இனி அபாரம் என்னும் அபாரமான பொருள்கொண்ட சொல்லைச் சற்று ஆய்வது பொருந்துவதாயிருக்கும்.
மக்கள் பேசும்போது : "அவன் அடி அடி என்று சரியா(க)ப் பின்னிவிட்டான், " "கொளுத்து கொளுத்து என்று கொளுத்திவிட்டான்" "சும்மா விடுவானா? கடை கடை என்று கடைந்து விட்டான்" என்றெல்லாம் பல்வேறு வகைகளில் சொற்சித்திரம்போல் பேசுவர். அபாரம் என்பதும் இவ்வகையில் அமைந்த சொல்லே ஆகும்.
இவ்வாறெல்லாம் இன்றி, ஒரு படிவமொழியிலேயே பேசிக்கொண்டிருந்தால் வாழ்க்கையில்தான் ஏது சுவை?
அவிக்கவேண்டியதை அவி அவி என்று நன்றாக அவிக்க வேண்டும். கொழுக்கட்டை எப்படி என்றவர்க்கு, அப்போதுதான் அபாரம் என்று நாம் சொல்லமுடியும். அதாவது நன்றாக வெந்த கொழுக்கட்டை என்பது.
அவி > அபி. (அவித்தல்).
ஆர் = நிறை(வு). நிறைதல். வளைதலும் ஆகும்.
அம் என்பது ஒரு விகுதி.
அவி+ ஆர்+ அம் > அபி +ஆர்+அம் = அபாரம்.
வேறு வகைகளிலும் இதனை ஆய்ந்துள்ளனர். தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக