சனி, 4 பிப்ரவரி, 2017

சாங்கியம்

சாங்கியம்

சாத்திரம் என்ற சொல் சா என்ற அடிச்சொல்லிலிருந்து
தோன்றியது போலவே சாங்கியம் என்ற சொல்லும்
சாவின் பொருட்டுச் செய்யப்படும்  நடபடிகளை
முதலில் குறித்துப் பின் அவைபோலும் உயிருள்ளோருக்கு
இயற்றபப்டுவனவற்றுக்கும்  புழங்கப்பட் டதென்பதை எளிதின் உணரலாம்.

மதங்களும் கடவுட் கொள்கைகளும் சாவின் தன்மை அல்லது திறம் உணரப்புறப்பட்ட மனிதன் நாளடைவில்
மேற்கொண்டவை என்பது மனிதவளர்ச்சி நூலாரின்
கொள்கையாகும்.  வரலாறும் அஃதே.

சா+கு+ இ + அம்.

இ அம் என்பன விகுதிகள்.
கு சொல்லமைப்பு இடைநிலை.
ஙகர ஒற்று:  மெலித்தல் எழுத்துப்பேறு.

சா  :  சாவு , இறப்பு.
சா +கு =  சாவுக்கு. இது திரிந்து சாங்கு என்று மெலிந்தது.
மா+ கா = மாங்கா(ய்) என்பதுபோலும் புணர்ச்சி.
இ + அம் = இயங்குவது.  இயம்.  இது இறுதிநிலை ஆனது.


ஆகவே சாங்கியம் =  சாவுக்கு இயங்குவது.

வாந்தி என்பதில் ந் என்னும் எழுத்துப்பேறு போல்வதே.

My previous post prior to 2010 has been  deleted by persons who wanted
to copy it or opposed the explanation,  but surreptously.

உடம்புச் சொற்கள் .....

உடம்பு என்ற சொல் பொருண்மை மிக்குடைய தமிழ்ச் சொல். நம்
ஆன்மா இவ்வுடம்பை உடுத்திக்கொண்டிருக்கிறது என்ற பொருள் இச்சொல்லில் பொதிந்துகிடக்கின்றது. இதில் உள்ள அடிச்சொல் "உடு" என்பது ஆகும். இத்தகைய ஆன்மிகப் பொருளை விரும்பவில்லை
என்றால், உள் உறுப்புகளைப் போர்த்திக்கொண்டு உள்ளது என்று பொருள்
கூறிவிடலாம்.

உடம்புக்கு மெய் என்ற பெயரும் உள்ளது, இது : "மே"  அல்லது மேல்
என்ற அடியிலிருந்து வரும் சொல். சிலர் உடலை மேல் என்றும் சொல்வர். மேலெல்லாம் ஒரே அரிப்பாக இருக்கிறது என்பது கேட்டிருக்கலாம். மேல் > மேலி > மேனி என்ற சொல்லையும் ஆய்ந்து
நோக்கலாம்.லகரம்னகரமாய் மாறுவதுடையது.  மே> மெய்.  இதற்கு
உண்மை என்ற பொருளும் உள்ளபடியால், மரணத்தால் பொய்த்துவிடும் உடலினை எங்ஙனம் மெய் என்பது என்ற தத்துவக்
கேள்வி எழுகின்றது. மலம் என்னும் கேடு ஊறித் ததும்பும் இதனை
எப்படி மெய் என்பது எனத் தாயுமான அடிகள் கேட்கின்றார். மெய் மெய்யன்று; அது பொய்யே ஆகும். உயிர் போன பின் ஒரு நாளில்
புதைக்கவில்லை என்றால் நாறத் தொடங்கிவிடுவதால், பாடம்பண்ணினாலே தாக்குப்பிடிக்க முடியும்.  அழிபொருட்களை
உண்டுவளர்ந்த உடலாதலால் உயிர் நீங்கியபின் அதுவும் அழியத்
தொடங்கிவிடுகிறது.  ஆகவே மெய்யினை மெய் என்று கொள்ளாதீர்.
இது அழிதலை உடையது. இறைவனையே நம்புக என்ற தத்துவத்துக்கு
வந்துவிடுகிறோம்.

தேகம் என்பது, தேய்தல் என்ற சொல்லினின்றும் போந்தது.
தேய்+ கு+ அம் = தேய்கம் > தேகம் ஆகும். பல சொற்களில்போல‌
யகர ஒற்று, மறைகிறது அல்லது கெடுகிறது. தேய்தல் அல்லது
அழிதலை உடையது தேகம்.  நிலையாமையை உணர்த்தும் சொல்
இதுவாகும்.

யாத்தல் என்பதன்  அடியாகத் தோன்றியது  யாக்கை. யாத்தல் என்பது கட்டுதல் . பல உறுப்புகளையும் உள்ளடக்கிக் கட்டப்பட்டிருப்பது யாக்கை;
அன்றி  ஆன்மாவைக் கட்டி வைத்திருப்பதும் அதுவாம் 

புறக்கட்டு என்ற சொல்லை....................

இனி பேச்சு வழக்கிலிருக்கும் புறக்கட்டு என்ற சொல்லைக் கவனிப்போம்.
இதைப் புற+ கட்டு என்று பிரித்து,பின்புறத்துக் கட்டுமானம், அல்லது
அஃது உள்ள இடம் என்னலாம். பின்புறம் என்றும் பொருள்.

இது எழுத்தில் வந்துழிக் காண்க.

இதை புற + கண் + து என்றும் பிரிக்கலாம். இங்கு கண் என்பது இடம்
என்று பொருள்படும்.  கண்+து = கட்டு என்றும் வரும்.  கண்ணது என்றும் வருதல் உண்டு.

இது வெளியிடத்தது என்று பொருள்தரும். பேச்சிலும் இது அருகியே வருகிறது.

சொல் அமைப்பை அலசும் போ து இலக்கிய வழக்காக உள்ள இது  "சொல்
நாகரிகம் "  உடைய கோவையாகத் தோன்றவில்லை என்பதே இதில்
வியப்பாக உள்ளது.

புற வலம் the external strength. ப்ரபல

ஒருவன்,  தன் வீட்டுக்கு வெளியே,  அதாவது வெளியுல்கில் புகழுடன்
விளங்கவேண்டும். வீட்டில் யாரும் புகழ்ந்தால் என்ன? புகழாவிட்டால்
என்ன என்று இருந்துவிடலாம். வீட்டிலிருப்போர் ஒருவனை மெச்சுவதும்
நல்லதுதான். அதற்கும் பலன்கள் உண்டு. என்றாலும் வெளியுலகப் புகழே பலரும் விரும்புவது என்று சொல்லலாம்.

புறத்தே புகழ் இருப்பின், அவன் வலிமையுடன் இருக்கிறான் என்று பொருள்.  அதற்கு ஒரு சொல் அமைப்போம்.

புறம் :  இதை ப்ர என்று மாற்றுங்கள்.
வலம்: இது பலம் என்பதன் வேறன்று.  வலிமையே வலம். புகழே வலம்.  வலமே பலம் ஆகும். பலம் என்பது பல என்றும் அம் இறுதியின்றிப் பிறமொழியில் நிற்கும்.

ஆகவே,  புற வலம் என்பது ப்ரபல அல்லது ப்ரபலம் என்றாகும்.

ப்ரபல என்ற சொல்லமைப்புக்குப்  புற வலம் என்பது அடித்தளம். எனினும் அது வழக்கில் இல்லை. தமிழில் ஒழிந்த நூல்கள் பல. அவற்றிலெங்காவது இருக்கலாம். கிட்டாததைப் பேசி என்ன கிடைக்கிறது!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

பாணன், பறையன் குடி

துடியன், பாணன், பறையன், கடம்பன் என்றுஇந்நான்கல்லது குடியும் இல்லை’’— புறம்.              335 

இப்பாடல் வரிகள் புற நானூற்றில் வருவன . இங்குக்   குடி என்ற
சொல் பயன்பாடு கண்டுள்ளது. குடி என்பது குடும்பத்தையும்
குறிக்குமேனும். அது ஒன்றுக்கு மேற்பட்ட இணைந்த - ஒன்றாய் வாழ்கின்ற மக்களைக் குறிப்பதாகும். வம்மிசம் என்ற சொல் ஓரளவு இதே கருத்தை விளக்கும் சொல் ஆகும்
மிசை மிசை வருவது வருமிசம் > வம்மிசம் ஆகும். வம்மிசம்
முன் இங்கு   விளக்கப்பட்ட சொல் ஆகும்.

இச் சொல்லை அறிய  கீழே தரப்பட்டுள்ள  தொடர்பினைச் சொடுக்கவும் 
இந்த நான்கு அல்லது வேறு குடிகள் இல்லை என்று புறம்
கூறுவதால், இவர்கள் அகமணம் புரிந்து வாழ்ந்தனர் என்று
கருதவேண்டும்.
இந்த வரிகள் எழுந்த காலத்தில், ஏனையோர் இன்னும் குடிகள் ஆகிவிடவில்லை. அதாவது வண்ணானோ குயவனோ தொழிலர்களாய் இருந்தனரே அன்றி, அகமணம் புரியும் வழக்கத்தினராய் வம்மிசங்களாக ஆகிவிடவில்லை.
அது பின்னர் நிகழ்ந்திருக்கும்.
1900 ஆண்டுகட்கு முன்பு வரை கலப்பு மணங்கள் நிகழ்ந்து
வந்தன எனக் குருதி ஆய்வுகள் புலப்படுத்துவதால், இப்பாடல் பகுதியும் 1900 ஆண்டுகட்கு முற்பட்டதாகல் வேண்டுமென்பது தெளிவு

காண்க 
வம்மிசம்
.https://sivamaalaa.blogspot.sg/2016/05/blog-post.html



But it wasn't until about 100 B.C. that a holy text called the Manusmruti explicitly forbade intermarriage across castes.
The study doesn't suggest that either the ancestral North or South Indian group formed the bulk of the upper or lower castes, Witzel said.
http://www.livescience.com/38751-genetic-study-reveals-caste-system-origins.html

வியாழன், 2 பிப்ரவரி, 2017

பேதி not Bethi. Just pEthi.

இது எந்த மொழிச்சொல்?

கழிச்சலுக்கு ஒரு சொல் படைத்துக்கொண்டிருந்தபோது, கழி என்பதிலிருந்து ஒரு சொல் படைக்கலாம் என்று நினைத்திருப்பார்கள்.
அப்படி அமைந்திருந்தால் கழி+தி = கழித்தி > கஷ்தி என்று ஒன்றை
அமைத்திருக்கலாம்.

கழுத்தூறி என்பதிலிருந்து கஸ்தூரி என்று புனைந்ததுபோல்.

பெய்தல் என்பது அதற்கு ஈடான சொல்தான்.  மழை பெய்தல். மூத்திரம்
பெய்தல் என்றெல்லாம் வழக்குகள் உள.

மேலும் மலையாள நாட்டில் தூறுதல் (மழை தூறுதல்) என்பது
தூறுதல் (மலம் கழித்தல்) என்றும் வழங்குகிறதே!

ஆகவே பெய்தல் என்பதிலிருந்தே கழிச்சலுக்குச் சொல் அமைப்பதென்று தீர்மானம் ஆனது.

பெய் > பெய்தி > பேதி.

செய் > செய்தி > சேதி போலும் அமைந்தது.

தமிழ்தான். வேறு விளக்கெண்ணெய் இருப்பதாக உம் பேராசிரியன்
புருட்டா விட்டால் ................

அற்புதம்....how derived.

அற்புதம்  என்ற சொல் எப்படி அமைந்தது ?

இங்குக் கண்டு இன்புறுக .

https://sivamaalaa.blogspot.sg/2012/07/blog-post_18.html


இன்னும் அழிபடாமல் இருக்கிறது. 

ஜெட்லி நிதியமைச்சர் தம்மில் மேலோன்


வீடற்றார் தாம்பெறுவார் கோடி வீடு;
விடியலுக் கெழுந்ததுபா ரதமே நாடு:
ஓடற்ற குடிசைகளில் துன்பம் விஞ்சி
ஓய்ந்தயர்ந்த மக்களுக்கோர் நல்ல காலம்;
நீடுற்ற பலநன்மை நீங்கி டாத
நேர்த்தொண் டர் நிமிர்நெஞ்சர் மோடி பாதை
ஈடற்ற நன்முறையில்  ஏற்றும் ஜெட்லி
இவ்வுலகில் நிதியமைச்சர் தம்மில் மேலோன்


மோடி உறுதி

பெருமைக்  குரித்தான பண்பாடிதே----  அறிந்து
பெருமிதம் கொள்கிறேன் மோடிசொன்னார்.
அருமை அருமையே பாராட்டினார் --- தமிழ்
அரசுடன் கூடல்  செயலிலென்றார்.
உறுதுணை  யாமினித் திட்டங்களில் ---நிற்பேன்
ஒன்றாய்  வளர்ந்திடும் இட்டங்களில்;
உறுதியே மாநிலம் மேல்வளரும் --- இனிக்
குறிதவ றாதெனக் கூறிவைத்தார்.

புதன், 1 பிப்ரவரி, 2017

ஆரோக்கியம்

ஆரோக்கியம்   என்பது தமிழ்தான்    

இது இந்தோ ஐரோப்பியச் சொல் தொகுதிகளில் இல்லாதது.
ஆகவே தமிழ்த் திரிபுச்  சொல்தான்/

இதுபற்றி யாமெழுதியதை இங்குக் காண்க

https://sivamaalaa.blogspot.sg/2014/03/blog-post_8.html

தமிழ்ச் சொற்களை நன்கு அடையாளம் காண இயலாமை நிலவியதால்
பிற மொழிகள் பயனடைந்தன என்பதே உண்மை , 

ஆர் > ரு > ர. suffixes plural and plural of respect. Odisha Telugu

வந்தார்   என்ற வினைமுற்றில் இறுதியில் இருக்கும் விகுதி
ஆர் என்பது.

பிறமொழிப் பேச்சுகளில்,  வந்தார் என்பது வந்தாரு என்றும் வந்தார‌
(இறுதிக் குறில் ரகரம்)  என்றும் திரிதல் காணலாம்.

ஆகவே. ஆர் > ரு > ர.

தமிழ்ச்சொற்கள் தலைபோய் வழங்குதல் இம்மொழிகளின் இயல்பு
ஆதலின், இத்திரிபுகளில் வியக்க எதுவுமில்லை.

தெலுங்கு, ஒடிஷா மொழிகளைக் கூர்ந்து செவிமடுக்க.

அம்மொழிகளில் ர  ரு என்பன விகுதிகள் என்பதில் ஐயமில்லை.

இத்திரிபுகள் சங்கதத்தினுடன் தொடர்பு  அற்றவை .

These have been confirmed by Linguistic studies.

செவ்வாய், 31 ஜனவரி, 2017

ஒலி ஏதும் செய்யாமல்

ஒலி ஏதும் செய்யாமல் உள்ளேவந்து
உகந்தனவாம்  எவையென்று கண்காணித்து
நெளிவொன்றும் இல்லாமல் அழித்துவிட்டு
நேர்பட்ட  கருத்துகளை  வாரிக்கொண்டார்
மலிவாகத் தம்பெயரைத் தூக்கி ஏற்றும்
மதிமிக்க வழியொன்றைக் கண்டுகொண்டார்
இழிவான இச்செயலை நிறுத்திக்கொள்வீர்
இன்றமிழ்க்கு நண்பரென வாழ்தல் செய்வீர்


திங்கள், 30 ஜனவரி, 2017

திருடும் அறிவாளிகள்

ஒருவருக்கு எழுதிப் புகழ்பெற வேண்டும் என்னும் ஆசை உள்ளது. ஆனால் கருத்துகள் ஏதும் மூளையில் தோன்றவில்லை. நூல்நிலையங்களில் போய் நூல்களை  எடுத்துப் படிக்கும் பழக்கமும்
இல்லை. எதையும் தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கமும் இல்லை . ஒரு
வலைத்தளத்தில் தம்  பெயர் இடம்பெற வேண்டும் என்ற ஆசை
மட்டும் கரைபுரண்டு ஓடுகிறது,

என்ன செய்வது?

இங்குள்ள இடுகைகளை பகர்ப்புச் செய்துகொண்டு பின் அவற்றை அழித்துவிட வேண்டும். இதற்குக் கொஞ்சம் திருட்டுவேலைகள்
செய்யவேண்டும். கடவுச்சொல் முதலியவற்றைத் திருடவேண்டும்/
இவற்றை யெல்லாம் செய்து கருத்துகளைத் திருடித் , தாம் சிந்தித்து எழுதியது போல் எழுதித் தம்  பெயரைப் போட்டு வெளியிட‌
வேண்டும். போலிப் பட்டங்களையும் போட்டுக்கொள்ளலாம்.

இப்படிச் சிலர் முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

இவர்களைப் பார்த்தால் நமக்கு இரங்குகிறது மனம்.

ஆனால் ஒருவகையில் இவர்களிடமும் தமிழ் பரவிக்கொண்டுதான்
இருக்கிறது. திருடும்போது அதைப் படித்துவிட்டுத் திருடுகிறார்கள்
அல்லவா?

சொந்தச் சிந்தனை இல்லையென்றால், திருடிக்கொண்டே மற்றும்
திருடியதைப் படித்துக்கொண்டே தம்   பெயரை விளம்பரப் படுத்திக்
கொண்டே இருக்கலாம்.

நல்ல பெயர் ஏற்பட்டு,விழாக்களில் பரிசுகள் பெற்றாலும் பெறலாம்.

நடக்கட்டும்.

யாமெழுதிய பலவற்றுக்கும் பதிவுகள் உள்ளன. ஆனால் அவற்றை
மறு வெளியீடு செய்வதற்குப் பழைய கணினிக் கருவிகளைச் சரிசெய்து ஓட்டவேண்டியுள்ளது. இதற்கும் பணம் மற்றும் நேரம்
தேவைப்  படுகிறது. முடியாதவை அல்ல.ஏறத்  தாழ 500 பழைய இடுகைகள்
இங்கு அழிக்கப்பட்டுள்ளன..  தெரியாமலில்லை .

திருடும் அறிவாளிகள்

தேம்பாவணி ,  இரட்சணிய யாத்திரீகம் சீறாப்புராணம் பற்றிய எம் இடுகைகள்
அழிக்கப் பட்டுள்ளன.  சீறாப் புராணத்திலிருந்து ஒரு பாடலைத் தான் எடுத்துக் காட்டியிருந்தேன்.  அதையே "காப்பி"  அடிப்பதில் என்ன இருக்கிறது?   அடுத்த
பாடலைப் படித்து  நீர்  எழுதி இருக்கலாமே!  அப்படிப் படித்தால்தானே  தமிழ்
வளரும் !  அடுத்த பாட்டுப் புரியவில்லை போலும் !


இயற் சொற்களும் பிற சொற்களும்.

ஒரு சொல் எந்த மாற்றமும் இன்றி இருக்குமாயின் அதை இயற்சொல்
என்று சொல்லவேண்டும்.  அச்சொல், மாற்றங்கள் இன்றி இயன்ற சொல்லா என்பது ஆய்வு செய்வோனின் முடிபு பற்றியது ஆகும். மாற்றங்கள் எவையும் புலப்படாத காலை அவன் அதை இயற்சொல் என்று வகைப்படுத்துவான்.

வடசொல் சொல் என்ற சொல்வகை ஒன்றைத் தொல்காப்பியனார்
கூறியுள்ளார். வட என்ற பெயரெச்சம், வடக்கு என்பதில் கு என்ற‌
இறுதி விகுதியை நீக்கி நின்ற மிச்சச்சொல்லாக இருக்கலாம், வட‌
வேங்கடம் என்ற வழக்குமிருப்பதால், வேங்கடத்துக்கு வடக்கிலிருந்து
வந்த சொல் என்று பொருள்கூறலாம். அங்ஙனமாயின் அது தெற்கில்
வழங்காத‌ சொல்லாகவோ அல்லது அருகியே வழங்கிய சொல்லாக‌
சொல்லாகவோ இருக்கக்கூடும். சமஸ்கிருதம் என்ற மொழியானது
எங்கும் வழங்குவதாய் உள்ளபடியால், அதை வடமொழி என்றது
பொருத்தமாகத் தோன்றவில்லை. தொல்காப்பியனார் காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழிப்பெயர் இன்மையாலும் அது எழுதாக் கிளவி என்றும் குறிக்கப்பெற்றுள்ள படியாலும் இன்று சமஸ்கிருதம் என்பதுதான் வடமொழி என்று முடிவுசெய்ய இயல்வில்லை. சமஸ்கிருதம் வடமொழியன்று அது எங்கும் எதிர்கொள்ளப்படும் மொழி என்றுதான் முடிவுசெய்யவேண்டும். சொற்கள் பலவற்றையும்
ஆயுங்கால் தமிழ் மூலங்களே தென்படுவதால் அத்தகு சொற்கள்
வடமொழிக்குரியவும் ஆகாதவை; சமஸ்கிருதத்துக்குரியவும் ஆகாதவை. மேலும் வடம் என்பதும் வட என்று எச்சமாகும். எனவே
கயிறு, மரம் என்றெல்லாம் பொருளுடைய வட என்பது மொழி
என்ற சொல்லுக்கு அடையாக வருங்கால் கயிறுபோல் இழுக்கப்பட்ட‌
சொல் என்றோ மரத்தடியில் வழங்கிய சொல் அதாவது இல்லத்தில்
வழங்காத சொல் என்றோ பொருள்படவும் கூடும். எனவே வடசொல்
என்று எந்தச் சொல்லும் வகைப்படுத்த இயலாததாக உள்ளது. மேலும்
வடக்கு நீங்கிய ஏனைத் திசைகளிலிருந்து வந்ததே திசைச்சொல் எனின் திசை என்பது கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு நிலப்பகுதிகளிலிருந்து வந்த சொல் என்று பொருள்படும். அது எந்தச்
சொல் ?

இயற்சொல் திரிசொல் என்பன திரிபும் திரிபின்மையும் பற்றிய‌
பகுப்பாதலின் இவை ஒரு சொல்லின் தோற்றம் பற்றிய பகுப்பு,
ஆனால் திசை என்பது தோற்றம்பற்றிய தாக இல்லை.  வழங்கும்
இடம்பற்றிய தாக உள்ளது. திரிந்தாலும் திரியாவிட்டாலும் இயற்சொல் திரிசொல் என்பன செந்தமிழ் நாட்டில் வழங்குபவை
ஆதலின் வடசொல் திசைச் சொல் 1 என்பன செந்தமிழ் நாட்டில் வழங்காதவை எனலாமோ? என்பதும் ஆய்வுக்குரியதாக உள்ளது.

இதுபற்றிப்  பின் உரையாடுவோம்.

இயற் சொற்களும்  பிற சொற்களும்.

1 கோடிட்டவை  திருத்தம் பெற்றன.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

கதம்பம்

கலத்தல் என்பது, வேறுவேறான பொருட்களை
ஒன்றுசேர்த்துவைத்தல் என்பது உங்களுக்குத் தெரியும். கலத்தல் என்பது இரண்டுவகை என்று உணரலாம். நாம் கலந்து வைப்பதும் அது தானே கலத்தலும் என இரண்டு.  சாக்கடை நீரில் (சாய்க்கடை> சாக்கடை , அதாவது சாய்வாகக் கடைசிப் பகுதிக்குச் செல்லும்படி அமைக்கப்படுவது) குடிநீர் கலத்தல் என்பது தானே கலத்தல் எனலாம்.
(யாரும் போய்க் கலக்கவில்ல.)

கலத்தல் என்பது சண்டையிடுதல் என்றும் பொருள்படும். இந்தப் பொருளில் இருவேறு கோட்டியினர் (இப்போது கோஷ்டி) ஒருசாராரை இன்னொரு சாரார் அணுகி அடித்துக்கொள்ளுதல். கலகம், காலாய்த்தல், கலவரம் (கல+ அர்+ அம் அல்லது கல+ அரம்) என இதில் விளைந்த‌ சொற்களும்  உள.

கலத்தலில், பூக்களைக் கலத்தலும் ஒரு திறமைதான்.  இங்கு
கல > கல + பு + அம் > கலம்பம்  என்று முகிழ்த்து, கதம்பம் என்று
திரிந்துவிடுகிறது. கதம்பம் எனினும் கலப்பு ஆகும்.

கல> கல+ ஆவு + அம் > கலாவம் > கலாபம் எனவரும்,
மயிலிறகில் நிறங்கள் கலத்தல். அது ஒரு தனிவகைக் கலப்பு.

மண் கலத்தலும் இன்னொரு கலத்தல். கல+ அ +  அம் என்பது
யகர உடம்படு மெய் பெற்று, கல+ ய் + அ + அம் = கலயம்
ஆகிக் கலசம் ஆனது. ய ‍ >ச இயல்பான திரிபு.

இதை முன் எழுதியதுண்டு.

அறிஞர் பிறரும் சிலவற்றை விளக்கியுள்ளனர்.

சனி, 28 ஜனவரி, 2017

பரிதிமால் கலைஞரும் நூல் அரங்கேற்றமும்

வடகரை என்ற ஊரில் ஒரு நிலக்கிழார்
\(ஜமீந்தார்) இருந்தார். இவர்
பெயர் இராமச்சந்திர நாயுடு என்பது. 
தனித்தமிழ்ப் புலவரான பரிதிமால் கலைஞர்
 என்னும் சூர்யநாராயண சாஸ்திரியார், குளந்தை வடிவேலன்
பிள்ளைத்தமிழ் என்னும் நூலை அரங்கேற்றும் பொருட்டு இந் நிலக்கிழாரைக் காணப் பெரியகுளம் என்னும் ஊருக்குச் சென்றார். பரிதிமால் கலைஞர் தம் வேலை முடிந்ததும் உடனே திரும்ப எண்ணினாலும், நிலக்கிழார் அன்பின் காரணமாகவும் தமிழ்ச்சுவை மேலும் பருக விழைந்ததனாலும்  விடைகொடுக்கவில்லை.  சிலகாலம் தம்முடன் தங்கி இருக்கும்படி வற்புறுத்த, வேறுவழியின்றிப்     பரிதிமால் கலைஞரும் அங்கேயே சிறிது நாட்கள் தங்கிவிட்டார்.

போன பரிதிமாலர் காலம் தாழ்த்தியதைக்
 கண்ட அவர்தம் மாணாக்கர்
சலசலோசனர் ஒரு பாவின் மூலம்
 தம் ஆசிரியருக்கு விரைவில்
திரும்பவேண்டியதன் தேவையை உணர்த்தினார்.
அப்பாடல் வருமாறு:

செல்வமலி குளந்தைச் சேயின் தமிழ்விரிப்பச்
செல்வலெனச் சென்றாய்; தேசிகவான் ‍‍‍=== கல்வி வயின்
போந்தவன் தாழ்ப்பப் புலம்புகொண்டு இல்கணுறை
ஏந்திழையை நேர்குவல்யான், எண்.

இதன் பொருள் வருமாறு:

செல்வமலி : செல்வச்செழிப்பு மிக்க;
குளந்தைச் சேயின் : குளந்தை வடிவேலனின்
தமிழ் விரிப்ப : பிள்ளைத்தமிழ் நூலை அரங்கேற்ற;
செல்வல் என : போகின்றேன் என்று சொல்லி;   
சென்றாய் : போனீர்கள்
 தேசிக வான் கல்வி வயின் போந்தவன் : இத்தகைய‌ உயர்ந்த கல்விச்சேவை மேற்கொண்டு சென்ற நீங்கள்;
தாழ்ப்ப :வருவதற்கு காலம் தாழ்த்திக்கொண்டிருப்பதால்
புலம்பு கொண்டு:துன்பம் மிகுந்து;
இல்கண் உறை : வீட்டில் இருக்கின்ற;
 ஏந்திழையை : (உங்கள் ) மனைவியை
நேர்குவல் யான் : யான் குறிப்பிட விரும்புகிறேன்;

எண் : நினைத்துப் பாருங்கள் என்றபடி.

குளந்தை :  இது  பெரியகுளம் என்ற ஊரைக் குறிக்கிறது..

தேசிகம் - ஒளி, பொன், அழகு.


"பல்லினைத் தேசிகம்"  (சீவக.சிந்தா. 1480)


ஆசிரியருக்கும் மாணாக்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது;  ஆசிரியர் குடும்பம் பற்றிய அக்கறையும் மாணாக்கருக்கு இருந்தது.  பரிதிமாற்  கலைஞர் சென்றது  தம் ஆசிரியரின் ( (மதுரைச் சபாபதி  முதலியார் ) நூலை அரங்கேற்றுவதற்கு என்பதையும் நாம் மறக்கலாகாது.  பரிதிமாலருக்கு  தமிழ்க் கவலை.

பரிதிமால் கலைஞரும்  நூல் அரங்கேற்றமும்  \\

This post has some formatting errors which cannot be rectified.

We shall try some time later.
  




வெள்ளி, 27 ஜனவரி, 2017

சீனப் புத்தாண்டு; greetings


(இணைக குறள்  ஆசிரியப்பா )

சீனப் புத்தாண்டு;
ஞானப் பேரொளி புத்தரோ அரசனோ
எலியும் எருதும்
புலியும் முயலும்
கடல்நா கத்தொடு கட்செவி தானும்
குதிரையும் கோதில் ஆடும்
குரங்கொடு சேவலும்
நாயும் பன்றியும் எனப்
பன்னிரு உயிரிகள் பக்கலில் விளித்து
முன்னுறு பந்தயம் நிகழ்த்தி,
ஒன்றும் நான்கும் ஐந்தும் இன்மையும்
கால்விரல் தொகையே மேல்கொள,
தெரிந்துடன் எடுத்து வரிசையின் வைத்து,
யிங்கும் யாங்கும் என்பன கணித்து,
மக்கள் விழவே தக்க வாறுற‌
அமைத்தனர் என்றே அறிந்தோர் உரைப்ப;
அத்தகு சிறப்பின் அரும்பெரும் நாளை
இத்தரை வியக்க இனிதுகொண் டாடுவர்.
இந்த ஆண்டினில் இதுகொண் டாடும்
உந்து சிறப்பின் உயர்நண் பர்கள்
தந்தம் அகத்தினில் தணியாத்  தகையுடன்
பெருமகிழ் வனைவரும் எய்தி
நறுமண மலர்போல் பெறுகநல் வாழ்வே.

வியாழன், 26 ஜனவரி, 2017

The Jallikattu Ordinance

ஏறு  தழுவுதல் பற்றிய தமிழ் நாட்டில் ............. (our introduction lost )



FULL TEXT OF TAMIL NADU GOVT ORDINANCE ALLOWING CONDUCT OF JALLIKATTU
 JANUARY 23, 2017 12:10 IST

You may share this.

The ordinance promulgated by the Governor on January 21, 2017 on jallikattu is hereby published for general information:
TAMIL NADU ORDINANCE No. 1 OF 2017
An Ordinance to amend the Prevention of Cruelty to Animals Act, 1960 so as to preserve the cultural heritage of the State of Tamil Nadu and to ensure the survival and wellbeing of the Native breed of bulls.
WHEREAS Whereas the Legislative Assembly of the State is not in session and the Governor of Tamil Nadu is satisfied that that circumstances exist which render it necessary for him to take immediate action for the purpose hereinafter appearing;
AND WHEREAS instructions of the President have been obtained in pursuance of the proviso to clause (1) of Article 213 of the Constitution;
NOW, THEREFORE in exercise of the powers conferred by clause (1) of Article 213 of the Constitution, the Governor hereby promulgates the following Ordinance;-
1. (1) This Ordinance may be called the Prevention of cruelty to Animals (Tamil Nadu Amendment) Ordinance, 2017
    (2) It shall come into force at once
2. In section 2 of the Prevention of Cruelty to Animals Act,1960 (hereinafter referred to as the principal Act), after clause (d), the following clause shall be inserted, namely:-
"(dd) "Jallikattu" means an event involving bulls conducted with a view
to follow tradition and culture on such days from the months of January to May of a calendar year and in such places, as may be notified by the State Government, and includes "manjuviratu", "vadamadu" and erudhuvidumvizha."
3. Section 3 of the principal Act shall be re-numbered as sub-section (1) of that section and after sub-section (1) as so re-numbered, the following sub-section shall be added, namely:-
"(2) Notwithstanding anything contained in sub-section (1), conduct of "Jallikattu', subject to such rules and regulations as may be framed by the State Government, shall be permitted."
4. In section 11 of the principal Act, in sub-section (3), after clause (e),
The following clause shall be added, namely:-
"(f) the conduct of ‘Jallikattu' with a view to follow and promote tradition and culture and ensure preservation of native breed of bulls as also their safety, security and wellbeing."
5. The following proviso shall be added to section 22 of the principal Act, namely:-
"Provided that nothing contained in this section shall apply to conduct of “Jallikattu".
6. In section 27 of the principal Act, after clause (b), the following clause shall be added, namely:-
(c) the conduct of Jallikattu' with a view to follow and promote tradition and culture and ensure survival and continuance of native breeds of bulls.”
7. After section 28 of the principal Act, the following section shall be inserted, namely:-
28-A, Saving in respect of Jallikattu - Nothing contained in this Act
shal apply to ‘Jallikattu’ conducted to follow and promote tradition and culture and such conduct of Jallikattu shall not be an offence under this Act.”

செவ்வாய், 24 ஜனவரி, 2017

பவர் ஐயர் ( Rev Dr Henry Bower . D.D. ) &, நன்னூல்

பவர் ஐயர் ( Rev Dr Henry Bower . D.D. ) என்ற ஆங்கிலப் பாதிரியார் 1848 வாக்கில், நன்னூல் இலக்கணத்தின்பால் கொண்ட பெருமதிப்பினால், அதனை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சிட்டார். இது ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.

இவர் தமிழில் வல்லவராக விளங்கினார். இவருடைய ஆசிரியர் ஒரு தமிழ்ப்புலமை வாய்ந்த சமண முனிவர்

இவர் சி ந்தாமணியை நச்சினார்க்கினியர் உரையுடனும் அச்சிட்டு, 1857ல் வெளியிட்டார்.
பதமஞ்சரி என்ற பெயரில் ஆங்கிலச் சொற்கள், தமிழ்ச் சொற்கள் இவற்றைத் திரட்டி எழுதிப் பொருளுடன் வெளியிட்டார்.

கிறித்துவ சமயத்தைத் தமிழர்களிடம் பரப்புவதற்காகத் தமிழ்ப் படித்த‌
இவர்கள், கிறித்துவ நூல்களுடன் தமிழையும் வளர்த்துள்ளனர். ஒன்றும்
செய்யாத தமிழர்களைவிட இவர்கள் அதிகமே செய்துள்ளனர்.

இரவில் துன்புறும் மைனா ........

தூவானம் பட்டாலும் தோய்ந்தபடி தேடுமிரை
துரத்திவிடும் உனது பசியை;
நீவானம் நின்றபின்னே நேராக எங்குசென்றாய்
நின்மரமோ மழைநீர் சொட்டும்;
கூவாய்நீ நின்விடுதி யானறிவேன் கூவிடிலோ
குளிருக்கென் செய்தாய் மைனா!
தீவானில் போல்பகலோன்; இருந்தாலோ திரிந்திடுவாய்;
நான்காண்பேன் என் நா மெய்நா.

இருள்கவிந்த முன்னிரவில் படுக்கையில் கிடக்கின்றேன்;
என்போர்வை இட்ட காலை
நருள்குவிந்த இடங்களிலும் மேய்ந்துவிட்டே ஓய்ந்திருக்கும்
நன்மணியே இட்டேன் நெஞ்சில்;
பொருள்வேண்டாம் புகழ்வேண்டாம் உன்போலும் சிற்றுயிர்க்கோர்
போர்வையே யான்நயந் திட்டால்
அருள் ஈண்டும்; அன்புமிகும்; ஆதலினால் யாதுகுற்றம்
அருளில்லார் மாந்தர் கூட்டில்.

(இரவில் துன்புறும் மைனா )  Subject:  Interaction with Nature.



திங்கள், 23 ஜனவரி, 2017

மக்கள் அறப்போர்

மக்கள் அறப்போர் தகுவழி தானிறும் எண்ணினேற்கு;
தக்க   படிஇற வில்லை தடியால் முடிந்ததென்னே!
தெற்க  ண‌மக்களின் பொங்கல் மறுநாள் கவினுறவே
நற்க மழும‌லர் ஏறு தழுவுதல் நிறைபெறுமே.

பன்னீர்ப் பெரியவர் முந்நீர்க் கரைசென்று மக்களையே
தந்நிலை மற்றும் தமிழர் நிலையொடு சட்டநிலை
என்னு மிவற்றை விளக்கி இனிதே உரைத்திருந்தால்
பின்னை அனைத்தும் நலம்பெறும் சொன்னார் கருத்துரையே.



 மக்கள் அறப்போர்   -    பொதுமக்கள் நடைபெறுவித்த அமைதியான போராட்டம்;

தகுவழி தானிறும்  -   தகுதியான வழியில்தான் முடியும் ;

எண்ணினேற்கு   -    என்று எண்ணி இருந்த எனக்கு;

தக்க   வாறிற வில்லை  -  தக்கபடி முடியவில்லை;
தடியால் முடிந்ததென்னே!   -   தடியடி நடைபெற்று முடிந்தது
என்னே  (என்று இரங்கியவாறு)

தெற்க  ண‌மக்களின் - ‍தென்னாட்டு மக்களின்;

பொங்கல் மறுநாள் கவினுறவே  -  மாட்டுப்பொங்கல் விழா
அழகாக நடைபெற;

நற்க மழும‌லர் ஏறு தழுவுதல் நிறைபெறுமே--. நல்ல கமழும்
மலர்களை அணிந்த காளைகளைத் தழுவுதல் நிறைவு அடைய
வேண்டும்  என்றபடி.


இ ற -  முடிய
கவினுற -  அழகுற .
நற்  கமழு மலர் -  நல்ல வாச  மலர்   அணிந்த .
பொங்கல மறு  நாள் -  மாட்டுப் பொங்கல்.
ஏறு  தழுவுதல் -  ஜல்லிக்கட்டு.

மு ந்  நீ ர்  -  கடல்     கரை:  ( மெரினா கடற் கரை )

இதை முதலில் ஒரு கட்டுரை வடிவில் எழுதலாம் என்று
நினைத்தேன். ஆனால் அதற்கு நேரமில்லை; சில வேலைகள்
இடையிடையே என் கவனத்தை வேண்டிநின்றதால், என்ன செய்யய்யலாம் என்று தீர்மானிக்க இயலாமல் இருந்தபோது,
நான் எழுதத் தொடங்கிய சில வரிகள் ஒரு கவிதைபோலவே
காதில் வந்தேறியது. அப்படியே எழுதியபோது, ஐஞ்சீர் விருத்தம்
போல் தோற்றம் காட்டியது. அப்படியே எழுதி வெளியிட்டேன்.மீண்டும் அதை நோக்குங்கால், சில சீர்களைச் சீர்ப்படுத்திவிட்டால், பாடல் கட்டளைக் கலித்துறை ஆகிவிடும்போல் தோன்றியதால், அப்படியே மாற்றிவிட்டேன்.


இந்தப் பா நேரசையில் தொடங்கியதால், மெய்யெழுத்தை
நீக்கி எண்ணினால் மொத்தம் ஓர் அடிக்குப் பதினாறு எழுத்துக்கள்
‍‍‍‍‍இருக்கவேண்டும்.  நான்கு அடிகளிலும் அடிக்குப் பதினாறு
இருப்பின் யாப்பு சரியாக இருக்கிறது என்றும் இது கட்டளைக் கலித்துறை என்றும் அறிக.










ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஆசலம் என்பது...............vengadasalam etc

ஆசலம் என்பது பல சொற்களில் இறுதிநிலையாக வுள்ளது. அருணாசலம், தணிகாசலம், வேதாசலம் இன்னும் பல, ஆசலம் என்றால் மலை,

ஆசலம் என்பதைக் காது கொடுத்துக் கேளுங்கள். ( வேறு எப்படிக்
கேட்பது என்று கடாவுதல் வேண்டாம்),   வேற்று மொழிச்சொல் போல் ஒலிக்கிறதா?  அதற்கு மலைப் பொருள். எப்படி வந்ததென்பது காண்போம்.

ஆசு   -   (பற்றுக்கோடு,  அதாவது 'பிடிமானம்' )
அல் ‍=  அல்லாத,
அம் =  விகுதி.

இது மலையில் ஏறுகையில் பிடித்துக்கொள்வதற்கோ அல்லது உதவிக்கோ யாரும் எதுவும் இல்லாமல் இடருற்றவன் புனைந்த‌ சொல்.  அடிக்கடி மழை;  குளிர் என்பன போன்ற இயற்கை மிகுதிகளும் உண்டு.  அவன் அடைந்த இன்னல் அவனுக்குத்தான் தெரியும், அதனால் இந்தச் சொல்லைப் படைத்தான், சிலருக்கு மலை வாழ்வு இனிக்கும்; சிலருக்கு அது பிடிப்பதில்லை.

இச்சொல்  இப்போது அழகுள்ளதாக மிளிர்கின்றது,

ஏறவும் இருக்கவும் உதவாத கடினமான இடம் மலை,  மலை என்றாலே மலைப்புத் தருவது. மல்  வலிமையும் ஆகும், ஆசலம் மலை என்பதற்குப் பொருட் பொருத்தம் உள்ளது .

தெரியாமலா வேங்கடம் என்று பெயர் வைத்தார்கள். கடம் என்றாலே
கடப்பதற்கும் அரியது மலை.

அமைப்புப்  பொருள் இவ்வாறு  இருப்பினும்  ஆசலம்  என்பதன் வழக்குப்
பொருளில்  இந்த மலை இடர்கள்   தெரிய மாட்டா ,,     மலை என்ற சொல்லிலிலும் அவ்வாறு தெரிவதில்லையே .

அறிக மகிழ்க.
மெய்ப்பு:  பின்னர்.

Edited on 22.07.2022


Names of women of ill repute

விபச்சாரி  http://sivamaalaa.blogspot.com/2017/01/how-formed.html
 என்பது ஒரு குறுக்கப்புனைவு என்பதை முன் இடுகையில்
படித்து ஆனந்தமடைந்த உங்கட்கு, வேசி என்பதென்ன என்று கேட்கத்
தோன்றும்.அதை  முன்னரே விளக்கியுள்ளேன்.  அதனை இங்குக்
காணலாம்.

https://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_10.html

அறியாமையினால் இவையும் பிறவும் தமிழென்பதை அறியாது கழறினாருமுளர். செந்தமிழ் என்று வகைப்படுத்துதல் கடினமாயிருக்கலாம்,  ஆயினும் வழக்கிலுள்ள தமிழே ஆகும்,

அகடவிகடம்

அகடவிகடம் என்பது ஓர் இணைச்சொற்றொடர். அகடமும் விகடமும்
இணைந்தே நிற்கும். இரண்டிலும் கடம் உள்ளது.

பாலத்தைக் கடப்பது,  பாலைவனத்தைக் கடப்பது என்றெல்லாம், கடத்தல் பற்றிப் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள்.  பெண்ணைக் கடத்தல்,
பிள்ளையைக் கடத்தல் என்றும், கள்ளக் கடத்தல் என்றும் சொல்வழக்குகள் உள்ளன.  கடத்தல் (கட) என்பது பல பொருட்சாயல்களை உடைய சொல்.

கட என்பதில் கடு (கடுமை) ஒளிந்துகொண்டிருக்கிறது. பழங்காலத்தில்
எதையும் கடந்துசெல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எனவேதான், கட(த்தல்) என்னும் வினை கடுமை பொருந்திய பொருட்சாயல்களிலே வளர்ந்த சொல்லாகக் காணக்கிடக்கின்றது.

கடந்தே தீரவேண்டிய ஒன்று கடமை. ஒரு கடமையைத் தட்டிக் கழிப்பதைக் குமுகம் ஏற்பதில்லை. இது கடம் என்றும் கடன் என்றும்
வழங்கும். கற்பும் ஒரு கடமை; இது கற்புக் கடம் எனவும் படும்.

இவற்றையெல்லாம் அறிந்துகொண்டு, அகடம் என்ற சொல்லை அணுகுவோம்.

அ : இது முன்னொட்டு.  அல் என்ற சொல்லின் கடைக்குறை.
கடம்: கடத்தல் உரியது.

அகடம் = கடத்தற்குரியதல்லாதது.

அகட விகடம்:  கடத்தற்குரித்தல்லாததும்  கடத்தற் குரித்தான
விழுமிய பொருளும்..  இது சொல்லமைப்புப் பொருள்.

 இங்கு விகடம் :நகைச்சுவை.  (வழக்கில் வரும் அர்த்தம் )

அகடமாகிய விகடம் எனின், பின்பற்றலாகாத விகடம் எனினுமாம்.
அகட விகடம் :  அதாவது அகடமும் விகடமும், எனின்  கடமை
அற்றதும் நையாண்டித்தன்மை வாய்ந்ததும் என்றும் பொருள்படும்.

ஒருவன் செய்தக்கதே செய்க; நகைப்புக்கிடனாயது செய்யற்க.















சனி, 21 ஜனவரி, 2017

விபசாரி how formed?

இப்போது விபசாரி  என்ற சொல்லை ஆராய்வோம்.

நமது கணினியில் ஆக்கங்கள் உள்புகவும் வெளிவரவும் உதவும்
ஒரு சிறு கருவி உள்ளது. அதை இன்புட். ஒவுட்புட் என்பர். அடிப்படை இன்புட் ( உட்புகல்)  அவுட்புட் (வெளிவரல்) இதை பயோஸ் என்றதுபோல்,BIOS.\

இந்த விபசாரி என்பது ஒரு குறுக்கப் புனைவு.

வி = விரிந்து;
ப = பரந்து;
சார் = பிறரைச் சார்ந்து
இ = இருப்பவள் அல்லது ஒரு விகுதி.

இது ஒரு குறுக்கம்.  பாகிஸ்தான் என்ற சொல்போலவே. கபோதி என்பது கண்போன திக்கற்றவன் என்பது போலவே.

இதை அறியாமல் விபஸ் என்பது பகுதி என்றும் சாரி என்பது
விகுதி என்றும்  பலவாறு துன்புறுவர் பண்டிதர்.

கள்ளத் தனம்  காகிதப் பணத்தில் மட்டும்தான் உள்ளதோ?  நீரே நம்பிக்கொண்டிரும். எமக்கு நட்டமொன்றுமில்லை













matters aboout PETA AND JALLIKATTU

விலங்குகளும்  பலப்பலவாம் வீழ்த்தப் பெற்ற‌
வீணழிவின் வட்டகமே பீட்டா என்றே
கலங்கஒரு சான்றுரையும் செவியைச் சேரும்
காணுங்கள் இங்குள்ள பதிவு தன்னில்:

https://www.petakillsanimals.com/

Quote from report:


In other words, of the 2317 dogs and cats in PETA’s shelter 99.3 percent were killed.

 a van branded with the PETA logo pull up in the driveway followed by a worker seizing the dog and driving off. Wilbur Cerate, the dog’s owner, said that PETA employees later returned to his home with a fruit basket and news that the dog had been killed. The Accomack County Sheriff charged the employees with larceny. PETA refused comment to WAVY despite numerous requests.
In 2007, two PETA employees were tried for animal cruelty and littering in North Carolina after they were caught in a late night stakeout dumping the bodies of dead dogs and cats in a dumpster. Evidence presented during the trial showed that PETA employees killed animals they considered “adorable” and “perfect.” Likewise, witnesses at the trial testified that PETA told them they “shouldn’t have a problem at all finding homes” for dogs left in their care. Other North Carolina shelter personnel testified that they were under the impression PETA would find homes for the animals they handed over to PETA. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
This Organisation PETA  got involved in the Jallikattu matter in Tamil Nadu






வெள்ளி, 20 ஜனவரி, 2017

சொல்: சாபlல்லியம், சபலம்

.
மனமானது, பலவற்றிலும் ஈர்ப்பசைவு கொள்ளாது, நிலை நிறுத்தப்படுதல் வேண்டும். ஒன்றன்பால் மனம் அசைவு கொள்ளுமாயின் அது ஆசை எனப்பட்டது.  அசை > ஆசை.

சுடு> சூடு என்று முதலெழுத்து நீண்டு வினைச்சொல், பெயரானது போல.

மனம் பலவற்றிலும் சார்ந்து இயங்குமாயின் அது "சா(ர்)+ பல்+இயம். 
சாபல்லியம் என்பது காதுக்கு நன்றாகவே உள்ளதெனினும், சற்று நீண்டுவிட்டது போல் தோன்றவில்லையா? ஆகவே மேலும் சிந்தித்தனர். சா என்பதை ச (குறிலாகக்) குறுக்கினர். இயம் என்பதை அகற்றிவிட்ட நிலையில், அதற்குப் பதிலாக அம் என்ற விகுதி மட்டும் சேர்த்தனர். இப்போது ச+ பல் + அம் = சபலம் ஆனது. பலவற்றிலும் மனம்தாவும் புத்தி என்று பொருள்.

இதில் சார்(தல்) என்பது ச என்று குறுகி உருத்தெரியாமல் கிடக்கிறது, மற்றவை இயல்பாக நின்றன,

நம்மனோர் சொல்லமைப்பில் புயல்போன்றோர்.

சார்  > சா > ச .

வெளிப்படை இல்லாத சொற்குறுக்கம் :"  சபலம்" .

Note: There was an internet outage at the time this was being edited. Will review.
Now 0107 08062021

வியாழன், 19 ஜனவரி, 2017

அவசரச் சட்டம் Jallikattu

மோடிப் பெரியவர் முடியா தென்று சொல்லிய படியாலே
கூடிச் பேசிச் சட்டம றிந்தவர் தம்முடன் மன்றினிலே
நாடி அவசரச் சட்டம் இயற்றிச் சல்லிக் கட்டினையே
ஏடுகள் போற்ற நடத்துதல் ஒன்றே செல்வழி தோன்றிடுதே.

செவ்வாய், 17 ஜனவரி, 2017

கவலை தைப்பொங்கல்

பண்பாட்டின் முன்கூறாய்த் தழுவும் ஏறு
பைந்தமிழர் தைப்பொங்கல் வழுவி டாத‌
கண்தேடும்  நிகழ்வாக நடத்திப் போற்றும்
கலைமாணாக் கர்தம்பால் கடுமை காட்டி
விண்கீர்த்தி மண்மேலே விளைக்கும் காட்சி
விரிந்தஒளி பரப்பாலே அறிந்த காலை
உண்ணீரும் வறங்கூர்ந்த துன்பி னோடின் .
னொருதுன்பம் சேர்ந்திட்ட கவலை நொந்தேன்


கண் தேடும் =  எல்லோரும் காண விழையும் 

விண்கீர்த்தி மண் =  விண்ணளவு கீர்த்தியுடைய‌
மண், அதாவது தமிழ்நாடு.


வறம் கூர்ந்த = வறுமை ஏற்பட்ட‌. வற்றி விட்ட .

சாவிலிருந்துதான்.........ஜாதகம்

மனிதன் இறைவனனுண்மையைப்  பகுத்தறிந்ததும்  வழிபாட்டு முறைகளை உணர்ந்துரைத்ததும் சாவிலிருந்துதான். மரணமே இல்லையென்றால், இறந்தோனுயிர் எங்குச் சென்றதென்கின்ற கேள்வி
எழ இடமில்லை. இறப்பு ஒரு முடிவு போல் தோன்றுவதால் இறவாத‌
ஒருவன் இருக்கின்றானோ என்ற கேள்வியும், இறவாமல் இருந்துகொண்டுதான் அவன் இறப்புகளை ஏற்படுத்துகின்றானோ என்ற ஆய்வும் விளைகின்றன. அப்படிச் சென்றொழியாமல் நின்று நிலவுவோனை வணங்கினால் நன்மைகள் பல பெறலாம் என்கின்ற‌
கருத்தும் தோன்றுகின்றது.  அது நித்தியம் என்றனர். நில்+து+இயம் = நிற்றியம் > நித்தியம் > நித்யம் என்ற சொல்லும் உண்டாயிற்று. நித்தியமாவது, நின்று இயல்வதாகிய நிலை. இதைப் பிற  அறிஞர்களும் உரைத்துள்ளனர்.


எனவே சாய் ‍~ சா என்ற தமிழ்ச் சொற்களிலிருந்து சாய்தல் என்பதும்
சாதல் என்பதும்  ஆன  சொற்கள் உண்டாயின.  சாய்தல் என்பது பொதுப் பொருளிலும் இறப்பு என்ற சிறப்புப் பொருளிலும் வழங்கும், "வேரோடு சாய்ப்போம்" என்ற வழக்கையும் நோக்குக. மீண்டும் எழுந்துவிடாமல் அழித்தல் என்பது பொருளாம். போரில் சாய்ந்தான் என்றால் செத்துவிட்டான் என்று பொருள். நின்றுகொண்டிருப்பவன்    தி டீரெனச் சாய்ந்து இறப்பது உண்டென்பதால், சாய்தல் கருத்தில் சாதல் கருத்துத் தோன்றிற்று. சாய் என்பதிலுள்ள யகர ஒற்றுக் கெட்டுச் சொல் அமைந்தது.

சாய்தலும்  சாதலும் தொடர்புடைய சொற்கள் .

சாத்தியம் என்பது சாய்த்தல்  அடிப்படையில் எழுந்த சொல்லே.   இது முன் விளக்கப்பட்டுள்ளது.  இச் சொல்லில் ஒரு யகர ஒற்றுக்  கெட்டது . சாத்திரமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மனிதன் சாவின் தொடர்பில் தெரிந்துகொள்ள விரும்பியவற்றுள்  சாதகமும்
ஒன்று.  குழந்தை பிறந்தவுடன் இறப்பது infant mortality முற்காலத்தில் மிகுதி.
பிறந்த குழந்தைக்கு  ஆயுள் குறைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்பது தாய் தந்தை  உறவினர் இவர்களின் கவலை,பிறந்தது  சாவுக்குரியதோ ?   எனவே இதைக் கணித்தனர்,  சாவுக்குத் தகுவதோ  என்று பார்ப்பதே சா + தகு + அம் = சாதகம்
ஆனது, இப்பொருள்  நலமாகத் தோன்றாதபடியினால்  இது ஜாதகம் என்று மாற்றி  இடக்கர் விலக்கப்  பட்டது.   ஜா  = பிறப்பு என்று பொருள் கூறி  மரண எண்ணத்திலுருந்து  சொல் விடுதலை பெற்றது.

சொல்லுக்கு ஆக்கப்பொருள் நிறைவு அளிக்க வில்லை என்றால்,  அதைப் புலவர்  வேறு பொருள் குறி அழகுபடுத்தினர்.அபசகுனத்தை  ( கெடு  பொருள்)
விலக்குதல் நல்லது என்பது ஒரு மன்பதைக்  குறிக்கோள் ஆகும் .

This will be edited later as our draft went missing twice and had to be retrieved with some
difficulty.




திங்கள், 16 ஜனவரி, 2017

பாலித்தல்

பாலித்தல் என்ற சொல், பெரும்பாலும் பேச்சில் வழங்கவில்லை. பாடல்களில் ஆங்காங்கு தலைகாட்டுவதுண்டு.

அம்மை அருள்பாலிக்கிறாள் என்பதை இறைப்பற்று ஏடுகளில் கண்டின்புறலாம்.

பாலித்தல் என்பதனைச் சிந்திப்போம்.

பால் என்பது பகுதி என்று பொருள்படும், இதற்கு வேறு பொருள்பல‌
உண்டெனினும். திருக்குறளில் மூன்று பால்கள் உள. அறத்துப்பால்
முதலாவது. அறிதற்பாற்று, உணரற்பாலது என்ற வழக்குகளிலும்
இதே பொருள்தான்.

பால் என்பது தொழிற்பெயர். பகு > பகல் > பால். குறிலடுத்துக் ககரம், குகரம் முதலியன வரின் முதலெழுத்து நீண்டு திரியும்.  தொகுப்பு > தோப்பு என்பதும் அது. மலையாள மொழியிலும் தோப்பு என்னும் சொல்
உண்டு.  "தோப்பில் வீடு" என்பது அங்கு ஒரு வீட்டின் பெயர். தோப்பு இருந்த இடத்தில்  கட்டிய வீடு.

பகு> பகவு > பகவன் என்பதும் பகிர்ந்தளிப்போன் (படியளிப்போன்) என்றே பொருள்தரும் என்பதை முன் விளக்கியதுண்டு. அது இங்கு இன்னும்
உள்ளது என்று நினைக்கிறோம்.

பகு> பகல் > பாலி > பாலித்தல்: படியளத்தல் அல்லது பகிர்ந்தளித்தல்.அருளை யாவருக்கும் வழங்குவோன், அதில் ஒரு
பகுதியை பெறுவோனிடம் அளிக்கிறான் என்பது.

இனி, பர > பார் > பாரித்தல் > பாலித்தல். ரகரம் லகரமாய்த் திரிந்தது.
பர என்பது விரிவுக் கருத்தாகலின், பாலித்தல் என்பது விரித்தல் என்றும்
பரந்து கொடுத்தல் என்றும் ஏற்றபடி பொருள்தரும்.

பாலித்தல் என்பது ஓர் இருபிறப்பி ஆகும்.

தமிழறிஞர்  பிறரும் இதை விளக்கி யுள்ளனர் .

will edit later.




ஞாயிறு, 15 ஜனவரி, 2017

மீனாட்சி சுந்தரம் பிள்ளை " நாற்காலி"



ஒரு சமயம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்னும் பெரும்புலவருக்கு ஒரு நாற்காலி தேவைப்பட்டது. அதை எப்படிப் பெறுவது என்று எண்ணிப்பார்த்துத் தம் மாணாக்கரான ஞானப்பிரகாசம் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் ஒரு கவிதையாய்
அமைந்தது. அதில் ஒரு பாட்டு, அவர் கேட்பது என்ன " நாற்காலி" என்பதை  நகைச்சுவை உணர்வுடன் விவரித்தது. அது வருமாறு:

உறுவலியின் இடங்கொண்டு வனப்பமைந்த
நாற்காலி ஒன்று வேண்டும்;
மறுவறு நாற்காலி எனல் யானையன்று
குதிரையன்று வல்லேறன்று
கறுவகல் பால் பசு அன்றால்; இவையெலாம்
இயங்குதல்செய் கடன்மேற் கொள்ளும்;
பெறுபவர்பால் இயங்காது வைத்தவிடத்
தேயிருக்கப் பெற்றதாமே.

என்பது.

இதன் பொருள்:

உறுவலியின்  ‍~  வலிமையுள்ள; எளிதில் உடைந்துவிடாத.
இடங்கொண்டு ~  கொஞ்சம் விரிவுடைய;
வனப்பமைந்த ~  அழகுடைய;
நாற்காலி  ~  இருக்கை;
மறுவறு ~ குறையற்ற; ( முறைப்படி எண்ணுவதாயின் ...)
நாற்காலி எனல் ~  நாற்காலி என்பது;
வல்லேறன்று  ~  வலிமை பொருந்திய காளை ஆகாது;
கறுவகல் ~  கரிய நிறமுள்ள பெரிதான;
பால் பசு அன்றால் ~ பால் கறக்கும் ஆவும்  அன்று.   ஆல் ‍: இங்கு
அசை; பாட்டில் சந்தம் குறைவுபடாமல் வரும் சொல்.
இவையெலாம்
இயங்குதல்செய் கடன்மேற் கொள்ளும்  = இத்திறத்தன யாவும்
நடக்கும் செயலைக் கடமையாய் உடையவை;
பெறுபவர்பால் இயங்காது வைத்தவிடத்தே   யிருக்கப் பெற்றதாமே = அங்கும் இங்கும் அசையாது நானிட்ட‌ விடத்து இருக்கக் கூடியதாகும். பெறுபவர்பால் : ஏற்பவர் பாங்கில். என்றவாறு.

நாற்காலி என்ற சொல் நான்கு கால்கள் உடையது என்று காரணம் விரித்துக் காட்டுவதாகும். .  இருப்பினும் காரண இடுகுறி யாகையால், யானை
குதிரை முதலியவற்றைக் குறிக்கமாட்டாது. அது மாணவர் ஞானப்பிரகாசம் பிள்ளைக்கும் தெரியும். பின் ஏன் இந்த விளக்கம் தேவைப்பட்டது?

"ஞானப்பிரகாசா! நான் பெரிதாக எதையும் கேட்கவில்லை.
ஒரு மர நாற்காலிதான் கேட்கிறேன். எனக்கு அதைத் தந்து
உதவமாட்டாயா?" என்பதுதான் செய்தி. " பெரிதாகக் கேட்டு உன்னைத் தொந்தரவு செய்பவன் நானல்லேன்" என்பதே இங்கு
சூழ்ச்சுமமான உட்பொருள்.

(  சூழ்ச்சுமமான  :  பொதிந்து மறைத்துவைத்த.   இதைச்  சூட்சுமமான என்று எழுதுவர். சூழ்தல் ‍ : ஆலோசித்தல். சூழ்ச்சுமம் ‍:
ஆலோசித்து அமைத்தது. சூழ்+சு+ம் + அம்.  சு மற்றும் அம்: விகுதிகள்
ம் : ஒரு  சொல்லமைப்பு இடைநிலை.  )

இயங்காத பொருள் நாற்காலி. ஏனையவை ஓரிடத்து நில்லாதவை.

"யானை குதிரை நீ கொடுத்தாலும் என்னால் அவற்றின் பின் ஓடி
அவற்றை அடக்கமுடியாது. எனக்கும் அவற்றிலேதும் தேவையில்லை. நாற்காலி என்பதை காரண இடுகுறியாகவே வழக்கில்போல் இங்கு பயன்படுத்துகிறேன்."

ஒரு சொல்லின் சொல்லமைப்புப்  பொருள் வேறு.  வழக்குப் பொருள் வேறு 
என்பதை நன்குணர்ந்த பெரும்புலவர்  அவர்.

Has been edited. Hackers or their software may make  wilful changes, Will review..
Inherent paragraphing flaw in the posting software. Pl ignore. 
These apply to all our posts.  

சனி, 14 ஜனவரி, 2017

அவி சேகம்

அவிசேகம் என்ற சொல்  இப்போது அபிஷேகம் என்று வழங்குகிறது.
இதுபற்றி முன் யாமெழுதிய இடுகை இவண் கள்ளமென்பொருளால்
அழிவுண்டது.

இதைச் சுருக்கமாக மறுபதிவேற்றுவோம்.

செகுத்தல் என்பது கொல்லுதல். செகு+ அம் என்பது முதனிலை திரிந்த
தொழிற்பெயராய் சேகம் என்றாகும்.  இது கொல்லப்பட்டு வேள்வியில் புகுத்தப்பட்ட விலங்கினைக் குறிக்கும். அதுகாலை அது ஆகுபெயராய்
அவ்விலங்கினைக் குறிக்கும்.

அவி என்பது நெய். முன் காலத்து வேள்விகளில் கொல்லப்பட்ட விலங்கினை நெய்யிட்டு அவிப்பர். அதனால் இந்நெய்க்கு அவி
என்பது ஆகுபெயராய் வழங்கிய சொல்.

அவி சேகம் என்பது பின் அபிஷேகம் ஆயிற்று, இப்போது இச்சொல்
பொருள் மாறினும் வழிபாட்டுச் சொல்லாகவே வழங்கிவருகிறது.

இடுகை அழிந்ததால் வேறு ஆதாரக் குறிப்புகள் இப்போது கிட்டவில்லை.


first published before 2008

அணம் என்ற தொழிற்பெயர் விகுதி

அணம் என்ற தொழிற்பெயர் விகுதி தமிழில் பல சொற்களில் வருகிறது.
அவற்றுள் சிலவற்றைச் சிந்திப்போம். வினை அல்லாதனவும் இவ்விகுதி பெறுதல் ஊண்டு. இவ்விகுதி பெற்ற சொற்கள் சில பிற மொழிகளிலும் சென்று ஆட்சி பெற்றுள்ளன.

அட்டணம்
ஆரணம்
கட்டணம்
ஏரணம்
காரணம்
சாரணம் சாரணர்

தோரணம்
வாரணம்

என்று அவை பலவாம்.

இங்கு அணம் என்ற விகுதியைமட்டும் ஆய்வு செய்வோம்.

அ என்பது சுட்டு. இச்சுட்டு அந்த அது , எனல் தொடக்கத்துப் பலவற்றின் மூலம்.

> அண்.

அண் என்ற அடிச்சொல் அடுத்திருத்தலையும் குறிக்கும்

அண் > அண்முதல். அண்மித்தல்.
அண் > அண்டை.
அண் > அண்மை.
அண்> அணிமை.
அண்> அணை.

அண் > அணைத்தல்.
அண் > அணை> அணைக்கட்டு.
அண் > அணி > அணிதல்.
உடலை அடுத்து நிற்பது ஒருவன் ஆடையும் அணிகலன்களுமே.

சேலை முதலியன உடலை அணைத்துக்கொண்டு நிற்பன. சேலை இடையையும் கால்களையும் அணைத்து நிற்பது. = > >

கருவி > செய்தற்கு உதவும் பொருள்.
கரு செய்தற்கருத்து உள்ள பழஞ்சொல்.

கரு+ அணம் = கார்+ அணம் = காரணம்.
கரு+ இயம் > கார்+இயம் = காரியம்.

வருமொழி முதல் உயிர்வர கரு கார் ஆனது.

செயலை அடுத்து நிற்பது அதன் காரணமே.

அணம் - அடுத்தற்கருத்து உள்ளமை காண்க.


அண்+ அம் = அணம்.


First published in 2009

வெள்ளி, 13 ஜனவரி, 2017

பொங்கல் வாழ்த்துக்கள்.

ஏறு தழுவலைக் காணினும் இல்லெனினும்
கூறு தமிழால் குலமொன்றாய்ச் === சீரிய‌
பொங்கல் விழவெடுத்துப் பூரித்த உள்ளமுடன்
தங்கும் மகிழ்வெய்து வீர்.

முக்கனிச் சாற்றுடன் சர்க்கரையும் சேர்த்தட்டுத்
தக்கஅரி பெய்தாக்கும் இன்பொங்கல் ‍=== உட்கொண் (டு )
அனைய‌ வளங்களும் பெற்றுய்வீர் ஆண்டில்
நினைதொறும் இன்பம் வர.

எல்லோருக்கும் எம் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.





வியாழன், 12 ஜனவரி, 2017

இராமச்சந்திரக் கவிராயரும் வீரமாமுனிவர் சதுரகராதியும்

இராமச்சந்திரக் கவிராயரும் வீரமாமுனிவர் சதுரகராதியும்


சங்க காலத்துக்குப் பிற்பாடும் தமிழ் பல்வேறுவகைகளில் வளர்ச்சி யடைந்து வந்துள்ளது. இருபது, இருபத்தொன்றாவது நூற்றாண்டுகளில் எப்படி தமிழ் நம்மிடை நிலவுகிறதென்பதை நாம் ஓரளவு அறிந்திருந்தாலும்  இவற்றுக்கு முன் ஒரு நூற்றாண்டு பின் சென்றால் என்ன நடந்தது என்பதை நாம் உடனே அறியமுடியவில்லை. இதற்குக் காரணம், இணையத்தில் எல்லாமும் கனிந்துவிடவில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டை அறிந்துகொள்ள  மயிலை சீனி வேங்கடசாமியின் ஆய்வு நூல் ஓரளவுக்கு நமக்கு உதவி செய்கிறது.
இவ்வறிஞர் இந்நூலை எழுதியிராவிட்டால், இப்போது நாம் அந்நூற்றாண்டை அறிந்துகொள்ள இடர்பல உறவேண்டியிருக்கும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுப் புலவர்களில் இராசநல்லூர் இராமச்சந்திரக் கவிராயரும் ஒருவர். இவர் சென்னைக் கல்விச் சங்கத்தின் உறுப்பினர்.
தமிழ் அறிஞர் எல்லிஸ் துரை என்பாரின் நண்பர். இவர் 1824‍ல் வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியை இன்னொரு புலவருடன் இணைந்து 1860ல் பதிப்பித்தார்..

இவரெழுதிய நூல்களில் சகுந்தலை விலாசம் என்பதுமொன்று. இது
பிரஞ்சு மொழியிலும் ஜி. டெவ்ரீஸ் என்பவரால் மொழிபெயர்க்கப்படும்
சிறப்புடைத்தாகியது.

கவிராயர் சதுரகராதிக்கு ஒரு முகவுரை எழுதினார், அது கவிதை
வடிவில் அமைந்தது. அது தொடங்கிய விதம் இவர் ஆழ்புலமையை
வெளிப்படுத்துவதாய் உள்ளது.

தோலா விறலுள கோலா    னரசுசெய்
மேலான் இசைதிகழ் நாலாம் ஜார்ஜ் நாளில்
நன்றா  மனுமுறை குன்றா வகை இவண்
மன்றோ வதிபதி நின்றா ளுகையில்...........
......................

இவ்வகராதிப் பதிப்பில் இக்கவிதையை முழுமையாகப் படித்து
இன்புறுங்கள்.

-------------------------------------

அரும்பொருள் :

தோலா  - தோல்வி இல்லாத
விறல் -  வீரம், வலிமை.
கோலான்   -   செங்கோலினால் 
இசை - புகழ்
நாளில் -  பிறந்த நாளில்
நன்றா -  நன்றாக
மனுமுறை  -  மன்னு முறை  (இடைக்குறை )   :  நிலை நிற்கத் தக்க அறமுறைகளுடன் .
குன்றா -  குறையாத
மன்றோ  -  அவையினர் வியக்கும் . (ஓ - வியப்புக்குறிப்பு .)
நின்று - நிலையாக.
ஆளுகை - ஆட்சி  புரிதல் .


Jallikkattui ஜல்லிக்கட்டு

முன் ஜல்லிக்கட்டு பற்றி எழுதியவை:‍=

http://sivamaalaa.blogspot.com/2015/01/maneka-says-jallikattu-western-concept.html

ஆனால் இந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.  இந்திய உச்ச  நீதிமன்றத் தடை நீடிப்பதாகத் தெரிகிறது.

என் முன்னையக்  கவிதை இங்கே:

http://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_0.html

http://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_0.html

பழமை  விளையாட்டுக்குப்  புதுமைச்  சட்டங்கள்  குறுக்கே நிற்கின்றன .

தடை விலகுமா ?


புதன், 11 ஜனவரி, 2017

வதம் என்ற சொல்லை.....................

இப்போது வதம் என்ற சொல்லை ஆராயலாம்.

இதற்குரிய வினைச்சொல் "வதைத்தல்" என்பது.

வதைத்தல் ‍: கொல்லுதல் என்பது பொருள்.

வதை + அம் = வதம் என்றாகும்.  இதில் ஐகாரம் ஒழிந்தது.

வதை + அம் = வத் + அம் = வதம்.
அதாவது, வத்+ஐ = என்பதில் ஐ கெட்டது.

இது வறு > வறுத்தல் என்பதனோடு தொடர்புடையது.

வறு > வற்று ;  இது பேச்சு வழக்கில் வத்து என்று வழங்கும்.

வற்றுவதாவது, நீர் இல்லாமல் ஆவது.
வறுத்தல் என்பது, நெருப்பிலிட்டு நீர் இல்லாலாக்குவது.

வற்று = வத்து;
வற் = வத்.

வற் + அம் = வறம் (வறு+ அம் என்பர் தமிழ் இலக்கண ஆசிரியர்).
வத் + அம் = வதம்.

வறம் என்பது நீர்வற்றி இல்லாமலாகிய நிலை; வறுமையும் ஆம்.
வதம்: நீர் இல்லாமல் போயின்   உயிர்கள் அழியும்; ஆகவே இச்சொல்
கொல்லுதல் பொருளைத் தாவிற்று.

நாட்குறிப்பில் உள்ள சான்று Modiji case

நான் ஒரு குழும்பில் (கம்பெனியில்) பெரியவன், என் குழும்புக்கு வருமான வரி அதிகாரிகள் வருவர் என்று எதிர்பார்க்கிறேன்; அவர்களை இங்கு அனுப்பும் அரசியல் தலைவரை அதனால் எனக்குப் பிடிக்கவில்லை; அவருக்கு ஆப்பு வைக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எனது நாட்குறிப்பில் அவருக்குப் பணம் கொடுத்ததாகவும் இன்னும் வேறுபலருக்கும் பணம் கொடுத்ததாகவும் எழுதி வைத்துவிட்டு, மறுவேலைகளைக் கவனிக்கிறேன்.

எதிர்பார்த்ததுபோல, வருமான வரி அதிகாரிகள் வந்து பலவற்றையும்
தேடும்போது அந்த நாட் குறிப்பும் அவர்கள் கையில் சிக்குகிறது. எழுதிய‌
நான் முன்னணியில் நிற்கவில்லை. நான் வெளியில் வந்து எதையும்
சொல்லாவிட்டாலும், நான் சொல்லவிழைந்ததை என் நாட்குறிப்பு
சொல்கிறது.

எனது நாட்குறிப்பு அந்த அரசியல் அதிகாரி ஊழல் புரிந்ததாகப் பொருள்படாது.

சிந்தித்துப் பாருங்கள்: என் நாட்குறிப்பில் நான் எதை வேண்டுமானாலும்
எழுதிவைத்துக்கொள்ளலாமே! நான் வாயால் பொய் அல்லது மெய் சொல்வதற்கும அதை நானே எழுதி என் அறையில் போட்டுவைப்பதற்கும் என்ன‌ வேறுபாடு? என் நாட்குறிப்பை என் நினைவுக்கு உதவியாக நான் வைத்துக்கொள்ளலாம் அல்லது பயன்படுத்தலாம்.

மற்றபடி அது எப்படிச் சான்றாகும் என்பதை சட்ட நூல்களிலோ ஒரு
வழக்கறிஞரிடமோ  கேட்டறிந்துகொள்ளலாம்.

மேலும் அறிய: :-


http://www.timesnow.tv/india/video/modiji-received-kickbacks-from-sahara-birla-when-he-was-cm-claims-rahul/53282

இதே சட்டம்தான் அமேரிக்கா  இங்கிலாந்து ஏனைக்  காமன்வெல்த் நாடுகளிலும்  பின்பற்றப்படுகிறது.

நாட்குறிப்பில் உள்ள சான்று "கேல்விச்  சான்று "  ( Hearsay Evidene ).