தமிழ் மொழியில் இணைச் சொல் தொடர்கள் பல வழங்கி வருகின்றன. "கையில் காசு கப்பி இல்லாமல் கட்டப் படுகின்றான் " என்று பேசுவது காதில் விழுகிறது.
கப்பி என்பதென்ன?
இது பல பொருள் உடைய சொல்லாகும்.
1. அரை குறையாய் அரைத்த மாவு. அல்லது தானியங்கள் பிற. 2 சாலை செப்பனிடுதலில் பயன்படும் சிறுசிறு கற்களின் குவியல், சீமைக்காரையும் கல்தூள் முதலியவையும் கலந்தது. அகழ்த்துபாரத்தில் கலக்கப்படுவது. 3. கயிறு இழுப்பதற்குரிய தொங்குருளை . 4 தறி உருளை. 5. பொய், உண்மைக் கலப்பு ஏதுமில்லாச் செய்தி.
தோசைக்குக் கப்பி காய்ச்சி ஊற்றினால் மென்மை பெறுமென்பர்.
காசு கப்பி என்ற தொடரில் அகரவரிசைப் பொருள்கள் ஏதும் பொருந்துவதாகத் தெரியவில்லை.
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் என்றான் கம்ப நாடன். கடன் வாங்கினவன் உள்ளத்தைக் கவலை கப்பிக் கொள்ளும். கடன் என்பது பொருள். கப்பி என்பது கடன்பெற்றதன் (அப்பொருளின்) விளைவு. விளைவானது பொருளுக்கு ஆகுபெயராய் காசில்லாத காரணத்தால் பெற்ற கடனைக் குறிக்கும்.
தொடருக்குக் "காசும் இல்லை; கடன்பெற வழியும் இல்லை; அப்படிக் கட்டப்படுகிறான்" என்று பொருள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக