காளமேகப் புலவர் முதலியவர்கள் ஒரு சொல்வடிவத்தைப் பலவாறாகப் பிரித்து எப்போதும் இயல்பாக நாம் "இதுதான் பொருள், வேறில்லை" என்று கட்டித் தொங்கிக்கொங்கிக் கொண்டிருக்கும் பொருளே அன்றி பொருட்பொலிவுகள் பிறவும் உண்டு என அறிவுறுத்தும் வண்ணமாகப் பல்வேறு பொருட்களையும் ஒரு கவிக்குள் புகுத்தி, மரம்போல் நின்ற காண்திட்பனையும் மல்லாந்து வீழும்படி இயற்றி. வெற்றிக்கொடிகளைப் பறக்கவிட்டுச் சென்றனர். தமிழைப் படிக்கும்போதெல்லாம் அதனை வியக்கிறோம் அல்லோமோ?
பல்லவராயன் என்பதற்கு இயல்பான பொருளையே நாம் முன் இடுகையில் கூறினோம்.
இப்போது இன்னொரு பொலி பொருளைக் காண்போம்.
பல்லவன் + அருமை + ஆயன்,
பல்லவ + அரு + ஆயன்
இவற்றுள் அரு ஆயன் என்பதைப் புணர்த்தினால், அராயன் என்று வரும். அரு என்பதிலுள்ள ஈற்று உகரம் வீழும். வீழ்ந்தபின் மிச்சம் அர் + ஆயன். இப்போது அடிச்சொல்லலைப் பார்க்கிறோம். அது அர். அர் என்பதற்குப் பொருள் பல உள. அவற்றை அறியப் புறப்பட்டுக் குழம்பி விடாமல், அருமை என்னும் பொருளே கருதுவோம். இதனை ஆங்கிலத்தில் சொல்வதானால் aru - special. சிறப்பானது, சிறப்பானவை. ஆய் என்பதற்கு ஆராய் என்று பொருள். சிறப்பான வழக்குகளை ஆய்ந்து முடிப்பவன். ( ஒரு நீதி அரசனோ, விசாரண செய்வோனோ ). ஆய்+ அன் = ஆயன். A special investigator ( appointed by the Pallava monarch.)
பல்லவ - an epithet. அடைச்சொல்.
அராயன் - a designation. ஒரு பதவிப் பெயர்.
பலலவ மன்னன் ஆட்சியின் போது செதுக்கப்பட்ட கல்வெட்டு இலக்கியம் முதலிய ஆதாரங்கள் கிடைக்கவேண்டும். அவற்றில் பல்லவராயன் என்ற அதிகாரிபற்றிய குறிப்புகளைச் சேகரிக்கவேண்டும். இன்னும் வேண்டிய சான்றுகள் பல. நமக்குத் தெரிந்தது : சிலர் இந்தப் பட்டம் தமக்கு உண்டு என்று சொல்கிறார்கள். இந்தப் பட்டத்தை முதன்முதலாய்ப் பெற்ற மனிதனிலிருந்து நம் ஆய்வு தொடங்கவேண்டும். நாம் வேலையிலிருந்த காலத்தில் செய்ததைவிட அதிக வேலை! இதற்குமேல் நீங்கள் ஆய்வு செய்யுங்கள். எவனாவது செய்துமுடித்த இலக்கிலிருந்து நீங்கள் தொடருங்களேன். எவனாவது முடித்ததைப் போய் மீண்டும் பிசையாமல், இதைச் செய்யுங்கள். ( முடிந்தால்).
பல்லவராயன் என்பது தமிழ்ப் புணரியலுக்கு ஒத்துப்போகிற சொல்லமைப்பாகிறது.. பாணினி என்ற பாணாயனின் இலக்கணத்துக்குப் போகவேண்டியதில்லை. குழப்பம் குறைகிறது.
ஆயன் என்பது : இடையன் என்ற பொருளாய் இருக்காது. ஒருவேளை ஆசிரியன் என்ற சொல் ஆயன் என்று குறுகி இருந்தால் ஆய்வு இன்னும் விரிகிறது. ஆசிரியன் > ஆ(சிரி)யன் > ஆயன் என்று! இதில் சி மட்டும் வீழ்ந்தால் ஆரியன் என்றாகிறது. ஆர் என்பது மதிப்பைக் குறிப்பதால், அது வெறும் அரசன் மதித்த குடிமகன் என்ற பொருளுடையதாக இருக்கலாம். எந்தப் பதவியும் இல்லை என்பதாகவும் இருக்கலாம்.
பல்லவராயன் என்பது பல்லவ மன்னன் கீழ் இயங்கிய ஓர் அதிகாரி என்று நிறுத்திக்கொள்வது கொஞ்சம் சும்மா இருக்க உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக