இவை சாம்பல் என்ற சொல்லிலிருந்து வருவன.
சாம்பு > சாம்பல் ( சாம்பு+ அல்).
பு அல் என்பன விகுதிகள்.
சாம்பு + ஆன் > சாம்பான்.
சாம்பு + அவன் > சாம்பவன்.
எரிவன பின் குறுகிக் குவிந்து குப்பையாகும். சாம்புதல் என்பது குவிதல் என்றும் பொருள். குறுகுதலும் ஆகும்.
அடிச்சொல்: அண்>சண்> சாண் ( குறுகுதல் ), சாண்+ பு+ அல்> சாண்பல்.> (திரிந்து) சாம்பல் ஆனது. ண் அடுத்து ம் ஆகத் திரிந்தது. இதுபோன்ற திரிபுகள் முன் இடுகைகளிலும் காட்டப்பட்டுள்ளன. ஓரிடத்திலிருந்து நகரும் பொருள் இன்னொரு பொருளை அண்டுகையில் இடைவெளி குறுகும். ஆகையால் குறுதல் அண்முதல் பொருளினின்று எழுந்தது. எரிந்து முடிந்தது குறுகும். ஒரு மேசையைப் போட்டு எரித்து ஒரு நெகிழிப்பைக்குள் அடக்கிவிடலாம்.
ஒப்பிடுதல்: ண்+ பு > ம்பு.
வீண் + பு > வீம்பு ஆகிறது,
துண் + பு > தும்பு. ( துணிப்புற்ற கயிறு). முடிப்புடன் உள்ளது.
வன் + பு > வம்பு.
இப்பொருள் தேவநேயருக்கு ஒப்ப முடிந்தது, இனி சம்போ என்ற சொல்லின் விளக்கத்தையும் அறிக.
சாம்பவர் என்ற சொல் புத்தமத நூல்களிலும் காணப்படுகிறது. நாம் இங்குக் கருதுவது சொல்லமைப்புப் பொருள். இது தமிழின்வழி அங்குச் சென்றது. திபேத்துக்கும் சென்றிருப்பதில் வியப்பு எதுவும் இல்லை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
Edited on 19092024 0438
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக