பாட்டிஒளவை
வாழ்ந்தகாலம் பாரில்நாமும்
இல்லை,
பலநூற்று
நல்லாண்டு பாய்ந்துகால ஆற்றில்
மீட்டலின்றி
ஓடியபின் மெல்லநாமு தித்தோம்!
மீண்டுபாட்டி
மேனிதோன்ற மேடைபோடு வோமா ?
மூட்டமிட்டார்
சென்னையாளும் மூப்பில்காட்சி
ஆள்நர்;
மூதறிவோர்
போற்றுவித்ய சாகரென்னும்
பேரோர்!
ஓட்டமுற்ற
வண்டிபோலும் ஈட்டம்கூட்டி
னார்கள்;
ஒப்பில்சிலை
மனைமுகத்து நிற்பவழி நேர்ந்தே.
மூட்டம் - தொடக்கம் ( மூட்டுதல் )
ஆள்நர் - ஆளுநர் ( governor )
(
ஈட்டம் = வலிமை;
கூட்டினார்கள் = சேர்த்தார்கள்;
நிற்ப = நிற்க. to install.
நேர்ந்தே = திட்டமிட்டே. ( having undertaken.)
(
ஈட்டம் = வலிமை;
கூட்டினார்கள் = சேர்த்தார்கள்;
நிற்ப = நிற்க. to install.
நேர்ந்தே = திட்டமிட்டே. ( having undertaken.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக