சனி, 10 ஜனவரி, 2015

பாரம்

பாரம் 

பாரமென்பது,  சுமை அல்லது பளு, கனம் என்றெல்லாம் பொருள்படும் ஒரு சொல்.

பருத்தல் என்பது,  உருவில் பெரிதாவது என்னும் பொருள்படுவது.
பரு என்பது பார்  என்று திரியும்.  பருத்த பொருளுக்கே எடை கூடுமாதலால்,  பார் என்பது அம் விகுதி பெற்று கனம் என்று பொருள் தந்தது.

பரு> பார் >  பாரம்.

இதனை:  வரு> வார்> வாரம்,   தரு> தார்>  தாரம் என்னும் சொற்களுடன் ஒப்பிட்டு அறிந்துகொள்க.

வாரம்:  ஒன்றன்பின் ஒன்றராய் வரும் கிழமைகள்.

தாரம் : இல்லறத்தை தருபவளாகிய மனைவி.

வருதல்:  வார்   (வாராய்).  தரு:  தார் (தாராய்) என்ற திரிபுகளையும் நோக்குக.

பரு என்பது விகுதியின்றி நின்று,  தோலில் தோன்றும்  சிறு குமிழ்போலும் எழுச்சியையும் குறிக்கும். தோலில் எழுந்து பருக்கும் ஒன்று என்பது பொருள்.

கருத்துகள் இல்லை: