்கும் "உபயம்"  என்ற சொல்லினை இப்போது  காண்போம்.

கம்ப இராமாயணத்தில் உபயம், என்ற சொல் ". உவைய முறும் உலகின் "(கம்பரா. நிகும். 156). என்று வந்துள்ளதாக அறிஞர் கருதுவர் . உவையம் என்பதே உபயம் என்றாயிற்று என்பது கருத்து.
அ , இ  உ  என்ற முச்சுட்டுகளில்  உ  என்பது  முன்னிற்றல்  குறிப்பது.

உபயம் என்பது ஒரு வரியையும் குறிப்பதால்,  உபயம்  முன் வைக்கப்படும்  கோயிலுக்கான தொகையைக்   குறித்தது என்பது சரியான கருத்து ஆகும் .

உ >  உவ .
உவ >   உவன்.     ஒ.நோ :  அ > அவன் .
உவ > உவச்சன் =  (முன் நின்று ஓதுபவன் ).
உவ > உவை .
உவை > உவையம் > உபயம்.

முன் நிற்புக்   கருத்துடைய  சுட்டடிச் சொற்கள் இவை.

உவ என்பதில்  வ்  வகர உடம்படு மெய் என்பதுமொன்று. எனின்  உவச்சன் என்பது  உ ​+ அச்சன் =  உவச்சன்  எனல்வேண்டும்,   இங்கு அச்சன் -  தந்தை என்று  கொள்க,  ஓதுவாரைத் தந்தை எனல் பொருத்தமே.   ஐ > ஐயர் எனல்போல.

பயம் என்பது பயன் எனினும் அஃது சரியானதே.  திறம் >  திறன்  என்பதில்  மகர ஒற்று  னகர ஒற்றாயிற்று ,  உ+ பயம் =  உபயம் ,   சொல்லமைப்புகளில்  உப்பயம் என்று வாராமல் உபயம் என்றே இயல்பாக வருதல் முறையே. அன்றி உப்பயம்  உபயம் என  இடைக்குறைந்து வருதலும் எடுத்துக் காட்டலாம். பொருள்  :  கோயிற்   பயனுக்கு முன் வைத்த தொகை என்பதே
இங்கும் பொருள்.

Notes:

Payattal can also mean yielding a certain result,  Vizumiyatu payattal.   is an example.  u+payam thus can mean to yield beforehand,  that is,  setting aside from your yield from fields a portion for tax payment for the king.


வியாழன், 21 ஜனவரி, 2016

கணினிச் சொற்கள்

இப்போது பயன்பாட்டிலுள்ள் கணினி /இனையம் தொடர்பான சொற்கள் சில:

குறுவட்டு =  CD Player
தரவிறக்கம் = download
முகப்புப் பக்கம் = desk top
குறும்படம் -  icon
சொடுக்கு =  click. 

சிவஞான போதம் பாடல் 5

உயிர் என்பது ஒரு பழந்தமிழ்ப் பதம்.  இது சீவன் என்றும் வழங்கி வருவதாகும். உயிருடையோன் அல்லது உயிரன்,  சீவன் என்றும் கு
றிக்கப்பெறுவதுண்டு. உயிரனுக்கு ஆன்மா உண்டென்பதையும்  அவ் ஆன்மா பேரான்மாவைப் போன்ற ஆனால் அதனின் சிறிதாகிய ஒரு துண்டு என்பதும் கூறப்பட்டது.

இவ் ஆன்மா உடலில் வதியுங்கால் எவ்வாறு பேரான்மாவாகிய சிவனைக் கண்டுகொள்கிறது என்பதே ஐந்தாவது சிவஞானப் பாடல் எழுப்பும் கேள்வியாகும்,  அப் பேரான்மா கட்புலனுக்கு தெரிதலுறாமல் மறைந்தன்றோ உள்ளது?   அப்படி மறைவாயிருத்தலும் அப் பேரான்மாவின் இயல்புகளில் ஒன்றாயிற்றே!

சிவமோ  எங்கும் முழு நிறைவாகி இலங்குகின்றது. இம் முழு நிறைவைத்தான் பரிபூரணம் என்கின்றனர்.  ஆனால்  இதை இயல்பாக  ஓர் உயிரனின் ஆன்மா உணர்ந்துகொள்ள முடிவதில்லை.  வழிபாட்டுத் தலங்களில்  தெய்வச் சிலைகள் நிறுவப்படுதல் மூலமாக  கடவுளிருத்தல்  சிறப்பாக எடுத்துரைக்கப்படுகிறது, நிறுவுபொருட்களால்  சொல்லுதலும்
பதிவிசை மூலம் சொல்லுதலும் எனச் சொல்லுதல் பலவகை.  உணர்த்த உணர்வது ஆன்மாவின் இயல்பு ஆகும் .

கண்  வாய் மூக்கு  செவி மெய் முதலிய கருவிகள்  (  இந்திரியங்கள் ) தாமே எதையும் உணரமுடிவதில்லை. அவைகட்கு சீவன் அல்லது உயிரன்  ஒருவன் வேண்டும்.  அவனுடன் ஒன்று கூடி நின்று அவை நிகழ்வுகளை அறிகின்றன,
இந்த "நிற்பியைபு"  இன்றியமையாதது  ஆகும் . இதுவே  சந்நிதானம் எனப்படும். உயிரனும் தானே எதையும் உணர முடிவதில்லை.  முழு நிறைவாயுள்ள  சிவம் அல்லது  இறைமை  உயிரனைச் சூழ நிலவுகின்றது. அதனால் உயிரனும் செயல் பட்டு உணர்ந்துகொள்பவனாகிறான்.   இது விசேட சன்னிதானம் ஆவதாம் . சிவமில்லையேல்  உயிரன் சடம் .  உயிரன் இல்லையேல் ஐந்து இந்திரியங்களும் சடம்  ஆவனவாம்.

இதனை ஐந்தாம் பாடல் உணர்த்தும்.  பாடலை அடுத்துக் காண்போம்.

விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு 
அளந்தறிந்து  அறியா  ஆங்கவை போல 
தாம் தம் உணர்வில் தமியருள் 
கா ந்தங் கண்ட பசாசத்து  அவையே ,

விளக்கம் அடுத்து  \வரும்  இடுகையில். 

>
















ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டு

மாடு பிடிக்கின்ற  மாவலியோர் சட்டத்தின்
ஏடு படித்துயர்   ஏற்றறிஞர் ‍‍‍=== கூடிமன்றில்
போடும் தடையாற்  புகவில்லை கட்டுக்குள்! 1
நாடும் அவர்பக்கல் நன்று.

வீர விளையாட்டில் 2புக்குதம் தோள்களின்
வீறு வெளிக்காட்டும் வேணவா‍‍  ‍‍==  ஊறுபடச்
சீறு செழுங்காளை சேர்ந்து முடங்கிவிட‌க்
கூறு படலான தே


ஏறு தழுவும் எழுச்சி இளைஞர்மான்3
தேறு நிலைவருக தெள்ளிய ‍‍‍=== நீரினைப்போல்!
நேரும்  துயரனைத்தும் நீங்குக இல்லங்கள்
தோறுமே பொங்குநல் நாள்

அடிக்குறிப்புகள் :

1. கட்டு = ஜல்லிக்கட்டு. : ஜல் ஜல் என்று மணியொலியுடன் பாய்ந்து வரும்   மாடுகளை அடக்கிக் கட்டுதல்.  இந்த ஜல் ஓர்  ஒலிக்குறிப்பு.  ஜல் என்பது  குறைவுபட நின்ற  முதற்குறை . என்று இலக்கணம் உரைக்க .
2 புக்கு = புகுந்து 
3 மான் = மனம்,   மன்+அம் = மனம்; மன்>மான்,  முதனிலை நீண்ட பெயர்ச்சொல்
ஜல் ​+ இக்கட்டு =  ஜல்லிக்கட்டு;   ஜல் என்ற ஒலியுடன்  விரையும் மாடுகளால்  இக்கட்டு=  அதாவது  இடர் என்றும்  வேறு பொருளும் தரும் .. 

 will edit.  

சனி, 16 ஜனவரி, 2016

பொன்னாள்தைப் பொங்கலே greetings


போற்றும் திருவுடைய 
பொன்னாள்தைப் பொங்கலே
ஆற்றும் செயலனைத்தும் சீர்மிக்கு---
நேற்றினும்
இன்று சிறந்தினி 
நாளையும் புத்தொளியால்
நின்று நிலைபெறுக 
நேர்.

நேர் -  நேர்க;  நடைபெறுக. (ஏவல் வினை )
சீர்மிக்கு  =  சீர் மிகுந்து 

anti biotics

நுண்ணுயிர்க் கொல்லி மருந்தின்றேல் நோய்ப்பட்டுப்
பண்ணழிந்து வாழ்வும் பழுதாகும் === விண்ணிற்
பறந்துயர் எண்ணங்கள் பாழ்மிகும்  வேறு
சிறந்துயர் செல்வழி இல்.

வியாழன், 14 ஜனவரி, 2016

வேண்டவில்லை நீங்கள் தடை தாண்டிவந்தீர்!

விட்டுவிட்டுப்  பெய்தமழை நீர்த்துளிகாள்
எனைத் தொட்டுதொட்டு நீங்கி நின்ற இன்பக்கைகாள்.

வேண்டவில்லை நீங்கள் தடை தாண்டிவந்தீர்!  நானும்
தூண்டவில்லை  நீங்கள் துணிந்து வந்தீர்.

மலர்களைத் தளிர்களை  மரங்களின் இலைகளை
உலர்வறத் தழுவினும் எமக்கு நீரே.

உங்களின் பரத்தைமை வெறுக்கவில்லை
உங்கள் தொடர்பினை நறுக்கவில்லை

தீண்டுங்கள் எனைவந்து மீண்டுமீண்டும்;
தென்றலுடன் கூடி உலவுவீரோ
என்றனை மறவாது நெருங்கிவந்தே
ஒன்றென இயைவதில் இன்புகண்டேன்.

செவ்வாய், 12 ஜனவரி, 2016

பொறுக்கிக் கடைத்தெரு - இறுதியாக ஒரு,,,,,,, பார்த்துவிடுங்கள்.

பழசான காரணத்தால். பழுதினால்
ஓடாத எந்திரமும் பாடாத பாட்டுப்பெட்டியும்
ஓடவைக்கும் உதிரிப் பொருட்களைத்
தேடிக் கைவரச் செய்யும் இடமொன்று
சிங்கப்பூரில் உள்ளதென்றால் சிரிப்பீரோ கேட்டு?

பொறுக்கிக் கடை என்றும் புகல்வதுண்டு!
திருடர் சந்தை என்பர் சீன நன்மக்களும்.

வீசி வீணாக்குதல் கேடு
கெட்டுவிட்ட உட்பொருட்கு
அங்கு போய்ப் பெறுவீர்  ஈடு.

விசிறியின் சுற்றுத் தட்டு உடைந்தால்
அசர வேண்டாமே  அங்கு கிடைக்குமே.

புகழ்ப்பெற்ற பொறுக்கிக் கடைத்தெரு
பல்லாண்டு பழமை வாய்ந்த நல்லிடம்.
வீதிகளிலும் சந்துகளிலும் பொருட்கள் குவியல்.

வளர்ச்சிப் பணிகளின் நிறைவுக்காக‌
வரைந்து வைத்த திட்டங்களின்படி
இக்கடைத் தெருக்களும் சந்துகளும் இனி
இல்லாமற் போய்விடும்.
இறுதியாக ஒருமுறை சென்று பார்த்துவிடுங்கள்.
காலம் தாழ்த்தினால் அப்புறம்
படங்களில்தாம் பார்க்கலாம்,

Click here for more information:

https://sg.news.yahoo.com/6-singapore-landmarks-you-will-not-see-in-2017-003745950.html

From typewriters to a microscope set, you can find it all at this gem of a flea market. But the place, which is also known as Thieves’ Market to some, is running out of time as Singapore moves ahead,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

There is similar but a smaller place  in Johor Bahru near City Square but not for ladies.  Thieves and pickpockets too many,,,,,

திங்கள், 11 ஜனவரி, 2016

bacteria சின்கோலிகள்



ஞால மனைத்துமே  தாமே   இயைந்துள்ள
கோலம் கொழிக்கும்சின்  கோலிகளே  --- ஏலா
இடரும் தருவன ;  இன்பமும் சேர்க்கும்
சுடருமோ  இல்லையேல் வாழ்வு .  




சின்கோலி  =  bacterium;





மைக்ரோபு  நுண்புகள்

சனி, 9 ஜனவரி, 2016

கடைக்கண் இரங்கும் உளம்

முடக்கம் உறுவது முட்டுப் படுதலால் அஃதொழிக‌
அடக்கம் அடைதல் பணிவெனில் யாண்டும் அதுவளர்க‌
இடுக்கண் விளைப்பவர் இல்லா உலகெனில் பற்றிடுக‌
கடைக்கண் இரங்கும் உளம்பெறும் மாந்தர் வலம்பெறவே

வியாழன், 7 ஜனவரி, 2016

மனித வால்

நாய்க்கிருக்கும் நன்றியதோ யார்க்கும் இல்லை;
நரிக்கிருக்கும் பரிக்கிருக்கும் மாந்தர்க் கில்லை
நாய்க்கிருக்கும் வாலாட்டி  நன்றி சொல்லும்;
நரர்களுக்கு நன்றியில்லை; வாலும்  இல்லை .
பேய்க்கிறுக்கு மனிதன்முன் வாலும்  உள்ளான்;
பிழைபட்டு நன்றிகொன்றான் வாலை  விட்டான் .
நோய்க்கிறுக்கும் நுண்கிறுக்கும் வாய்க்கப் பெற்று
நுழைபெறுவான் வல்லரசுக் கழகத் துள்ளே.

According to anthropology,  humans had tails before.


அலைந்தலைந்து குலைந்திடுமோர் துன்பம்

போர்த் தந்தி    ரம்என்றால் புரிவோன்    செய்யும்
புதுத்தன்தி      றம்அன்றிப்      பிறிதொன் றுண்டோ
பார்த்தயர்ந்தான்  தன்விழியை  அவித்து விட்டுப்
பரதேயத் துள்புகுந்தான்  அலைக்க    ழிப்பான்.
ஊர்ச்சுவரே தாண்டிடுவோர்  ஒன்றி ரண்டே
உறுதி இது வென்றாலும் பட்ட நாட்டான்
ஆர்த்தெழுந்தான் ஆயிரம்பேர் தம்மைக் கூட்டி
அலைந்தலைந்து குலைந்திடுமோர் துன்பம் கொள்வான்.

பட்ட - அனுபவித்த .

The Pak strategy is quite simple. Send some crack shooters to inflict injury  in some important place or installation. Those are spotted and neutralized.  After that, send a few more to walk around in certain places .....They are sighted, but later disappeared. In pursuit of them, the affected country has to mobilize a large number of the forces for search operation.

The purpose for Pak is achieved......The affected country, their people and their forces --  all would be unduly burdened and their national and original focus shattered.

On their own, every country is suffering many diversions to their national focus,  many of them domestic in nature.   The terrorists are creating extra diversions.

Countries are no different from individuals.  If your neighbour is jealous of you, he will start creating some kind of "diversion" for you.

Each longs to see the other's downfall or at least fallback.
























புதன், 6 ஜனவரி, 2016

அணிகுண்டும் தனித் திறனும்.

அணிகுண்டு  என்பதை நீங்கள் கேள்விப் பட்டிருக்கமாட்டீர்கள்.  குண்டு என்பது வெடிக்கும் ஆதலால்  அணிதற்கு உரித்தானதன்று .  ஆயினும்  தீவிர வாதிகள் எனப்படுவோர் அணிந்துகொண்டு  அடுத்த நாட்டிற்கோ அல்லது பிற இடத்துக்கோ சென்று குண்டை வெடிக்கச் செய்வதனால்  அதை  அணிகுண்டு என்று சொல்லலாம்.   அணுகுண்டு போடும் சண்டைக்குப் பதிலாக  அணிகுண்டு கொண்டு செல்லும் போர்த் தந்திரம் இக்காலத்தில் நடப்பில் அதிகரித்து வருகின்றது.   .அறிவுடையோர்  கவலைப்படுதற்குரியது   இதுவாகும் .   குண்டு புழங்குவோர் சிலர் இதுபோது  உலகப்புகழ்  எய்திவிட்டனர். நடிப்பினால் புகழ் பெற்றோரை விஞ்சி விட்டனர் வெடிப்பினால் புகழ் பெற்ற ஒசாமா போன்றவர்கள்.

உடம்பில் கட்டிக்கொள்ளும் குண்டுக்குத்   தமிழில் வேறு பெயர்களும் வைப்பதற்கு நல்ல வசதிகள் மொழியில் உள்ளன .  உடுகுண்டு; வேய்குண்டு ;
புனைகுண்டு ;  கட்டுக்குண்டு ;  செருகு குண்டு ;  இடுப்புக்குண்டு; இடுபடை  என்றெல்லாம் சிந்தித்து  இவற்றுள் பொருத்தமானது என்று  படும் சொல்லை  மேற்கொள்ளலாம். இவைகள் உங்கள் மேலான சிந்தனைக்கு ஆம் .
உடம்பில் இடைவாரில் குண்டு வைத்துக்கொண்டு வந்து இறந்துவிட்டவனை வெடிகுண்டு வல்லுநர்  ஆய்வு செய்து  அவனுடம்பிலிருந்து  அதையகற்றும் பணியில்  அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ,  அது  எதிர்பாராத விதமாக வெடித்து  அவர் மாண்ட செய்தி  அண்மையில்  நாமறிந்தது ஆகும்.   இது  இந்தியா -  பஞ்சாப்  பதங்கோடு  வானவூர்தித் தளத்தில் நடந்தது.   அவ்  வல்லு நரின் குடும்பத்துக்கு நம் இரங்கல். குண்டகற்றுக் கலையில்  தனித் திறனுடையவர்  எனினும் குண்டு அவரை ஏமாற்றிவிட்டது.

இதுபோன்ற வேளைகளில் குண்டை அகற்றிய பின்புதான்  உடலைக் கைப்பற்ற வேண்டுமென்பது  விதி போலும். இல்லையேல் அது பின்னர் வெடித்துப்  பலரைக் கொல்லக்கூடும்.  ஆனால்  இனி,  வெடிகுண்டு அணிந்த உடலைக்  குண்டுடன் சேர்த்து மணல்மூட்டைகளுக்குள் வெடிக்கச் செய்து பின்பு மாமிசத் துண்டுகளைக்  கைப்பற்றுவதே  வழி  என்பதில் ஐயமில்லை.
தீவிரவாதிக்கு அதிக மரியாதை கேட்கும் மனித உரிமைக் குழுக்கள் புதிய வழிகளைச் சொல்லட்டும் .
இப்போது ஒரு கதை.  ஒரு காவல் நிலையத்தில்   ஓர்  இருகோடர் (கார்ப்பொரல் )  கடமையில் இருந்தார்.  வெளியில் தனியாக நடைச் சுற்றுக்காவலுக்குச் சென்றிருந்த ஒரு  புதிய  காவலர்  ஒரு குண்டு ஒன்றைக் கண்டு  தம்  நடைபேசியின்   walkie-talkie  மூலம் என்ன செய்வது என்று (மலாய் மொழியில் ) கேட்க, இருகோடர் விளையாட்டாக "தைரிய மிருந்தால் தலையில் சுமந்து கொண்டுவா" kalau berani boleh angkat kepala  என்று கூறி விட்டார்.    அவரும் அதைக் கொணர்ந்து   நிலையக் குறுக்கு மேசையில் இட,  பார்த்த இருகோடர் நிலையத்தை விட்டு ஓடிவிட்டார்.   நீ ஏன்  இப்படிச் செய்தாய்   என்று கேட்ட கடமை அதிகாரியிடம் :  "அவர் சொன்னார் , நான் செய்தேன் " என்றார் காவலர்.

"மூளையைப் பயன்படுத்த வில்லையா?"  என்று................. அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது .

அப்புறம் வெடிகுண்டு வல்லுநர் வந்து அதனைத்  தக்க பாதுகாப்புடன் செயலிழக்கச் செய்யும்போது நிலையத்தின் மேசை நாற்காலிகள் சாளரக் கண்ணாடிகள் முதலிய  நொறுங்கின , பக்கத்துக் கட்டடங்களிலும் இவை போன்ற  சேதங்கள் . எல்லாம் பின் சரி செய்யப்பட்டன,

இரண்டாம் உலகப் போருக்குப் பின் தென் கிழக்காசியா முழுவதும் வெடிக்காத குண்டுகள் பல கிடந்தன . இவற்றிலெல்லாம் தப்பிப் பிழைத்தோர்  நம் தாய் தந்தையர் .  அவர்களுக்கு நம் வணக்கம்.


சனி, 2 ஜனவரி, 2016

வருத்தப் படுவிய க - ய etc

இது ஒரு பேச்சு வழக்குத் தொடர். இதில் ,முதற் பதத்தில் திரிபு ஏதும் இல்லை.
வருத்த  என்பதை வலுத்த என்றால் பொருள் மாறிவிடும்.

இப்போது படுவீர்கள் என்பதைப் பார்ப்போம்.

படுவீர்கள்  > படுவீ (ர் ) க (ள் ) >  படுவீக.

ர்  என்ற ஒற்றெழுத்து  மறைவதைப் பலசொற்களில் எடுத்துக்காட்டியுள்ளோம்.

நினைவு கூர்க:

சேர் >  சேர்மி  >  சேமி.  சேமித்தல்.

ஆனால் ஒருமித்தல் என்ற சொல்லில் இப்படி வராது.

நேர் >  நேர்மி  > நேர்மித்தல். > நேமித்தல். இங்கு  அமையும்.

:ள்  வழக்கமாய்  மறைதல் உடையது .

அவள் >  அவ .

இனி,  க என்ற எழுத்து ய  என்று திரிவது காண்க. (படுவிய )

இதுபோல்  க - ய  என்று திரிந்த சொற்களைத் தேடுங்கள் .

மகன் என்பதைப் பேச்சில் சிலர் மயன்  என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா?  க - ய  திரிபு  அன்றோ?  

அகன் :  அகத்தில் உள்ளவனாகிய கடவுள்.  பெருமான் : பிரம்மன்.
          பிறவாதவனாகிய கடவுள்.   from akam.

அகன் > அயன்.  க > ய

இதையும் ஆய்வு செய்க.
இது போல்வன பிற -   தேடுங்கள்.

நல்லதொரு  பயிற்சியாய் இருக்கும் .

எம் பழைய இடுகைகளைப்  படித்தால் சில கிடைக்கலாம்.


வெள்ளி, 1 ஜனவரி, 2016

மனம் குறிக்கும் "மான்"



மன்னுதல் என்பதொரு வினைச்சொல்.  இது முன்னுதல் ‍  அதாவது
சிந்தித்தல்  என்ற சொல்லின் திரிபு. அன்றி  மன்னுதல் என்று இன்னொரு சொல்லும் உள்ளது. அதற்கு நிலைபெறுதல் என்று பொருளாம்.

முன் > மன் >  மனம்.  (அம் விகுதி ).

சில சொற்கள் முதனிலை நீண்டு விகுதிபெறாமலும் தொழிற்பெயராகும்.

இப்படி அமைந்ததே மான் என்னும் சொல். மான் எனின் மனம் என்று பொருள். மான் என்னும் விலங்கு,  ஏனை மான்கள் ஆகியவற்றுக்கும்  இதனுடன் தொடர்பில்லை


2அத்தன் அமைத்த உடல் இரு கூறினில்
சுத்தம் அது ஆகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரச கந்தம்
புத்திமான் ஆங்காரம் புரி அட்ட காயமே   (  திருமந்திரம் )

இங்கு  புத்தி மான்   எனின்  புத்தியும்  மனமும்  ஆங்க்காரமும் என்பது.  .
.