வெள்ளி, 14 ஏப்ரல், 2017

தொல்காப்பிய நன்னூல்" அட்டாவதானம் சபாபதி முதலியார் 1858

---
சாமுவேலென்னும் புலவர்  தொல்காப்பியத்தையும் நன்னூலையும் ஒப்பாய்வு செய்து " தொல்காப்பிய நன்னூல்" என்றோரு நூலை 1858ல்
வெளிப்படுத்தினார். இந்த நூல் இதுகாலை கிடைத்திலது. இதற்கு அப்போது அட்டாவதானம் சபாபதி முதலியார் என்னும் தமிழ்க்கொண்டல்
ஒரு பாயிரம் வரைந்தார்.

பூமிசை என்று தொடங்கிய இதில் தமிழ் நாட்டின் எல்லை கூறப்படுகிறது.
"வேங்கடம் குமரி ஓங்கிய மேல்கீழ், புணரிசூழ் வரைப்பின்
அணவிய முத்தமிழ்" என்று தமிழைப் புகழ்ந்துரைக்கிறார்.

மேற்சென்று, அகத்தியரின் மாணாக்கரே தொல்காப்பியர் என்ற வழக்கமாகக் கூறப்படும் "வராலாற்றை " முன்வைக்கிறார். இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று அறிஞர் சிலர் தள்ளுபடி செய்துள்ளனர்.
அகத்தியர் எழுதியதாகக் கிடைக்கும் நூல், தந்துறை போகிய‌ ஓர் இலக்கண ஆசிரியர் பாடியதுபோல் இல்லை என்கின்றனர். எனினும்
பன்னிரு மாணவரை உடையவர் அகத்தியர் என்கிறார் அட்டாவதானம். அப்பகுதி வருமாறு:



அரும்பெறல் இயல்பெறீஇப் பொருந்திய பன்னிரு
மாணவக் குழாத்துள் நீள் நிலை கொளுவிய‌

ஒல்காப் பெருஞ்சீர்த் தொல்காப்பிய முனி
தன்பெயர் தோற்றி அன்புறத் தந்த‌
ஐந்திரம் நிறைந்த வியத்தகு நுண்பொருள்
தொன்மைசால் காப்பியத்து உள் மரீஇப் பொதிவன

எனபது தொல்காப்பியத்தைப் புகழும் பகுதியாகும்.

இதில் அகத்தியருக்குப் பன்னிரண்டு மாணாக்கர்; அவர்களுள்
தொல்காப்பியர் ஒருவர் என்கிறார்.

இப்போதைய நிலையில், தொல்காப்பியரைக் கொண்டே அகத்தியரும்
இன்னும் 11 மாணாக்கரும் புகழ்பெறுவதாகத் தெரிகிறது.

இவர்கள் பாடல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

கருத்துகள் இல்லை: