சனி, 14 ஜனவரி, 2017

அவி சேகம்

அவிசேகம் என்ற சொல்  இப்போது அபிஷேகம் என்று வழங்குகிறது.
இதுபற்றி முன் யாமெழுதிய இடுகை இவண் கள்ளமென்பொருளால்
அழிவுண்டது.

இதைச் சுருக்கமாக மறுபதிவேற்றுவோம்.

செகுத்தல் என்பது கொல்லுதல். செகு+ அம் என்பது முதனிலை திரிந்த
தொழிற்பெயராய் சேகம் என்றாகும்.  இது கொல்லப்பட்டு வேள்வியில் புகுத்தப்பட்ட விலங்கினைக் குறிக்கும். அதுகாலை அது ஆகுபெயராய்
அவ்விலங்கினைக் குறிக்கும்.

அவி என்பது நெய். முன் காலத்து வேள்விகளில் கொல்லப்பட்ட விலங்கினை நெய்யிட்டு அவிப்பர். அதனால் இந்நெய்க்கு அவி
என்பது ஆகுபெயராய் வழங்கிய சொல்.

அவி சேகம் என்பது பின் அபிஷேகம் ஆயிற்று, இப்போது இச்சொல்
பொருள் மாறினும் வழிபாட்டுச் சொல்லாகவே வழங்கிவருகிறது.

இடுகை அழிந்ததால் வேறு ஆதாரக் குறிப்புகள் இப்போது கிட்டவில்லை.


first published before 2008

கருத்துகள் இல்லை: