கடக இராசியில் பிறந்தவர்கள் துணிச்சலும் திடமனமும் உடையவர்கள் என்று கணியர்கள் (சோதிடர்கள்) கூறுவர். திடமும் திறமும் உடையாரை எளிதில் கடந்துவிட இயலாதன்றோ?
நண்டு என்ற உயிரி, கடினமான ஓட்டினுள் வாழ்கிறது. ஓடு கடினமானது; அந்தக் கடு வெளி ஓட்டின் அகத்து (உள்ளே) அது வாழ்கிறது. எத்துணை கடின ஓடாயினும் அதை மடக்கிப் பிடித்து மனிதன் உண்டுவிடுகிறான் என்றாலும், இதனால் ஓடு கடுமை என்பதும் அகத்தே நண்டு வாழ்கிறதென்பதும் மறுத்தற்கொண்ணாத உண்மைகளே.
கடு+ அகம் = கடகம்.
இங்ஙனம் நண்டுக்கு மற்றொரு பெயர் அமைந்தது. இது மிக்கப் பொருத்தமாய் அமைந்த பெயராகும்.
கட + அகம் : வென்று உட்புக அரியது என்றும் பொருள்.
கடம்: < கட.
இதனை வேங்கடம் என்ற சொல்லுடன் வைத்து நோக்குக.
கடத்தல் - வெல்லுதல் என்றும் பொருள்படும்.
கடக இராசி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக