வெகு திறமையுடன் அமைக்கப்பட்ட சொற்களில் வினியோகம் என்பதொன்று. இதில் யோகம் இருக்கிறதே! ஆம், பொருள் விலையின்றி விநியோகிக்கப்பட்டால், யோகம்தான். அதிக விலையானால் யோகமில்லை. அதுவன்று நாம் நுழைந்துகாண விரும்பியது, இப்போது யாது அது என்பதனை விரைவாக அணுகிவிடுவோம்.
வியன் என்பது விரிவு என்று பொருள்படும் ஒரு தமிழ்ச்சொல்.
"விரிநீர் வியனுலகு" என்ற தொடரை எங்குக் கண்டீர்கள் என்பதை
எண்ணிப்பாருங்கள். வியன் என்ற சொல்லோடு ஓகம் என்ற சொல்லைச் சேர்த்தால் அது வியனோகம் என்று வரும். அதாவது விரிவாக ஓங்குதல் என்பதே இதன் பொருள்.
பொருட்களை விரிவாகக் கொண்டு சேர்த்தல், வியன் ஓகம் ஆகும்.
அது விரிவு மிகு தன்மையைக் குறிக்கும். ஓகம் என்பதும் நல்ல
தமிழ்ச்சொல். ஓங்கு+ அம் = ஓங்கம்; இதில் ஙகர ஒற்று இடைக்குறைந்தால் அதுவே ஓகம். அதாவது மிகுதியாகுவது. ஓகம் என்பது அகரவரிசைகளில் காணப்படும் சொல். அமைந்ததும் கூறியபடியே ஆகும்.
வியனோகம் என்ற கூட்டுச் சொல், பின் எழுத்து முறைமாற்று
செய்யப்பட்டது. விசிறி என்பது சிவிறி என்றும், மருதை (மருத நிலம் நிறைந்த ஊர் அல்லது நகர் ) என்பது மதுரை என்றும் மாறினும் பொருள் மாறாமை போல், இந்த வியனோகம் என்பது வினயோகம்
என்று மாற்றப்பட்டு, பின் 0னகரம் நிகரமாக மாற்றப்பட்டுச் சொல்
அமைந்தது.
1. எழுத்து நிரல்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யனோ > 0னயோ.
2. 0னயோ > 0னியோ என்று மாற்றம்பெற்று, பலுக்குதல் (உச்சரித்தல்) எளிமைசெய்யப்பட்டுள்ளது.
வியனோகம் (பரக்க ஓங்குதல்) வினியோகமாகி, இப்போது
சேவையாற்றிக்கொண்டுள்ளது.
இதிலுள்ள வி என்பது விரிவுணர்த்தும்.
வியனோகம் > வினயோகம் > வினியோகம்.
இதை வெளியிடாமல் வி+ நியோக என்று பகுத்துப் பொருள் கூறிவிடலாம். அப்போது வந்தவழி மறைவுறும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக