செவ்வாய், 5 டிசம்பர், 2017

பாவம் இவர்கள்!



கருகிப்போன கட்சியொன்று
மெருகூட்டி மீள்விக்க,
உருகிப்போன உள்ளமுடன்
ஒருவர்போய்த் தலைவரானார்.

யாரும்போய்த் தாருமென்று
கூறும்போட்டிக் கேறவில்லை.
யார்சென்றும் சேராக்கட்சி
யார்வந்தும் தேருமாமோ?

அணைந்துபோன திரியுமங்கே
புகைந்தெழுந்தே எரிவதுண்டோ!

இவர்கள் பாவம்.

திங்கள், 4 டிசம்பர், 2017

VISHNU தென் இந்தியாவில அதிக சிலைகள்



தென்னாட்டில்தான் மிகுதியான விஷ்ணு சிலைகள்

அகப்பட்டுள்ளன அல்லது புழக்கத்தில் உள்ளன என்று

சொல்லப்படுகிறது.




இது உண்மைதான். இதற்குக் காரணம் பழங்காலத்தில்

இங்கு மக்கள் இயற்கை வணக்கம் (nature worshippers)

செய்பவர்களாக இருந்தமைதான்.




விஷ்ணு என்ற சொல் விண் > விண்ணு என்ற தமிழ்ச்

சொல்லின் திரிபு அல்லது திரித்தல் ஆகும்.




விண் > விண்ணு > விஷ்ணு.




நடுவில் ஒரு ஷ் வைத்துச் சொல் அமைந்துள்ளது,




விஷ்ணு மாயோன் என்று தொல்காப்பியத்தில்

குறிக்கப்படுதல் காண்க.




கடல்சார்ந்த இடங்களும் இதில் அடங்கும். கடல்

கொந்தளிப்புகள் மனித உயிர்களை மாய்க்கும் திறம்

வாய்ந்தவை. எனவே, கரியவன் என்ற பொருளுடன்

மாய்ப்பவன் என்ற பொருளையும் மேற்கொள்ள

வேண்டும்.




விண்ணைக் கடவுளாக அல்லது ஆற்றலாக

உணர்ந்தோர் முதலில் மீனவர்களாக

இருந்திருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.

பிராமணர் புனைந்த கடவுள் அன்று. Any society

must be developed to a certain level before

division of labour sets in. It was not possible

for priestly profession to spring up before

people even realised or discovered divinity.

Once discovered, the practice of worshipping

would take time to spread among the given

populace and once sufficiently developed, the

worshippers would look for someone to be

delegated with the job of conducting

the prayers. Those without the means would

not employ priests. Usually the royalties

and upper echelons of society in terms of

means to employ help, would patronise

priestly service providers. Hence Brahmins

come into the picture only in a developed

situation. The ranking of Brahmins would

have been conferred on them only by a

royalty or person or persons in a situation

of power to enforce. Hence no one could

have sprang out with rank out of a deity

which society discovered or realised

after much thought and seeking. A

Brahmana even today is installed as a

priest only after a temple can be built.

A Brahmin is a delegated conductor of

events or ceremonies. No deity issues him

out of its mouth. Neither now nor in the

beginning of time. Professions are the result

of development of human society.








ஐம்பூத வழிபாட்டின்வழி வந்த கடவுள்

விஷ்ணு. நீரின் அமைப்பு

என்றும் சொல்வர்.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

சிவஞான போத ஆறாம்பாடல் உரை வாசிக்க

யாம் சிவஞான போதத்தின் ஆறாவது பாடலுக்கு எழுதிய உரை
மீண்டும் வாசிக்கத் தக்கதென்று இங்கு சொல்வதில் ஆர்வமுடையேம், பெருமிதத்துக்காக அன்று.

அதனை மீண்டும் படித்து இன்புறுமாறு விழைகின்றனம். 

 அது இவண் உள்ளது.  சொடுக்கவும்.

https://sivamaalaa.blogspot.sg/2016/02/6_28.html

காந்திப்பெயர் இராகுல் (காந்தி)



பல்கலைக்  கழகத்தில் படித்ததையே  சொல்லிக்கொண்டிருப்பவன் ஒரு படிப்பாளி என்று சொல்லலாம்.  ஒருவேளை அவனுடைய நினைவாற்றலைப் போற்றிப் புகழலாம்.  இவைதவிர அவனைச் சிந்தனைச் சிற்பி என்று கூறிவிடமுடியாது. புதியவற்றைக் கண்டுபிடித்து அறிவுறுத்துவோனைச் சிந்தனாயாளன் என்று தூக்கிப்  போசலாம். அஃது பொருந்துவதாக இருக்கும். நிற்க,

காந்தி என்ற பெயர் தமிழர்களுக்கும் இயற்பெயராய் அமைந்திருக்கலாம். ஆனால் இராகுல் காந்திக்கு இருப்பதைப் போல் அது குடிப்பெயராய் எங்கும் தமிழ்நாட்டில் அமைந்திருப்பதாகத் தெரியவில்லை.

அம்மனுக்குக் “காந்திமதி” என்ற பெயரிருப்பினும் இந்தக் “காந்தி” என்ற சொல் வட இந்தியாவில் வழங்கும் காந்தியுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை.

கந்தம் என்பது வாசனை என்று பொருள்படும் சொல்.  ௳டல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம் “ என்று ஓளவையாரின் பாடலில் வருகிறது என்பதை நீங்கள் நினைவு கூரலாம்.  தாழம்பூ  பெரிய மடல்களை உடையது; மகிழம்பூவோ சிறியது; இருந்தாலும் மகிழம்பூவில் உள்ள வாசனை தாழையில் இல்லை என்பது ஔவையின் இனிய அறிவுறுத்தல் ஆகும்.

கந்தம் என்பது மணம். வாசனை.  கந்தம் + இ = காந்தி ஆகிறது. இப்புணர்ச்சியில் அம் விகுதி கெட்டு, கந்த + இ என்று நின்று, ககரம் நீண்டு, காந்த + இ, என்றாகி,  அப்புறம் த-விலுள்ள அகரமும் கெட்டு, காந்த்+ இ எனத் தோன்றி,  காந்தி ஆகிறது. இது வாசனையுள்ள பெண் என்று பொருள் சொல்ல வழிதருகிறது. கந்தி என்பது வாசனைப் பொருளைக் குறிப்பதால், கந்தி > காந்தி வாசனைப்பொருள் என்று கூறுதல்  கூடும். ஆனால் இந்தப்  பொருளில் தமிழில் இச்சொல் (காந்தி ) போதரவில்லை என்று தெரிகிறது. இருப்பின் நேயர்கள் தொடர்பு கொள்ளலாம். பின்னூட்டம் செய்க.

வட இந்திய ஆய்வாளர்கள் காந்தி  என்பது வாசனைப்பொருள் விற்பனையாளன் என்று பொருள்படும் என்று கூறுகின்றனர்.  இராகுல் காந்தியின் தந்தை பெரோஸ் குடும்பத்தினர் வாசனைப்பொருள் விற்றனர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டதென்றும் குஜராத்தி மொழியிலுள்ள காந்தி என்ற சொல்லின் இது வேறுபட்டதென்றும் கூறுகின்றனர்.

கந்தல்,  காந்துதல், கந்தை, காந்தம் எனப் பற்பல சொற்கள் இருக்கின்றன என்றாலும் இவை இராகுலுக்குக் காந்திப் பெயர் நோக்கில் தொடர்பற்றவை.  இவற்றைப் பின்னொருகால் ஆய்வுசெய்யலாம்.

---------------------------
அடிக்குறிப்புகள்:

 Situation in Western India:-
 
 Two of their subcastes are Gandhi and Soni which are also occupational descriptives of perfume-sellers and goldsmiths ("Suniyaras" in Punjabi) respectively. Intermarriage between Bhatias and Aroras is not  uncommon .
 
A widely spread petty shop-keeping community.  They were mostly denied recruitment in the Royal British Indian Army.

Further reading: Dr Buchanan and Lewis Rice (19th c.)

இறுதியாகப் பார்வை செய்த நாள்:  5.12.2017
 


ஓடை ( கவிதை, அரும்பொருள்)

“ஓடை” கவிதைக்கு விளக்கம்.

அருஞ்சொற்பொருள்
மேல் இடுகையில் .........
http://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_2.html
............உள்ள ஓடை என்னும் கவிதைக்கு விளக்கம்.
(டென்னிசனின் ஆங்கிலக் கவிதையை ஒட்டியது )

பணிவான : மெல்ல அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஓடை, தனக்குப்

பணிவு காட்டுகதாகக் கூறுவது கற்பனை

பைய நீ கடலுக்கு ஏகு= மெதுவாக நீ கடலுக்குச் செல்க; அணி குளிர் ஒடை = அழகிய குளிரோடையே!

நல்லோடை = நல்லோடையாய்;

கரையோர மரம்க லங்கும்! - இங்கு கவிஞன், ஓடை மரத்தையும் அழைத்துச் செல்லாமல் தானே ஓடுவதனால், மரம் கலக்கம் அடைவதாகக் கற்பனை செய்கிறான்.

வெண்தளிர் : இது “ஆஸ்பன்” (aspen) என்ற ஒருதளிர் வகை; வெண்மை நிறமுடையது.

அலங்கும் =” கவலைப்படும்.” (Tennyson: to quiver). பிரிவு ஆற்றாமை காரணம். alangku-tal 1. to move, shake, swing, dangle, to be in motion; 2. to be agitated in mind, troubled.

துடித்தது எனில் மிகையாம்.
முரலும் = ரீங்காரம் செய்யும்; மருங்கில் =( உன்) பக்கத்தில் அல்லது அருகில்.

ஆயிரம் ஒளியாய் = ஆயிரம் அல்லது பல இடங்களில் தோன்றுவது;
எல்லோன் = சூரியன்.

அடிகள் இங்கு அகல்வேன் அல்லேன் = என் காலடிகள்
எடுத்துவைத்து இங்கிருந்து உன்னுடன் வரமாட்டேன்.







என்றவாறு:  இது அப்போதே வெளியிடப்பட்ட பொருளுரை.  படித்து
மகிழுங்கள்.

சனி, 2 டிசம்பர், 2017

இராகுல் காந்தி தோல்வி



இவ்வாரத்தில் தாளிகைகளையும் இணயத் தாளிகைகளையும் ஆட்சி செய்த செய்திகள் பல. இவற்றுள் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தினின்றும் வந்த ராகுல் காந்தியின் தேர்தல் படையணி தோல்வி அடைந்தது  வியப்புக்குரிய  செய்தியாகப் பலரால் கருதப்படுவதாகும்.

ஒரு கட்சியின் துணைத் தலைவராக மட்டும் உள்ள இராகுலையும் பிரதமர் மோடியையும் தொலைகாட்சிகள் ஒரே கட்டத்துக்குள்தான் காட்டின. அவர் சொல்வதை முன்னிறுத்தி விளக்கவுரைகள் பகர்நதன.  இவ்வளவு மேன்மை அளிக்கப்பட்டிருப்பினும் அவர் அணி தோற்றது.

மோடி இதுவரை எடுத்த முடிவுகள் எல்லாம் நல்லவை அல்லது எதிர்காலத்தில் நன்மை விளைப்பவை என்று மக்கள் கருதியிருப்பதால் இராகுலின் எதிர்ப்பேச்சு எடுபடவில்லை என்று தெரிகிறது,
தற்போதுள்ள நிலையில் இராகுல் ஓய்வு எடுத்துக்கொள்வதே  சரி என்று தோன்றுகிறது.





சட்டை



சட்டை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

பாம்பின் தோலுக்கு மேல் இருப்பது அதன் சட்டை. புதிய தோல் தயார் ஆனபின் பழைய தோலை அது கழற்றிப்  போட்டுவிடுமென்கிறார்கள்.

உள்தோலை அடுத்திருப்பதே அதன் மேற்றோல் ஆகும்.  அடுத்திருப்பதனால் அடு >  சடு > சட்டை ஆயிற்று,  சட்டை என்பதில் இறுதி ஐ என்பது விகுதி.

சடு+ ஐ = சட்டை,

பிற்காலத்தில் இது மேனிப் போர்த்துறையையும் குறிக்கலாயிற்று,

இதைச் சுருக்கி மேனியுறை எனலாம்.

அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாகும்.  ஆடி >சாடி.  அடு> சடு >  சட்டி.

அடுதல் = சமைத்தல்.

சட்டை பின் பிறமொழிகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதானது நம் சொல்லின் திறமாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  ஒரு சொல்லில் கூடுதலான புள்ளிகள் இருந்தன.  ஆக்குரையைக் ( compose draft  ) காண்கையில் அதில் இதைக் கண்டுபிடிக்க இயல்வில்லை. 15102022  04.38

ஓடை


ஓடை


பணிவான அலைகள் கண்டேன்
பாய்ந்துநீ கடலுக் கேகு!
அணிகுளிர்  ஓடை உன்றன்
அடிகளைத் தொடர்தல் இல்லேன்.

மெல்லநீ  ஒழுகு  வைக்கோல்
மேடுகள் திடல்கள் தாண்டி
நல்லோடை, பிறகோர் ஆறாய்;
நாடிப்பின் வருவேன் அல்லேன்!

கரையோர மரம்க லங்கும்!
காணும்வெண் தளிர லங்கும்!
முரலும்வண் டுன்ம ருங்கில்,
முன்செல்க தொடர்தல் இல்லேன்.

ஆயிரம் ஒளிபாய் எல்லோன்;
ஆயிரம் நிலவும் இலங்கும்!
ஆயின் நான் தொடர்தல் இல்லேன்
அடிகளிங் ககல்வேன் அல்லேன்.

டென்னிசனின் ஆங்கிலக் கவிதையைத் தழுவியது.
( எழுதிய நாள்:  on )

ஆங்கிலக் கவியின் ஆயிரம் நிலவு என்ற வரணனைக்
கருத்து, நம் திரைப்பாடல் ஆசிரியர்களாலும்  போற்றப்பட்டதே ஆகும்.

பொருளுரைக்குச் சொடுக்கவும்:

http://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_3.html 

வெள்ளி, 1 டிசம்பர், 2017

சடுதி ஜல்தி



சடுதி என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்வோம்.

சொல் திரிபு என்பது ஒரு குறிப்பிட்ட பாணியில் நடைபெறுகிறதென்பதை நம் சொல்லாய்வு இடுகைகளை வாசித்துக்கொண்டு வருவோர்க்கு நன்.கு விளங்கும்.

அகர வருக்க முதலாகத் தொடங்கும் சொற்கள் சகர வருக்கங்களாகத் திரியும் என்பதைப் பல இடுகைகளில் எடுத்தியம்பியுள்ளோம். இதன் தொடர்பில் சடுதி என்னும் சொல்லையும் ஆய்வு செய்வோம்.

அடுத்தடுத்துக் குறைவான நேர இடையீட்டில் ஒரு நிகழ்வு நடைபெறுமானால் அதுவே சடுதி என்று பொருள் அறியலாம். இங்கு அடு என்னும் சொல்லே முன் நிற்கின்றது.

அடு பின்பு சடு என்று மாறுகிறது.

அடு > சடு

அடு > சடு > சட்டு.

சட்டு என்பது விரைவுக்குறிப்பு.
இதுபோலும் திரிந்த இன்னொரு சொல்: பிடு > பிட்டு. பேச்சில் இதைப் புட்டு என்பார்கள். 

பிட்டு என்பது எச்சவினையாகவும் வரும்.  பிட்டு என்பது உணவுப்பொருளைக்  குறிக்குங்கால் பெயர்ச்சொல் ஆகும்.  தமிழ் இலக்கணியர் இதனைத் தொழிற்பெயர் என்பர்.

சட்டென்று அந்தப் பையை அவன் பிடுங்கிக்கொண்டான் என்ற வாக்கியத்தில் விரைவுக் குறிப்பாக இச்சொல் வருகிறது.

சடு என்பது தி என்னும் விகுதி பெற்று, சடுதி ஆகும்.
ஆகும்போது விரைவு குறிக்கும்.

சடுதி என்பது ஜல்தி என்றும் திரியும். ஜல்தி என்பது வட இந்தியத் திரிபு. ( தமிழ் > தெக்காணி > இந்தி)

அடுத்தடுத்து வரும் ஒலியை சடசட என்பர்.  மழை சடசட என்று பெய்து சட்டையை நனைத்துவிட்டது என்ற வாக்கியம் காண்க.  இது ஒலிக்குறிப்புடன் விரைவுக் குறிப்பையும் உள்ளடக்கிய இரட்டைக் கிளவி.

இனி 'சடு' என்பது சாடுதல் என்று முதனிலை நீண்டு வினையாகவும் வரும். ஒருவனுக்கு அடுத்துச் சென்று உதைத்தல் சாடுதல்.  அடு > சடு > சாடு.
அடுத்துச் சென்று தொடும் விளையாட்டு :  சடுகுடு.

குடு என்பது அழுத்தித் தொடுதல். இதிலிருந்து குட்டுதல் என்ற சொல் பிறந்தது

இதுகாறும் உரைத்தவற்றால்  சடுதி என்ற சொல்லின் பொருள் 
புரிந்திருக்கும் .

வியாழன், 30 நவம்பர், 2017

Third party blocking.....

சிவமாலா வலைப்பூவோ ஓட வில்லை;
சேர்ந்தயர்த்திச் சீர்கெடுக்கும் பூச்சி யாதோ!!
அவமாகும் இயுல்பிதுவோ சதியே தானோ
ஆர்வந்து செய்வதென்ன?  அறியேன் யானே!
தவமுனிகள் வந்தாலும் தகுந்த வாறு
தடையகற்றித் தட்பமெய்தக் கூடாத் துன்பம்.
இவணினிமேல் செய்வதற்கோ ஏதுமில்லை
இன்னொருநாள் நன்னாளாம் மகிழ்வு காண்போம்.


Yesterday:   The blog post simply failed to load.  Hence we could not post at all!!

Other websites functioned normally.

A poem composed online was lost at finishing stage.
Hence the above was posted from a different site.

Now we have this blockade.
An error occurred while trying to save or publish your post. Please try again. Dismiss 
You dismiss it, it comes back and blocks.
I am having "fun".