சனி, 8 ஆகஸ்ட், 2026

அபலை என்பது. ஆண்பால் அபலன்.

 அபலை என்பது  கைவிடப்பட்ட பெண்ணைக் குறிக்குமென்பர்.  இந்தப் பொருளை இங்கு ஆய்வு செய்வோம்.

இதில் வரும்  பலை என்ற இறுதி,  பலம்+ ஐ <  பல+ ஐ <பல்+ ஐ  எனவரும்.  பல்  என்பது பலம் என்ற சொல்லின் அடிச்சொல். இது வழக்கில் பலமில்லாதவன் என்பதில் பயன்பாடு காணும்.   ஆளும் கட்சி பலமிழந்தது என்ற வழக்கைக் காண்க.  அபலன் என்பது அபலை என்பதன் ஆண்பால் வடிவம்.

பலம்   என்ற சொல்,  பிற்காலத் திரிபு.  முன் அது  வல்- வலம் என்றே இருந்தது.  பகர வகரப் போலியை உணர்ந்துகொள்ள வகு> பகு என்பதைக் கண்டுணரலாம்.

வந்து இரு  என்பதே  வந்திரு >  வது இரு>  ( ரு குன்றி) >  வது இ > வதி என்றானது. இதை வந்திரு> வந்தி> வதி என்றும் காட்டலாம்.  வந்தி இடைக்குறை வதி என்பதுணர்க.  ரு மறைவு கடைக்குறை ஆகும்.  பின் வகு > பகு போல வதி > பதி என்று சொல்லமைந்தது. இது வகர பகரப் போலி.

அல் என்பது கடைக்குறைந்து,   அ+பலை  என்று சேர்ந்து அபலை ஆயிற்று.

வதிதலாவது,  குடியிருத்தல்.  பதி என்ற கணவனைக் குறிக்கும் சொல்,  வந்து பெண்வீட்டில் தங்கிக் குடித்தனம் செய்தவனைக் குறிக்கும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

கருத்துகள் இல்லை: