சனி, 31 ஜனவரி, 2015

பரதவரும் பாரதமும்

பண்டை உலக நாடுகளில் பல் வேறு  குமுகாய (சமுதாய)  முறைகள் நடப்பில் இருந்தன என்பதை வரலாறு உணர்த்துகிறது,  இந்த முறைகளைச்    செயல் படுத்தியவர்கள் அவ்வந்  நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தோரே ஆவர்,

 ஜப்பானில் படைஞருக்கு உயர்ந்த இடம் இருந்தது. இவர்கள் நிலக்கிழார்களுக்கு வேலை செய்ததனால் அவர்களைஆளும் பொறுப்பு
நிலக்கிழார்களுடையதே. படைஞர் உ யர்ந்தோரே  தவிர அவர்களுக்கான ஆணைகள் நிலக்கிழார்களிட மிருந்தே வந்தன,  இது  எப்படி இருக்கிறது  என்றால் இந்தியாவில் அந்தணர்க்கும் அரசர்க்கும் இருந்ததுபோன்ற நிலை.  t


இந்தியா என்பது நீண்ட கடற்கரையை உடைய நாடு. கடலோரங்களில் வாழ்ந்தோர், கடல் தந்த உணவுகளையும் பேரளவில் பெற்று வாழ்ந்தனர் என்பது உண்மை. இவர்கள் பரதவர். இந்தியா பரதகண்டம். பரதம்> பாரத நாடு.பரவை என்றால் தமிழில் கடல்.  கடல்வண்ணன், மேகவண்ணன் பரதவர் தெய்வம்.  அவனே மீனாகவும் தோற்றரவு (அவதாரம்) எடுக்கிறான், (மச்சாவதாரம்). இந்தியா கடல் நாகரிகமும் உடைய நாடு என்பதையே இது காட்டுகிறது. பாரதக் கதை உண்மையில் மீனவர் வழித்தோன்றல்களுக்கும் இடையர் வழித்தோன்றல்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டக் கதையாகும். எழுதிய புலவரும் மீனவப் புலவரே.

இந்திய நாகரிகத்தில் கடலுக்குப் பெரும்பங்கு உள்ளது.  மீனின் பங்கும் பெரிது ஆகும். கடல் நீலம்; கண்ணனும் நீலம். மழை பொழியும் முகில் ஊர்கின்ற வானவெளி நீலம்.  இதற்குள் மீனவ (பரதவ) வாழ்க்கை அமைந்து கிடந்தது;கிடக்கின்றது.  பண்டை மீனவர் தாம் மேற்கொண்ட புதிய தொழிலுக்கேற்ப குலம் மாறினதையே பின் நடப்புகள் பல காட்டுகின்றன.  தொழில் அடிப்படையிலான சாதி ( சார்தி = சார்பு) தொழில் மாற்றத்திற்கேற்ப மாறும் தன்மை உடையதாய் இருந்தது.

தமிழ் நாட்டிலும் பாண்டியன் மீன்கொடியைக்  கொண்டிருந்தான். காரணம் யாது?   வேந்தருள்ளும் பாண்டியனே பழையவன் என்பர். இவர்கள் கடலாலும் மீனாலும் வாழ்வு பெற்றோர்.  தம் பழம் வரலாற்றைக் குறிப்பால் உணர்த்தினர். அவர்களிலிருந்து பிரிந்த சேரரும் சோழரும் வில்லையும் புலியையும் கொண்டு தம் போர் முரண்மையை வெளிப்படுத்தினர்.

will edit and continue here or in another post. stay "tuned" .


கருத்துகள் இல்லை: