புதன், 11 பிப்ரவரி, 2015

அகிலம்

அகிலம் என்னும் சொல் அமைந்த விதம் காண்போம்.
இது பன்மடித் திரிபுச் சொல் ஆகும்.

உலகம் என்பது அலகம் என்று திரிவது முதல்மடி.
இதற்கு வேறு எடுத்துக்காட்டு.

அம்மா   >உம்மா   > உமா.   ( அ‍‍ > உ; உ> அ ). ஒன்று மற்றொன்றாகத் திரிய வல்லது.

சில மொழிகளில் உகரம் அகரமாகவும் திரியும், ஆங்கில உ (u) எழுத்து அ என்றும் ஒலிக்குமிடம் காண்க.

அம்மா என்பது சில மொழிகளில் உம்மா என்றும் சிலவிடத்து உமா என்றும் வழங்குவதை அறிக.  மலபாரில் உம்மா..
இதன்படி உலகம்  ( அலகம்) ஆனது.

இரண்டாம் மடித் திரிபு:

அலகம் > அகலம் என்று எழுத்து முறைமாறுதல். இந்த அகலம் வேறு; அகல் என்ற சொல்லில் இருந்து அம் விகுதி பெற்ற அகலம் என்பது  வேறு.
 வேறு உதாரணங்கள்:

விசிறி  >  சிவிறி.
மருதை> மதுரை.

அகலம் என்பது பின் அகிலம் என்று திரிந்தது.

உலகம் > அகலம் > அகிலம்;

இங்ஙனமன்றி அகலம் விரிவு என்று பொருள்படுவதே அகிலம் என்று திரிந்தது என்று கூறுவர்/

இது தமிழ்ச் சொல்லே ஆகும்.

அகிலம் என்பது சமஸ்கிருத வடிவமன்று, இதை அம்மொழி அகர வரிசையில் தேடிப்பாருங்கள். சமஸ்கிருத  "ஆகல்பம்" என்பது ஆ ​+ கல்பம் எனப் பிரிந்து  பொருள் உணர்த்தும் என்பர். 
Akalpam t the end of the world (lit. of a Kalpa,  ). 
ஆ - அந்த.






கருத்துகள் இல்லை: