திங்கள், 9 ஜனவரி, 2017

ஆட்டா மாவு எழுதா எழுத்து

ஆட்டா மாவு என்பதில் "ஆட்டா" என்பதென்ன? முன்பு பல வகை
மாவுகளும் ஆட்டுக்கல்லில் ஆட்டியே செய்யப்பட்டன. ஆட்டா மாவு
தமிழரிடத்து வந்தபோது, அதற்கான வட இந்தியப்பெயரை அவர்கள்
வழங்கவில்லை. மாறாக, ஆட்டுக்கல்லில் ஆட்டாத மாவு என்ற பொருளில் அதை ஆட்டா மாவு என்றனர். இப்போது ஆட்டா என்ற‌
எதிர்மறைச்சொல் அந்த மாவுக்குப் பெயராகிவிட்டது.

முன்பு அச்செழுத்து முதன்முதலாகத் தமிழ்நாட்டில் வந்தகாலை
அதை அச்செழுத்து என்று சொல்லவில்லை. எப்படிக் குறிக்கலாம் என்று பார்த்தவர்கள் அதை "எழுதா எழுத்து" என்றனர். அதுவே ஒரு பாடலிலும்
இடம்பெற்றது,

"மாண்பார் ஞானாதிக்க வியன்பேர்
மகிபன், எழுதா எழுத்தத‌னில்
பெருகார் வத்தில் பொறித்தளித்தான் "

என்பது திருத்தணிகை விசாகப் பெருமாளையர் பாடிய பாடலின்
பகுதி.  (தேம்பாவணிக் கீர்த்தனை,  1857) (மயிலை  சீ .வே )

இங்ஙனம் பெயர் சூட்டப்படுதலுமுண்டு. 

கருத்துகள் இல்லை: