சனி, 7 ஜனவரி, 2017

வேதவியாசன்

வேதவியாசன் என்னும் சொல்லும் வியாசம் என்னும் சொல்லும்
தமிழிலும் வந்து வழங்குகின்றன எனினும் இவை தமிழ் என்று
வகைப்படுத்த இயலாதவை என்ப.

வேதம் என்பது வித் (அறிதல்) என்ற சொல்லினின்று தோன்றிற்று என மேலை ஆராய்ச்சியாளர் கூறினும், இது வித்து (விதை) என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து அறிவே வித்து என்ற அடிப்படையில் எழுந்தது
ஆகும். அன்றியும் வேதம் என்பது, செய்யப்பட்டவை என்ற பொருளில்
வேய்தல் என்பதினின்று தோன்றியது எனினுமாம். "வேத"ச் சொல்லை
ஆய்ந்தோர் வேய்தல் என்ற சொல்லை அறியாதவர் ஆதலின், அதினின்று அது தோன்றுமென்பதை அறியார். வேய்தல் > வேய்தம் > வேதம். யகரம்
கெட்டது.  வாய்த்தி என்பது வாத்தி > வாத்தியார் என்றானது போல. (வாய்ப்பாடம் சொல்பவன்).

வியன், வியனுலகு என்பன தமிழ் வழக்குகள். வியன் என்பது விரிவு.
விர் > விய். விர் > விரி > விரிவு.  விய் > விய > வியாசம்,  அதாவது
விரிவாய்ச் சொல்லப்படுவது, எழுதப்படுவது.
எனவே வேதவியாசன் என்பது தமிழன்று என்று  முடிப்பினும் மூலச்
சொற்கள் தமிழென்பது காணலாம்.

கருத்துகள் இல்லை: