பெம்மான்
என்ற பதத்தைப் பாருங்கள்.
இதில் பெம் என்பதென்ன?
பெரும் எம்ற முன்
துண்டுதான் பெம் என்று
திரிந்துள்ளது. "பிறவா
வரம் தாரும், பெம்மானே,
தப்பிப் பிறந்திடினும்
உனை மறவா வரம் தாரும்"
என்று பத்திமான்
(பற்றுமகன் >
பற்றிமான் > பத்திமான்
> பக்திமான்)
பாடி இன்புறுத்துவான்.
மகிழ்ச்சிதான் அன்றோ?
இதில்
யாம் சொல்ல விழைந்தது அதுவன்று.
பெரும் என்பதில்
ருகரம் தொகுந்து பெம் ஆயிற்று
என்பதுதான்.
அம்மணி
என்ற சொல், அருமணி
என்பதன் ருகரம் ஒழிந்த சொல்.
அருமணி
என்றே இருந்திருந்தால்,
செந்தமிழ் அழகாகவே
இருந்திருக்கும் என்று நீங்கள்
நினைக்கலாம். அம்மணி
என்பதும் அழகுதான். பச்சைப்
பாலும் காய்ச்சின பாலும்
எல்லாம் இனிமைதான். எதை
உண்டு பழகியிருக்கிறோம்
என்பதைப் பொறுத்தது அதுவாகும்.
அம்மை (அம்மா) + மணி = அம்மணி ஆனது என்று நினைக்கலாம்.
கருமம்
என்பதும் கம்மம் என்றாகும்.
ருகரம் ஒழியும்.
கம்முதல்
என்பது ஒளி குறைதல். அதாவது
ஒளி குறைதல். அதாவது
வானம் ஒளி குறைதல். கருப்பு
ஆதல். கருமுதல் >
கம்முதல் என்பது
தெளிவு. கம்மி >
ஒளி குறைவு, குறைவு.
ஆகாயம்
கம்மிக்கொண்டு இருக்கிறதென்பது
கேட்டிருக்கலாம்.
இடையில்
ரு ஒழிவதுபோலவே, டுகரம்
கூட ஒழியும். கடும்
> கம் > கம்பு.
கடினமான தானியம்.
இதுபோலும் பிற
இடைக்குறைகளைப் பின்கவனிப்போம்.
கொடு + பு = கொடும்பு > கொம்பு. கொம்பு என்பது வளைவு குறிக்கும் சொல். கொடும்பு பலபொருட் சொல். அது கன்னத்தின் உட்புறமும் குறிக்கும் .
"குடித்த பால் கொடும்பில் இருக்கிறது " என்பது பழமொழி .
கொடும்பு > கொம்பு. இங்கு டு ஒழிந்து சொல் பொருள் மாறிற்று .
டகரம்
பிறமொழிகட்குச் செல்கையில்
குறையும் அல்லது ஷ என்று
மாறும்.
பீடு > பீடுமன்>
பீஷ்மன். (பெருமிதத்திற்குரிய
மன்னன்).
பீடுமன்
> பீமன் என்று
டுகரம் மறையும். பின்னர்
அது வீமன் என்றுமாகும்.