புதன், 7 ஜனவரி, 2015

இரேகை (ரேகை)

இரேகை  என்பது தமிழா பிறமொழிச் சொல்லா என்று முடிவு காண்பதன்று இவ்விடுகையின்  நோக்கம்.  வெறும் சொல்லாய்வுதான்.

ஒரு கோடு ஓரிடத்தினின்று  மற்றோரிடத்திற்குச் செல்லும். அங்ஙனம் செல்லாதது வெறும் புள்ளி.  ஆகவே அது  (கோடு ) இரு செயல்களைச் செய்வதாகச் சொல்லப்படும்.  ஒன்று இருத்தல்; மற்றொன்று (அங்கிருந்து) ஏகுதல்.  ஏகுதலென்பது செல்லுதல். Mathematics. a continuous extent of length, straight or curved, without breadth or thickness; the trace of a moving point.   Please note that a line is something that extends from a point (A) or moves therefrom to another point (B). Thus the term irEkai is charged with mathematical meaning when it is seen though Tamiz.

இவ்விரண்டு செயல்களையும் இணைத்து, ஒரு சொல் அமைக்கப்பட்டது.

இரு + ஏகு + ஐ .  =  இரேகை;   >  ரேகை.  ஐ  is a suffix.

இரு என்பதன் ஈற்று உகரம் கெட்டு, அதன்பின் ஏகாரமாகிய உயிரேறி, ஐ தொழிற்பெயர் விகுதி பெற்று  ஆன சொல்லாகும்.

மிக்கவும் எளிமை சான்ற கருத்துகளை உள்ளடக்கிப் பிறப்பிக்கப் பட்டது இச்சொல். படிக்காதவர்க்குப்  புரிகிறதோ இல்லையோ,  படித்தவர்க்கும் இது புரிந்ததாகத் தெரியவில்லை.

கோடு என்பது வளைவு குறிக்கும் அடிப்படையில் எழுந்தது.  ஆனால் அக்கருத்து  இப்போது மறைந்துவிட்டது. எனவே நேர்கோடு என்றும் வளைகோடு என்றும் அடைமொழி பெற்றியலும்.

கை + இரேகை =  கையிரேகை  என்றுதான் வரவேண்டும் , இச்சொல்லைக் கற்காதவனே சரியாகச் சொல்வதாகத் தோன்றுகிறது..  எழுதுங்கால் கைரேகை  என்று எழுதுவதா அன்றி கையிரேகை என்று எழுதுவதா என்பதைத்  தமிழாசிரியனே முடிவு செய்யட்டும்.

இரேகை என்ற சொல்  தலையிழந்து கடையும் திரிந்து ரேகா என்று பிறமொழிகளில் வரும்.  வரினும் அதன் பொருள் கோடு என்பதே ஆகும்  புள்ளி   வைக்கக் கற்றுக்கொண்ட முந்தியல் மாந்தன் புள்ளியைக் கோடாக இழுக்கக் கற்றுக்கொன்டது ஒரு முன்னேற்றமே ஆகும். ஆகவே ரேகா ஒரு முன்னே ற்றமுடைய மங்கை என்று பொருள் விரித்தல் கூடும்,  இராசி குறிக்கும் கோடுகளையும் குறித்தல் கூடும்,  இரேகை அல்லது ரேகா என்பது,  துலா இராசி,  சுவாதி நக்கத்திரம்  என்று சோதிடர்கள் அல்லது கணியர்கள் கணித்திருக்கின்றனர்.  (  நக்கத்திரம் > நட்சத்திரம்.  நகுதல் = ஒளிவிடுதல்.  ஒப்பு நோக்குக: நகு> நகை (ஒளிர்தலையுடைய பொன்னால் ஆன அணி.).  நகுதல் - சிரித்தல் என்பது மற்றொரு பொருள்.)










  

கருத்துகள் இல்லை: