சனி, 15 ஏப்ரல், 2017

பே+ து + அம் = பேதம்

பெயர்தல் என்றால் பொருள் பலவாகும்.    ஆடல், எடுபடல், திரும்பல்,பேர்தல், பிறழ்தல், வேறுபடல், சிதைவுறல், விடுதல், மீளுதல், மாறுதல், அசையிடுதல் எனப் பல்பொருள் ஒருசொல் ஆகிறது
இது.

பெயர்த்தல் எனில் வேறுபடுத்தல், போக்குதல்,  நிலைமாறச் செய்தல், பிரித்தல்,  கொடுத்தல், செலுத்துதல், சிதைத்தல், புரட்டுதல், கிளப்புதல்
என்றும் பொருள்.

பேரன் என்பது உண்மையில் "பெயரன்" என்பதினின்றும்  போந்தது  .  பெயர் என்ற பகுதி பேர் என்று நின்று அன் விகுதி பெற்றது. பேத்தி என்பதோ,  பே+தி = பேத்தி என்றானது.  எனவே,      பெயர் > பேர் > பே
என்று திரிவதைத் தெள்ளிதில் தெரியலாம்.

பேதம் என்பது வேறொன்றாவதைக் குறிப்பது.  மாறுபடற் கருத்தாகும்.

பே+ து + அம் = பேதம்.  து ‍விகுதி . அம் என்பதும்  விகுதி.
விகுதிமேல் விகுதி என்றோ, இடைநின்ற விகுதியை இடைநிலை என்றும்  இறுதி விகுதியை விகுதி என்றும் கூறினும் இழுக்கொன்றும்
இலது.

ஆகவே பேதம் நல்ல தமிழே.

கருத்துகள் இல்லை: