திங்கள், 16 செப்டம்பர், 2024

அமீத்ஷா: போர்ட் பிளேர் விஜயபுரம் ஆனது

 போர்ட்பிளேரை   விசயபுரம் என்று நாமம்

போற்றுவணம் அமிதுநல்லார்  மாற்றிச் சூட்டி,


மாட்டிநின்ற அயலிருளை ஓட்டி த்  தீரம்

மாற்றமிலா மேற்புகழை மன்னப் பெற்றார்!


ஏட்டினிலும் பாட்டினிலும் கூட்டிப்  பேசி

இயன்றசெயல் ஆற்றாதோர்க் கின்ன பாடம்,


தேட்டெனவே கருதினவாம் நாட்டும்  எல்லாத்

திருத்தங்கள் தரவினிலும்  தேம்பண்  மீட்டும். 


அரும்பொருள்:

மாற்றிச் சூட்டி - பெயரை வேறாக்கி அவ்வூருக்கு அணிவித்து

அமிது நல்லார் -  சிறந்தவரான அமீத் ஷா அவர்கள்

வணம்  - வண்ணம்  தொகுத்தல் விகாரம்.

மன்னப் பெற்றார் -  நிலையாக்கிக் கொண்டார்/

மன்னுதல் என்றால் நிலைநிற்றல். மாறாமைப் பண்பு.

நாமம் - நாவினால் சொல்லப்படும் அழைப்புச்சொல்,  

நாவினால் சொல்லிக்கொள்வதே நாமம்.  அந்தக்காலத்தில்

சான்றிதழ்கள் இல்லை.

ஓட்டி -  விரைவாக நீக்கி

மாட்டிநின்ற -  மாறாமல் பட்டுக்கொண்டு நிலையாகிவிட்ட

தேட்டு -  ஆய்வு, பொருள்சேர்ப்பு ஆகியவை.

கருதினவால் -  கருதியவற்றால்

ஆற்றாதோர்க்கு இன்ன பாடம் -  செய்யாதவர்களுக்கு

இத்தகையது ஒரு பாடம், பின்பற்றத் தக்கது.

நாட்டும் -  நிலைநிறுத்தும்

தரவு - மக்களுக்குச் சமர்ப்பிக்கும் எல்லா செயலும்

தேம் பண்  - தித்திக்கும் பாடல் போன்றது

மீட்டும்  - வீணைபோல் வாசிக்கும்


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை: