கோடியிலே இருபத்தி ரெண்டுகோடி யின்மிக்கார்
கோவிட்டின் வேலையின்றித் தவித்த மக்கள்,
ஓடியோடித் தேடினாலும் வேலையொன்றும் எங்குமில்லை
உனைவேண்டாப் பூமியிதோ என்ன துன்பம்!
கூடிநண்பர் தம்மோடு களித்திருப்போம் எனச்சென்றால்
நாடுமிடம் எங்கெனினும் நோயின் தொல்லை,
மாடுகட்கு வேலையுண்டு, மனிதனுக்கோ வேலையில்லை
மந்தநிலை பலருக்கும் ; ஓய்ந்த பூமி!
அந்தநிலை இந்தநேரம் இல்லைஎன்ற போதினிலும்
அதன் தாக்கம் அங்குமிங்கும் இன்னும் உண்டு,
வெந்தஉண வின்விலைகள் ஏறியவை இறங்கிடுமோ
வீழ்ந்துமுன்னர் உலகமது போலும் வருமோ?
எந்தஒரு காரணமோ சிந்திக்கும் போதினிலே
இருக்கிறவை அங்குமிங்கும் கிறுக்குப் போர்கள்!
சிந்தனையில் ஒன்றாகிச் சேர்ந்துவாழ நாம்மனிதர்
சீர்பெறுவோம் என்றெண்ணில் துன்பம் ஏது?
திரம்பின்கா லத்தில்போர் இல்லைஇப் போது
வரம்பிகந்து செல்கின் றது!
பொருள்:
உலகில் 2 கோடிக்கு வேலை இல்லை என் கின்றது ஒரு கணக்கு.
வரம்பிகந்து - நிறுத்தும் எல்லை கடந்து
இதில் எளிய சொற்களையே பயன்படுத்தியுள்ளோம்.
அறிக மகிழக
மெய்ப்பு பின்னர்
Edited 22092024 0520
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக