பாலித்தல் என்ற சொல், பெரும்பாலும் பேச்சில் வழங்கவில்லை. பாடல்களில் ஆங்காங்கு தலைகாட்டுவதுண்டு.
அம்மை அருள்பாலிக்கிறாள் என்பதை இறைப்பற்று ஏடுகளில் கண்டின்புறலாம்.
பாலித்தல் என்பதனைச் சிந்திப்போம்.
பால் என்பது பகுதி என்று பொருள்படும், இதற்கு வேறு பொருள்பல
உண்டெனினும். திருக்குறளில் மூன்று பால்கள் உள. அறத்துப்பால்
முதலாவது. அறிதற்பாற்று, உணரற்பாலது என்ற வழக்குகளிலும்
இதே பொருள்தான்.
பால் என்பது தொழிற்பெயர். பகு > பகல் > பால். குறிலடுத்துக் ககரம், குகரம் முதலியன வரின் முதலெழுத்து நீண்டு திரியும். தொகுப்பு > தோப்பு என்பதும் அது. மலையாள மொழியிலும் தோப்பு என்னும் சொல்
உண்டு. "தோப்பில் வீடு" என்பது அங்கு ஒரு வீட்டின் பெயர். தோப்பு இருந்த இடத்தில் கட்டிய வீடு.
பகு> பகவு > பகவன் என்பதும் பகிர்ந்தளிப்போன் (படியளிப்போன்) என்றே பொருள்தரும் என்பதை முன் விளக்கியதுண்டு. அது இங்கு இன்னும்
உள்ளது என்று நினைக்கிறோம்.
பகு> பகல் > பாலி > பாலித்தல்: படியளத்தல் அல்லது பகிர்ந்தளித்தல்.அருளை யாவருக்கும் வழங்குவோன், அதில் ஒரு
பகுதியை பெறுவோனிடம் அளிக்கிறான் என்பது.
இனி, பர > பார் > பாரித்தல் > பாலித்தல். ரகரம் லகரமாய்த் திரிந்தது.
பர என்பது விரிவுக் கருத்தாகலின், பாலித்தல் என்பது விரித்தல் என்றும்
பரந்து கொடுத்தல் என்றும் ஏற்றபடி பொருள்தரும்.
பாலித்தல் என்பது ஓர் இருபிறப்பி ஆகும்.
தமிழறிஞர் பிறரும் இதை விளக்கி யுள்ளனர் .
will edit later.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக