ஓர் உரிமை வழக்கை (civil pleading ) பிறப்பிக்கும் அமைவுரை, ஆங்கிலத்தில் "பிளீடிங்" என்றும் சொல்லப்படும். பீளீட் என்றால் "வேண்டிக்கொள்ளுதல்" "முறையிடுதல்" என்றும் சொல்லலாம்.
பழங்காலத்தில் "தெவ்வுதல்" என்றொரு சொல் வழங்கியது. இதற்கு
மன்றாடுதல் என்று பொருள். மன்று = முறை வழங்கும் மன்றம்; ஆடுதல் = அங்கு முறையிட்டுச் செயல் வேண்டுவது.
ஆகவே தெவ்வுகை என்பதை மறுபயன்பாடு செய்ய முயலுதல்
நன்று ஆகும். இது "பிளீட்" என்பதற்கு நேர்.
பிராது என்ற சொல்லும் உள்ளது. இது "பிறப்பிப்பது" என்ற சொல்லின்
நடுச்சுருக்கு ஆகும். பிற~து என்று சுருக்கி, நன்கு ஒலிக்க வசதியாக,
பிறாது என்று ஆக்கியது ஒரு திறமைதான். அதைப் புரிந்துகொள்ளத்
திறனற்றோன், அது உருது, அதில் றகரம் போடக்கூடாது, ரகரமே வரும் என்று திருத்திப் பிராது ஆக்கினான். இஃது அறியாத் திருத்தம். அப்புறம்,
சின்ன வகுப்பில் சின்னவாத்தி சொன்னதையே பெரும்பட்டதாரி ஆனபின்னும் பற்றுமையுடன் பற்றிக்கொண்டிருந்த புலவன், உருது உருது என்றதால், உருது அகரவரிசைக்காரனும் அதை அங்கு எழுதி வைத்துக்கொள்வான். நீங்கள் உருது அகராதியைப் புரட்டினால் அது அங்குக் காட்சிதாராது போமோ?
கண்போன திக்கற்றவன் "கபோதி" ஆனதுபோலவும் விழுமிய வாழ்க்கை ஆகுவது "விவாகம்" (வி +வா+ ஆகு+ அம் ) ஆனதுபோலவும் பிறாதும் பிராது ஆகி வேற்றுலகச் சான்றிதழைப் பெற்றுவிட்டிருக்கின்றது.
இல்லறமே சிறந்தது. விழுமியது. இதைச் சொல்லே சொல்கிறது. இதைப் பிறமொழி என்றதில் இவ் விழுமிய பொருண்மை மறைவுண்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக