புதன், 11 செப்டம்பர், 2024

வைரம் என்ற சொல் தமிழ்

இனி வைரம் என்ற சொல்லை ஆய்வோம்.

 வைக்கப்பட்ட இடத்தில்  அது இறுகி, தீட்டியவுடன் ஒளிதரும் அழகுடன் மிளிரும் கல்லே வைரம்.  வைரம் என்பது என்ன சொல்?

வை  -  வைக்கப்பட்ட இடத்தில்.

இறு -  இறுக்கம் அடைந்து

அம் -  அமைந்த ஒளிக்கல்.

வைக்கப்பட்ட என்றால் இருந்த என்று பொருள்.  மனிதனால் வைக்கப்பட்ட என்று பொருளன்று. இயற்கையினால் வைக்கப்பட்ட அல்லது கடவுளால் வைப்புற்ற. தற்சூழல்களால் வைக்கப்பட்ட.


ஒரு காலத்தில் ரகரமும் றகரமும் வேறுபாடின்றி வழங்கின. ஆகவே இற்றை நிலைக்கு ரு-று மாற்றம் செய்துகொண்டாலே சரியாகும். இது ஓர் ஒலிநூல் படியான மாற்றம். இதைப்  பழைய இடுகையொன்றில் விளக்கியுள்ளோம். உம் பேராசிரியருக்குத் தெரிந்தால் கேட்டுத் தெரிந்துகொள்க.

இறுக்கம் என்பதே ஆக்கமூலமானாலும் சொல்லமைந்த வுடன்  று திரிந்து ரு- ர என்றாகிவிடும்.   று என்பது வல்லினம்.  இது சொல்லுக்குள் தேவை இல்லை. கல்லுக்குள்ளும் பயன் ஒன்றும் இல்லை. இதே போல் வல்லினம் வந்து திரிந்த சொற்கள் பல.

வையிறு அம் >  வையிரம்  >  வயிரம்.

இதேபோல் திரிந்த சங்கச் சொற்களும் உண்டு.  எடு:

வை >  வை+ இன் >  வயின்.  இடம்.

பொருள்வயின் பிரிதல் -  சம்பாதிப்பதற்காகக் காதலன் பிரிந்து போதல்.

வை >   இறுக்கம் என்பதற்கு இன்னொரு சொல்: காழ், காழ்ப்பு.

காழ்த்துவிட்டது என்பதை (கால்விரலில் )   "காச்சுப்போச்சு"
 என்பர்.

வை> வையகம்

வை >  வைகுந்தம்.  (  தான் குந்தியிருக்க தேவன் வைத்துக்கொண்ட இடம்).

வை> வைகுதல்:  வசித்தல், வாழ்தல்.  ( கு வினைச்சொல்லாக்க விகுதி)

வைகு+ உண்ட:  வைகுண்ட.   ( வைத்ததனால் உள்ளதானது).  

வெட்டுண்ட, கட்டுண்ட என்ற வழக்குகளைக் காண்க.

வைகுண்டம் :  தேவன் வைகுவதற்கு உண்டான இடம்.

இச்சொல்லை வய  (via)  என்று இலத்தீன் மொழியில் மேற்கொண்டனர்.  

via > way.  English.  viaduct.

மூலம்:  வாய் என்ற சொல்.  வாய் -  இடம்.

வைரம் தமிழென்று கண்டீர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


கருத்துகள் இல்லை: