வாக்கு என்பதன் சொல்லாக்கம் அறிவோம்.
வாக்குதல் என்ற வினைச்சொல்லும் உள்ளது. இதன் பொருள் வார்த்தல் ( வார்த்தெடுத்தல்) என்பதாகும்.
வார்த்தல் என்பது, தனித்தனியாக வகைப்படுத்தி ஒவ்வொரு வார்ப்பையும் ஒரு குறித்த அளவுடன் எடுத்தல் என்று சொல்வர். இதைச்செய்ய ஏனங்கள் இருக்கும். இவை பலகார வகையாக இருக்கலாம். உலோகக் கட்டிகளாகவும் இருக்கலாம். இவ்வாறு செய்தல் ஒருவகை வகுத்தமைத்தலே ஆகும். வார்த்தல் என்பது ஒருபக்கம் நீளமாக வரச்செய்தல் என்றும் கொள்ளலாம். வார்த்தலில் வேறுபாடுகள் உள.
வகு> வாகு> வாக்கு.
வகு > வார்.
வகு > வகை> வாகை (வாகை என்பது வகைகளை உடைமை என்றும் பொருள்தரும்.)
வகு> வாகு> வாகை.
இவற்றின் பொருளை நிகண்டுகள் வாயிலாக அறிந்துகொள்க.
சொற்களும் பலவேறு வகையின ஆதலின், வகுக்கப்பட்டவை எனலாகும்.
வாய்> வா> வாக்கு என்று அமைதலும் ஆகும். இது நா> நாக்கு என்றபடி அமைதலே.
ஆகவே இச்சொல் இருபிறப்பி என்று முடிக்கவேண்டும். வாய் என்பதை வா என்று யகர மெய் விடுத்துப் பேசுவோரும் உளர். வாய்ப்பேச்சு> வாப்பேச்சு.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக