திங்கள், 24 ஏப்ரல், 2017

ஆஷ்டுக்குட்டி என்பதிலிருந்து (சமஸ்கிருதம்)

ஆட்டுக்குட்டி என்பதை ஆஷ்டுக்குட்டி என்று எழுதினால் தமிழ் இலக்கணியர்
ஏற்றுக்கொள்ளாத ஓர் ஒலியை நுழைப்பதாகப் பொருள்.  அதனால் ஆஷ்டுக்குட்டி என்பது அயற்சொல்லாகிவிடாது. ஒலியை மட்டுமே வைத்து
ஒன்றை அயலென்று கூறலாகாதென்பதற்கு இஃது  ஒரு  நல்ல எடுத்துக்காட்டாக‌ இருந்துவருகிறது. சட்டையை மட்டுமே வைத்து நம் வீட்டுப் பையனை அடுத்த‌ வீட்டான்  என்று கூறிவிடுதல் முடியாதன்றோ?

ஆடு என்பதன் அடிச்சொல் அடு என்பது.   அடு என்றால், ஒன்றாக உரசிக்கொண்டு அடுத்தடுத்துச் செல்லும் விலங்கினைக் குறிக்க, தமிழர்
மேற்கொண்ட சொல்லுக்குரிய அடிச்சொல் ஆகும். அடுத்தல் : அடு > ஆடு
என்று முதனிலை திரிந்த தொழிற்பெயரானது. தொழிலைக் குறிக்கும் இது
அத் தொழிற்குரிய விலங்கைக்குறித்தது ஆகுபெயர். இப்படிச் சொல்லாமல்
ஒரு தொழிலுக்கு இட்டபெயர், அத்  தொழிலைப் புரியும் விலங்குக்கும் பொருளுக்கும் பயன்படுத்தலாம், அது மொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால்!!  என்று  முடிக்கலாம்.இது முன் சொன்னதையே  இன்னொரு விதமாய்ச் சொல்வதுதான்.

நாம் நினைப்பதுபோல் இல்லாமல்,  அடு என்ற அடிச்சொல்லையே கொண்டு
அஜ என்று பெயராக்கி, சமஸ்கிருதத்தில் பயன்படுத்தினர்.

அடு > அஜ (சமஸ்கிருதம்).  பொருள்:  ஆடு என்னும் விலங்கு.

ஆஷ்டுக்குட்டி என்பதிலிருந்து அதை மேற்கொள்ளாவிடினும், அடு   என்பதிலிருந்து   அஜ  என்று மேற்கொண்டமை, சிறப்பான செயல்பாடு ஆகும்


அடு >  அட > அஜ .
அடு > அட >  அடர் ..


ஆட்டுக்குட்டி என்பதிலிருந்து சொல்லைத் திரித்தால் அது திறனின்மையைக்
காட் டலாம்.. அடியை ஆராயவேண்டும். அடிச்சொல் அடு என்பது. அடு>அட>
அஜ. சொல்லாக்கும் பண்பறிந்த பெரும்புலவர்கள் இவர்கள்.

கருத்துகள் இல்லை: