அத்தி மரம்தான் பெரும்பாலும் பாம்புகள் முட்டையிடும் இடமென்று
பாம்புபற்றித் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். இதுபற்றித் தெரிந்தவர்கள்தாம் சொல்லவேண்டும்.
அகத்தியரின் வீட்டுக்கருகிலே ஓர் அத்திமரம் இருந்திருந்ததென்பாரும்
உண்டு. இதற்குத் தனிப்பட்ட ஆதாரம் ஏதுமில்லை. அகத்தியர் என்ற
சொல்லை அடிப்படையாக வைத்தே இது சொல்லப்படுகிறது.
அகத்தியர் உண்மையில் "அக அத்தியர்" என்றனர் இவர்கள். அவர்
வீட்டிற்கருகிலே ஓர் அத்திமரமாம்.
மக்கள் அதை அவ்வீட்டுக்குரிய அத்தி என்ற பொருளில், அக அத்தி
என்றனர். அவ்வீட்டில் வாழ்ந்த குள்ளமுனி, அகத்தியர் எனப்பட்டார்.
எதுவும் இருக்கலாம். சில ஆயிரம் ஆண்டுகளின் முன் நடந்ததை
எப்படி அறிவது? நேற்று நடந்ததற்கே ஆதாரம் கிடைக்காமல்
மனிதர்கள் திண்டாடுகிறார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக