இன்று லாடம் என்ற சொல்லை ஆய்ந்து அது தோன்றிடம் ( தோற்றுவாய்) அறிவோம். ( தோற்று - தோன்றும் , வாய் - இடம் ).
இது மிக்க எளிதான சொல்தான்.
செருப்பு ஒரு பக்கமாகத் தேய்ந்து அப்புறம் நாம் நடப்பதற்கு ஒத்து வராமல் வழுக்குதல், வீழ்தல் முதலிய தொல்லைகளை உண்டுபண்ணும். லாடம் என்னும் ஒட்டுறுப்பை அடித்துப் பொருத்தி, இந்தத் தொல்லையை ஒருவாறு நீக்கிவிடலாம்.
இக்காலங்களில் செருப்புகள் தொழிற்சாலைகளில் செய்து முன் தயாரிப்பாகக் கிடைத்தலால், லாடம் முதலியவை அடித்துச் செருப்பைச் செப்பம் செய்யத்தேவையில்லை. புதியவை வாங்கிப் போட்டுக்கொள்ளலாம். ஊர்க்காவலர் படை, போர்ப்படை முதலியவற்றில் பணிபுரிவோரே இப்போது இலாடங்களைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள் என்று அறிகிறோம்.
மேலும் இப்போது காலணிகள் பெரும்பாலும் தேய்வையால் ( ரப்பர்) ஆனவை. இலாடங்கள் இவற்றுக்கு உதவ மாட்டா.
சமதரையில் செருப்பு ஆடுதலின்றி இருக்கவேண்டும். இந்த ஆடுதல் கருத்தினின்றே இலாடம் என்ற சொல் அமைந்துள்ளது.
இல் ஆடு அம் > இலாடம் > லாடம்.
செருப்பு ஆடாமல் காக்கும் இரும்புப் பட்டையாணி.
இது முறைமாற்று அமைப்புச் சொல்.
ஆடு + இல் + அம் > ஆடிலம் என்று அமைந்திருந்தால் இயல்பமைவு எனலாம். அமைத்தவர்கள் இது நன்றாக இல்லை என்று நினைத்துத் திருப்பிப் போட்டு அமைத்துள்ளனர். இந்த முறையைப் பிற்காலத்தில் பின்பற்றியுள்ளமை தெரிகிறது.
இதுபோல் முறைமாற்றாக அமைந்த இன்னொரு சொல்: இலாகா.
பொருள்: நிறுவாகக் காப்பு இல்லம்.
இல் + ஆ + கா.
( இல்லம் ஆகும் காப்பதற்கு) காப்பதற்கு ஆகும் இல்லம்.
சில சொற்கள் எதிர்மறையாக அமைந்தவை:
இன்னல ( பொருள் நேற்று ). " இன்று அல்ல" இன்னு அல இது மலையாள மொழிச்சொல்.
இதுபோல் எதிர்மறையாக வரும் தமிழ்ச்சொல்:
அன்னியன் ( அல் நீ அன்). நீ அல்லாத பிறன் அல்லது உனக்கு உறவு அற்றவன்,
தீபகற்பம். ( தீவகம் அல் பு அம் ). வ- ப போலி.
அல் ( அல்ல) என்பது இதில் எதிர்மறை.
பழங்காலச் சொல்: அல்,( பகல் அல்லாத நேரம்.)
அல்லி ( இரவில் அல்லாமல் மலராதது)
உன்னைப்போல் பிறனை நேசி என்ற வாக்கியத்தில், நீ அல்லாத யாவரும் பிறன் என்றே கொண்டனர். உறவு ஒரு பொருட்டன்று.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக