ஒரு சொல் எந்த மாற்றமும் இன்றி இருக்குமாயின் அதை இயற்சொல்
என்று சொல்லவேண்டும். அச்சொல், மாற்றங்கள் இன்றி இயன்ற சொல்லா என்பது ஆய்வு செய்வோனின் முடிபு பற்றியது ஆகும். மாற்றங்கள் எவையும் புலப்படாத காலை அவன் அதை இயற்சொல் என்று வகைப்படுத்துவான்.
வடசொல் சொல் என்ற சொல்வகை ஒன்றைத் தொல்காப்பியனார்
கூறியுள்ளார். வட என்ற பெயரெச்சம், வடக்கு என்பதில் கு என்ற
இறுதி விகுதியை நீக்கி நின்ற மிச்சச்சொல்லாக இருக்கலாம், வட
வேங்கடம் என்ற வழக்குமிருப்பதால், வேங்கடத்துக்கு வடக்கிலிருந்து
வந்த சொல் என்று பொருள்கூறலாம். அங்ஙனமாயின் அது தெற்கில்
வழங்காத சொல்லாகவோ அல்லது அருகியே வழங்கிய சொல்லாக
சொல்லாகவோ இருக்கக்கூடும். சமஸ்கிருதம் என்ற மொழியானது
எங்கும் வழங்குவதாய் உள்ளபடியால், அதை வடமொழி என்றது
பொருத்தமாகத் தோன்றவில்லை. தொல்காப்பியனார் காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழிப்பெயர் இன்மையாலும் அது எழுதாக் கிளவி என்றும் குறிக்கப்பெற்றுள்ள படியாலும் இன்று சமஸ்கிருதம் என்பதுதான் வடமொழி என்று முடிவுசெய்ய இயல்வில்லை. சமஸ்கிருதம் வடமொழியன்று அது எங்கும் எதிர்கொள்ளப்படும் மொழி என்றுதான் முடிவுசெய்யவேண்டும். சொற்கள் பலவற்றையும்
ஆயுங்கால் தமிழ் மூலங்களே தென்படுவதால் அத்தகு சொற்கள்
வடமொழிக்குரியவும் ஆகாதவை; சமஸ்கிருதத்துக்குரியவும் ஆகாதவை. மேலும் வடம் என்பதும் வட என்று எச்சமாகும். எனவே
கயிறு, மரம் என்றெல்லாம் பொருளுடைய வட என்பது மொழி
என்ற சொல்லுக்கு அடையாக வருங்கால் கயிறுபோல் இழுக்கப்பட்ட
சொல் என்றோ மரத்தடியில் வழங்கிய சொல் அதாவது இல்லத்தில்
வழங்காத சொல் என்றோ பொருள்படவும் கூடும். எனவே வடசொல்
என்று எந்தச் சொல்லும் வகைப்படுத்த இயலாததாக உள்ளது. மேலும்
வடக்கு நீங்கிய ஏனைத் திசைகளிலிருந்து வந்ததே திசைச்சொல் எனின் திசை என்பது கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு நிலப்பகுதிகளிலிருந்து வந்த சொல் என்று பொருள்படும். அது எந்தச்
சொல் ?
இயற்சொல் திரிசொல் என்பன திரிபும் திரிபின்மையும் பற்றிய
பகுப்பாதலின் இவை ஒரு சொல்லின் தோற்றம் பற்றிய பகுப்பு,
ஆனால் திசை என்பது தோற்றம்பற்றிய தாக இல்லை. வழங்கும்
இடம்பற்றிய தாக உள்ளது. திரிந்தாலும் திரியாவிட்டாலும் இயற்சொல் திரிசொல் என்பன செந்தமிழ் நாட்டில் வழங்குபவை
ஆதலின் வடசொல் திசைச் சொல் 1 என்பன செந்தமிழ் நாட்டில் வழங்காதவை எனலாமோ? என்பதும் ஆய்வுக்குரியதாக உள்ளது.
இதுபற்றிப் பின் உரையாடுவோம்.
இயற் சொற்களும் பிற சொற்களும்.
1 கோடிட்டவை திருத்தம் பெற்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக