இன்று லீலா லீலை என்ற சொல்வடிவங்களைச் சற்றுக் காண்போம்.
இலைத்தல் என்றால் தன்மை குன்றுதல் என்று பொருள். இதை உண்மை குன்றுதல் என்றும் சொல்லலாம். அதாவது, ஒரு மந்திரவாதி கயிற்றைப் பாம்பாக மாற்றுகிறான் என்றால், அது பாம்பாக மாறிவிட்டது போன்ற காட்சியை ஏற்படுத்துகிறான். அது "போன்மை உருவாக்க" மாகும். அதனை இலைத்தல் என்பது பொருத்தமானதே ஆகும். ( இளைத்தல் என்பது வேறு. )
இங்கு இரண்டாவது சொல்லை (வருமொழியை) முதலில் எடுத்துக்கொள்வோம்.
இலை என்பது தன் தலையை இழந்து,
-லை > -லா என்று சொல்லில் நின்றது. பல சொற்களில் இதுபோலத் தலை இழந்திருத்தலால் இதற்கு விரித்துரை தேவை இல்லை. வேண்டின் எம் பழைய இடுகைகளைக் காண்க.
லீலா என்ற சொல்லில் முன் நிற்பது (நிலைமொழி ) இல் என்ற இன்மை குறிக்கும் சொல். "நடப்பில் இல்லாதபடி, அல்லது உண்மை இல்லாதபடி," என்று இங்கு பொருள்படும்.
இல்+ இலை > இலிலை > இலீலை > லீலை.> லீலா
இல்+ இலை > இல்லிலை > இலிலை > இலீலை > லீலை.> லீலா
உண்மை இல்லாதபடிக்குத் தன்மை குன்றுதல். இதைத் தமிழர் விளையாடல் என்று கூறினர். விளை : உண்டாக்குதல், விழை - விரும்பு. விழை விளை யானது என்பர் அறிஞர் சிலர்.
சொல்லை மேற்கண்ட படி அமைத்தனர் என்க.
அதை இலக்கண முறைப்படி வடிவமைத்துக் காட்டுவதாயின்:
இல் + இலை = இல்லிலை (லகர இரட்டிப்பு) (இலை: முதனிலைத் தொழிற்பெயர்)
இல்லிலை > இலிலை ( இடைக்குறை)
இலிலை > இலீலை (இலை > ஈலை, முதனிலை திரிந்த தொழிறெயர்), அதாவது: இல் + ஈலை = இலீலை)
இலீலை > லீலை ( முதற்குறை) (தலையெழுத்திழப்பு)
லீலை > லீலா (திரிபு)
எனக்காண்க.
தமிழிலக்கணப்படி லகரம் சொல்லின் முதலெழுத்தாய் ஆகாது எனினும் இது ஒருவரின் பெயராய் வருங்காலை கவிதையிலன்றி மற்ற விடத்து இலீலை என்று எழுதவேண்டுவதில்லை. பாண்டையர் எழுதியவை பெரும்பாலும் பாடல்களும் அவற்றிற்கு உரைகளுமே. அது செய்யுளுக்குரிய இலக்கணம். செய்யுளில் போற்றற்குரியது அவ்விலக்கணம்.
இயற்கையை மீறிய செயல்காட்சிகளும் இலீலைகளாய் அடங்கின.
இவ்விதமாக இலீலை என்ற சொல்லும் தமிழ்ச்சொற்களினடிப் பிறந்த திரிசொல் ஆகும்.
இதை ஒரு play என்று ஆங்கிலத்தில் குறிக்கலாம். இறைவன் அப்படி மாயங்கள் காட்டினால் அதையும் லீலைகள் என்கிறோம். திருவிளையாடல் என்றும் சொல்கிறோம்.
Play என்ற சொல்லைப் பாருங்கள். விளை compares with pla. வி and p are interchangeable, in many languages. ~lay and ளை are of proximate sound. There are many Tamil words which are close to English and other European language words. A Tamilian published a long list of such words but I do not know if the list is still available.
மாய(ம்) and magic, மா = ma. g (ic) - pronounced -j- ஜ - ய interchangeable. -ic suffix.
ஒரு சொல் எம்மொழியில் தொடங்கிற்று என்பதே இவ்வாய்வு. அது எங்கு சென்று குடியேறிற்று என்பது இவ்வாய்வின் இலக்கு அன்று.
====================================================================
Notes
மாயம் < மாய்தல். மாய் + அம் . அறிவை மாய்ப்பது.
|
mAyA
f. art , wisdom , extraordinary or supernatural power (only in the earlier language) ; illusion , unreality , deception , fraud , trick , sorcery , witchcraft magic RV. &c. &c. ; an unreal or illusory image , phantom , apparition ib. (esp. ibc= false , unreal , illusory ; cf. comp.) ; duplicity Illusion (identified in the Samkhya with Prakriti or Pradhana and in that system , as well as in the Vedanta , regarded as the source of the visible universe) IW. 83 ; 108 ; (with Saivas) one of the 4 Pasas or snares which entangle the soul Sarvad. (with Vaishnavas) one of the 9 Saktis or energies of Vishnu L. ; Illusion personified (sometimes identified with Durga , sometimes regarded as a daughter of Anrita and Nirriti or Nikriti and mother of Mrityu , or as a daughter of Adharma) Pur. ; compassion , sympathy L. ; Convolvulus Turpethum L. ; N. of the mother of Gautama Buddha MWB. 24 ; of Lakshmi1 W. ; of a city Cat. ; of 2 metres Col. ; du. (%{mAye@indrasya}) N. of 2 Sa1mans ArshBr. - Lexicon.
lIlA f. (derivation doubtful) play , sport , diversion , amusement , pastime MBh. Ka1v. &c. ; mere sport or play , child's play , ease or facility in doing anything ib. ; mere appearance , semblance , pretence , disguise , sham Ka1v. Katha1s. Pur. (ibc. sportively , easily , in sport , as a mere joke [903,3] ; also = %{lIlayA} ind. for mere diversion , feignedly) ; grace , charm , beauty , elegance , lovelniess Ka1lid. Katha1s. Ra1jat. ; (in rhet.) a maiden's playful imitation of her lover , Dalar. Sa1h. Prata1p. ; a kind of metre (4 times $) Col. ; N. of a Yogini HParis3
Note: Derivation was doubtful for the lexicographers because they did not look into Tamil before writing their lexicon. It only proves the present exposition,
Some of these meanings are not etymological. (subsequently acquired meanings ).
|