சிரமம் என்ற சொல் இப்போது நம்மிடைப் புழக்கத்தில் உள்ளது. பேரிடர்களாக இல்லாமல், சிறுசிறு தொல்லைகளாகத் தோன்றி நமக்கு
இடைஞ்சல்களை ஏற்படுத்தக் கூடியவற்றைச் சிரமம் என்று சொல்கிறோம்.
இது உண்மையில் "சிறுமம்" என்பதுதான். சிறு தொல்லைகள் என்று
வேறு சொற்களால் சொல்லலாம்.
சிறுமம் என்ற சொல் இப்போது கிடைக்காவிட்டாலும், புனையப்பட்ட காலத்திலே அல்லது அதற்கடுத்தோ மறைந்துபோய், அதனின்று தோன்றிய "சிரமம்" என்பதுமட்டும் "ஸ்ரமம்" என்று பளபளப்பு ஊட்டப்பெற்று நம்மிடை நிலவுவது, சொல்வரலாறுகளில் காணின் இயல்புதான் என்க.
ஆனால் "சிறுமம்" என்பது சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது என்று
கூறுவதற்கில்லை. காரணம், சிரமத்தில் சிறுமம் ஒளிந்கொதுண்டிருக்கிறது. கண்டுபிடிப்பதில் பயிற்சிபெற்ற கண்களுக்கு
அதை வெளிக்கொணர்வது சிரமத்துக்குரியதன்று.
ஸ்ரமம் என்பது பளபளப்பூட்டப்பெற்ற வடிவம். அதை மகிழ்ந்து நோக்கும் அதே வேளையில் சிறுமத்தையும் மறந்துவிடலாகது.