மாடு பிடிக்கின்ற மாவலியோர் சட்டத்தின்
ஏடு படித்துயர் ஏற்றறிஞர் === கூடிமன்றில்
போடும் தடையாற் புகவில்லை கட்டுக்குள்! 1
நாடும் அவர்பக்கல் நன்று.
வீர விளையாட்டில் 2புக்குதம் தோள்களின்
வீறு வெளிக்காட்டும் வேணவா == ஊறுபடச்
சீறு செழுங்காளை சேர்ந்து முடங்கிவிடக்
கூறு படலான தே
ஏறு தழுவும் எழுச்சி இளைஞர்மான்3
தேறு நிலைவருக தெள்ளிய === நீரினைப்போல்!
நேரும் துயரனைத்தும் நீங்குக இல்லங்கள்
தோறுமே பொங்குநல் நாள்
அடிக்குறிப்புகள் :
1. கட்டு = ஜல்லிக்கட்டு. : ஜல் ஜல் என்று மணியொலியுடன் பாய்ந்து வரும் மாடுகளை அடக்கிக் கட்டுதல். இந்த ஜல் ஓர் ஒலிக்குறிப்பு. ஜல் என்பது குறைவுபட நின்ற முதற்குறை . என்று இலக்கணம் உரைக்க .
2 புக்கு = புகுந்து
3 மான் = மனம், மன்+அம் = மனம்; மன்>மான், முதனிலை நீண்ட பெயர்ச்சொல்
ஜல் + இக்கட்டு = ஜல்லிக்கட்டு; ஜல் என்ற ஒலியுடன் விரையும் மாடுகளால் இக்கட்டு= அதாவது இடர் என்றும் வேறு பொருளும் தரும் ..
will edit.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக