கோயில்களில் பயின்று வழங்கும் "உபயம்" என்ற சொல்லினை இப்போது காண்போம்.
கம்ப இராமாயணத்தில் உபயம், என்ற சொல் ". உவைய முறும் உலகின் "(கம்பரா. நிகும். 156). என்று வந்துள்ளதாக அறிஞர் கருதுவர் . உவையம் என்பதே உபயம் என்றாயிற்று என்பது கருத்து.
அ , இ உ என்ற முச்சுட்டுகளில் உ என்பது முன்னிற்றல் குறிப்பது.
உபயம் என்பது ஒரு வரியையும் குறிப்பதால், உபயம் முன் வைக்கப்படும் கோயிலுக்கான தொகையைக் குறித்தது என்பது சரியான கருத்து ஆகும் .
உ > உவ .
உவ > உவன். ஒ.நோ : அ > அவன் .
உவ > உவச்சன் = (முன் நின்று ஓதுபவன் ).
உவ > உவை .
உவை > உவையம் > உபயம்.
முன் நிற்புக் கருத்துடைய சுட்டடிச் சொற்கள் இவை.
உவ என்பதில் வ் வகர உடம்படு மெய் என்பதுமொன்று. எனின் உவச்சன் என்பது உ + அச்சன் = உவச்சன் எனல்வேண்டும், இங்கு அச்சன் - தந்தை என்று கொள்க, ஓதுவாரைத் தந்தை எனல் பொருத்தமே. ஐ > ஐயர் எனல்போல.
பயம் என்பது பயன் எனினும் அஃது சரியானதே. திறம் > திறன் என்பதில் மகர ஒற்று னகர ஒற்றாயிற்று , உ+ பயம் = உபயம் , சொல்லமைப்புகளில் உப்பயம் என்று வாராமல் உபயம் என்றே இயல்பாக வருதல் முறையே. அன்றி உப்பயம் உபயம் என இடைக்குறைந்து வருதலும் எடுத்துக் காட்டலாம். பொருள் : கோயிற் பயனுக்கு முன் வைத்த தொகை என்பதே
இங்கும் பொருள்.
Notes:
Payattal can also mean yielding a certain result, Vizumiyatu payattal. is an example. u+payam thus can mean to yield beforehand, that is, setting aside from your yield from fields a portion for tax payment for the king.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக