ஞாயிறு, 18 ஜனவரி, 2015

வாயிலான்

ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்ய விரும்புவோன், அல்லது ஒரு செய்தியைத்  தெரிவிக்க விரும்புவோன்,நேரடியாகத் தான் விரும்பியதை நிகழ்த்தாதவிடத்து  இன்னொருவன் வாயிலாகச  செய்வான் அல்லது  தெரிவிக்க வேண்டியவனுக்குத் தெரிவிப்பான்.  இங்கு இடைச் செல்வோனின் வாயிலாகவே காரியம் நடைபெறுவதால்  அவன் வாயிலோன்/ வாயிலான்  எனப்படுவான்.

தண்டியலங்காரம் பொருளியலணி -  விபாவனை அணியில்  ((9)-இயலில் ) இச்சொல் பதிவு பெற்றுள்ளது,  விபாவனை என்பது பிறிதாராய்ச்சி எனவும் படும்.

ஆனால் வாயிலான் என்பது வாசலில் நிற்கும் காவலனையும் குறிக்கும்,

மற்றும் வாய்+ இலான் என்றும் பிரிக்கப்பட்டு,  ஊமை என்றோ பேச இயலாதவன் என்றோ  பொருள் தரவும் கூடும்.

எனவே இது பல பொருள் ஒரு சொல் ஆகும்.  இடம் நோக்கிப் பொருள் அறிய வேண்டும்,

கருத்துகள் இல்லை: