ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

காலை வருக மாலை வருக

 காலை போயின்

மாலை ஏகின்

அன்பும் மாறுமோ ---- வளர்

பண்பும் தீருமோ.


காலை வணக்கம்

கருதும் காலம்

கோலமாகுமே இன்ப

மாலை போலுமே.


தேன் கலந்த 

திங்கள் காலை

வானில் நிலவுபோல் நெஞ்சின்

வசமும்  ஆனதே


அன்பு தந்த

ஆசைப் பேச்சும்

உண்மை லஞ்சமோ பெற்று

நெஞ்சம் கொஞ்சுமோ?




வந்து பார்த்த 

உன்றன் கண்கள்

என்றன் சொந்தமே----வேண்டும்

கொண்ட பந்தமே.


நினைத்தென் கண்கள்

இணைத்த நேரம்

கருத்தில் கலந்ததே --- தென்றல்

காற்றும்  மலர்ந்ததே


பந்தம் எதுவும் இல்லை.  சும்மா வணக்கங்களை தெரிவித்துக்கொண்டோம்.

அனபர் ஒருவருக்கு -   காலை வணக்கம் மாலை வணக்கம் என்று எழுதிக்கொண்டிருந்த பொழுது சில அழகிய வார்த்தைகள் எழுத்தில் வடிந்துகொண்டிருந்தன.  அவற்றை எல்லாம்  பொறுக்கி எடுத்து ஒரு கவிதைபோல் எழுதியுள்ளோம் இதனை நேயர்கள் திறனாய்வு செய்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.. நன்றி.  சிவமாலா.

கருத்துகள் இல்லை: