செவ்வாய், 25 ஏப்ரல், 2017

When "U" (oo) changes to "A"

உகரத்தில் தொடங்கிய பல சொற்கள், பின்னாளில் அகரத் தொடக்கமாகிவிட்டன. எது முந்தி? என்று முடிவு செய்வதற்கு, சொல்லின் தொடக்க நிலையை ஆய்வு செய்ய வேண்டும்.

அம்மா என்ற சொல், உம்மா என்றும் தமிழரல்லாத வேறு மொழியினரிடையே
வழங்குகிறது. "அம்" என்ற அடிச்சொல். சீன மொழியில் வயதில் மூத்த‌ பாட்டிபோன்ற மதிப்பிற்குரியரை உணர்த்துகிறது. தமிழ் சீனம் முதலிய மொழிகளில் சொல் "அம்" என்றே தொடங்குவதால், அம் என்பதே மூலச்சொல்
என்று முடிக்கலாம்.

தமிழில் "அம்மை" என்பதே இலக்கிய வடிவம் எனினும், விளிவடிவில் ( அழைக்கும் போது) அம்மா என்று ஆகாரம் பெற்று முடிகிறது. சீனமொழிச் சொல்லும் " அம்‍~" என்றே ஒலிக்கப்பெறுகிறது. அம்மாவைக் குறிக்க மலாய்
மொழியில் "ஈபு" என்ற ஒரு சொல்லும் உள்ளது. இது உரிய இடத்தில் "தலைமை" என்றும் பொருள்படும். பெண்கள் தலைமை தாங்கிய ஒரு காலத்தை இவ்வழக்கு நன்கு குறிக்கிறது.

உடங்கு என்பதிலும் அடங்கு என்பதிலும் உள்ள ஒற்றுமையையும் அறிந்துகொள்ளுங்கள்.

உடங்கு: கூடிநிற்றல்.
அடங்கு: இதுவும் ஒன்றில் இன்னொன்று கூடி உள்பதிவு ஆவதைக் குறிக்கக்கூடும். சொல் பயன்பா ட்டைப் பொறுத்து இப்பொருள் போதரும்.

அம்மை என்பது உம்மை என்றும் திரிந்து பொருள் மாறாமைபோல் இதுவும் கொள்ளப்படும் இடனும் உண்டு என்பதறிக.

உகல் என்பது கழலுதலைக் குறிக்கும். அகல் என்பது ஓரளவு பொருள் ஒற்றுமை உடையது. இரண்டும் அகலுதற் கருத்தினவாகும்.

உகளுதல் என்பது தாவுதல்; அகலுதல் என்பது நீங்குதற் பொதுக்கருத்து.

இவற்றை நன்கு ஆராய்ந்து, கருத்தொருமை வெளிப்படும் சொற்களையும் கருத்தணிமை வெளிப்படும் சொற்களையும் பட்டிய லிட்டுக்கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை: