தாசன் என்ற சொல், மக்களுக்குப் பழக்கப்பட்ட சொல்தான். பல திரைக்கவிஞர்களும் இலக்கியகவிஞர்களும் இதனைத் தன் எழுத்துப்புனைப்பெயரின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, காளிதாசன், பாரதிதாசன், கண்ணதாசன், கம்பதாசன் எனப்பல காணலாம். ஜேசுதாசன் என்ற கிறித்துவப் பெயரும் உள்ளது.
என் சிற்றப்பனின் பெயர் தேவதாசன் என்பது. அன் விகுதியில் முடிந்த தேவதாசன் என்ற சொல், தேவதாசு (தேவதாஸ்) என்பதினும் சற்று
வேறுபட்டதுபோன்ற நினைப்பை ஏற்படுத்துகின்றது. இலட்சுமண தாஸ், ராமையாதாஸ் என்பனவும் உள்ளன.
தாசன் என்பதன் பெண்பால் தாசி எனலாம்; ஆனால் இது சொல் இலக்கணத்துக்குச் சரியாக இருக்கலாம். பொருள்வேறுபாடு
இச்சொற்களைத் தொலைவில் வைக்கின்றது. தேவதாசி
என்பதோ ஒரு குலத்தினரைக் குறிப்பதாகிறது.
கவிஞர்கள்" தாசன்" என்று குறித்துக்கொள்வது, இலக்கிய உலகில் பெரும்பான்மை, எடுத்துக்காட்டு: துளசிதாசர்.
தாசு என்ற சொல், நம் பழைய நூல்களிலும் உள்ளது. சுதாசு என்று பெயரிலும் வரும். திரஸ்தாஸ்யு, திவோதாஸா முதலிய வேதங்களில்
உள்ளவை.
தாசு என்றால் அடியன் என்று பொருள் என்பர். அடிமைகள் தாஸ்யு எனப்பட்டனர் என்பர். ஆனால் அசுரர்கள் என்றும் கூறப்பட்ட இவர்கள்
அரசர்களாக இருந்துள்ளபடியால், அடிமை, அடியர் என்பது முற்றும் பொருந்துவதாய்த் தோன்றாமை காண்க.
ஆரியர் என்பது வேறு. பிராமணர் என்பது வேறு. இப்போது பிராமணர் என்பது ஒரு சாதிப்பெயர்.
ஆர்ய என்பது ஓர் இனம் என்பது நிறுவப்படவில்லை. பிராமணர் என்பது
பூசுரத் தொழிலுடையார் பல்வேறு பிரிவினரைக் குறிக்கிறது. இவர்கள் பல பிரிவுகள் தம்முள் உடைய தொழிலினர் ஆவர். பல்வேறு மொழி பேசுவோர்.
தாசு என்பது தமிழ்ச்சொல்லான தா (=கொடு) என்பதிலிருந்து வந்ததென்பதைச்
சில காலத்தின்முன் வெளியிட்டோம். உழைப்பையோ, பொருளையோ, பிறவற்றையோ கொடுப்போர் தாசு. தாசர் எனப்பட்டனர். ஆதரவு கொடுத்தோர்
எனவும் பொருள்கூறுதல் கூடும். ஆதரவு, ஆதாரம், ஆதாயம் என்கிற சொற்கள் ஆக்கொடைகளைத் தெளிவுபடுத்துபவை. இது ஆக்கொடையையும்
குறிக்கும். கொடை பலவகை. தானம் என்ற சொல்லும் (தா+ன் +அம்) என்பது தரப்படுதலைக் குறிக்கும். இதில் 0ன் என்பது இன் என்பதன் தலைக்குறை ஆகும். தா+(இ)ன்+அம் ஆகும். தா என்பது பிறமொழிகளிலும் பரவியுள்ள
தமிழ்ச்சொல்.
will edit.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக