சாமி என்பது சுவாமி என்பதன் திரிபா என்பது ஒரு கேள்வியாகும்.
சுயம் என்ற சொல்லுக்கும் சொந்தம் என்பதில் உள்ள சொ(சொம்) என்ற அடியே தோற்றுவாய் ஆகும். சொ என்றால் சொந்தமாகவே தோன்றியது என்றும் பொருள் . இறைவன் அல்லது கடவுள் என்பவர் தானே தோன்றியவர் ஆவார். அதாவது அவர் கருவில் வளர்ந்து காலம் நிறைவாகிப் பிறந்தவர் அல்லர்.
தானாகத் தோன்றினாலும் இவ்வாறு கூறுகையில் அதற்கும் ஒரு தோற்றமுண்டு என்று புரிந்துகொள்ளப் படக் கூடும். அப்படியானால், ஒரு தொடக்கம் உண்டு. என்றுமிருப்பது என்றால் தோற்றம்கூட இல்லாமை. ஆதி பாரா சக்தி என்று சொல்லப்படுவது இத்தகைய தெய்வம் என்பது இந்தப் பெயரிலிருந்து தெரிகிறது. ஆதி பரா சக்தி என்றால் தொடக்கமற்ற பரம் பொருள். பரம் என்றால் பரந்து எங்குமிருப்பது. பரம்பொருள் என்றும் கூறுவர். காலம் இடம் என்ற இரண்டும் பரம்பொருட்கு இல, இவை இருந்தால் அவர் அவற்றுள் இயங்குவாரல்லர்.
சொ என்பது அடியாதலால். சொ+ அம் > சொயம் (.>சுயம்) ஆகிறது. சொ திரிந்து சுகரம் ஆகி, சு+ அம் + பு ஆகி, சுயம்பு என்றாம். இவ்வாறே சு+ ஆகும்+ இ. ஆகும் என்பது குகரம் கெட்டு அல்லது நீங்கி, சு+ ஆம் + இ > சுவாமி ஆகும். இங்கு வரும் வ என்பது வகர உடம்படு மெய்யுடன் அகரம் வந்த இயைபு ஆகும். வ்+ அ.
இல்லங்களில் சொந்தம் ( சொ) என்றிருந்தது கும்பிடுமிடங்களில் சு என்று திரிந்து, அதனுடன் அமைப்பு குறிக்கும் அம் இணைந்தது. சு+ அம் > சு+ ய்+ அம்> சுயம் ஆகும். இவற்றிலெல்லாம் ஐரோப்பியக் கலப்பு ஒன்றுமில்லை. வீட்டில் சொ என்றது கோவிலில் சு என்று வழங்கியது. யாரும் வெளியிலிருந்து கொண்டுவரவில்லை. இந்தச் சொற்களும் அங்கு இல்லை. அப்புறம் எவன் கொண்டுவந்திருப்பான்?
சொ என்பது சு என்று திரிந்ததற்கு ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு ஒரு பயணம் தேவை இல்லை. வெளியிலிருந்து வருகிறவன், அவனது அன்றாடச் சொற்களையே கொண்டுவந்திருப்பான்.
ஆகவே சாமி என்பது சாமிகும்பிடுதல் என்ற தொடரிலிருந்து பிரிந்து தனியானதாகவே உள்ளது. சாய்> சாய்மி> சாமி. சாய்மி> சாமிகும்பிடுதல். தலைசாய்ந்து கும்பிடுதல்.
சுவாமி என்பது சுயாமாய் ஆனது என்று பொருள்படும் இன்னொரு சொல். சு = சுயமாய், ஆம்= ஆகும், இ - இது. சு ஆம் இ > சுவாமி ஆகும். படைக்கப்படாத ஒன்று. என்றுமுள்ளது.
இருவேறு சொற்களாய்ப் பொருட்சிறப்புடைய சொற்கள்.
சமஸ்கிருதம் தொழுகை இடங்களில் உருவாகிய மொழி. வெளிமொழி அன்று.
வீட்டு மொழி தொழுகைத் தலங்களில் திரிந்தது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்,
-------------------------------------------------------------------------
பரமண்ணர் > பரமணர் > பிராமணர் பொருள்: பரமனோடு நெருங்கியவர்.
அண் அண்மை நெருக்கம்.
பிராமணர் தரைத்தேவர் என்ற கருத்துடன் இஃது ஒத்தியல்கிறது.
பரம் அன்னர் > பரமன்னர்> பிராமணர். பொருள்: கடவுள் போன்றவர்.
அன்ன - போன்ற.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக