கல்லுதல் என்பது கெல்லுதல் என்றும் திரியும், ஆதலின் அகரத்துக்கு எகரமும் போலியாகும். ஆனால் இது கவனமுடன் விளக்குதற் குரியது. திரிபுகள் பல. கதை என்பதும் கீதை என்பதும் எல்லாம் ஒலி என்ற அடிப்பொருளில் வருவனவே. பயன்பாட்டில் பொருள் நுட்பமாக வேறுபடலாம். கது என்ற அடிச்சொல்லி லிருந்து வரும் காது என்பது செவியைக் குறிக்க, கீதம் என்பது பாட்டைக் குறிக்க வழங்குவது காண்க. ஆனால் காது ஓர் ஒலிபற்றி; கீதம் ஒலி எனினும் இசை. அதாவது ஒலியெழுச்சி.
ஒலிபற்றி எனற்பாலது " ஒலிபற்றினி" (a sound change receiver) என்ற புதுச்சொல்லால் குறிப்புறுதல் சிறப்பாம்.
காது: உகரம் முன்வருதலை குறிக்கும் விகுதியாய் நுட்பமாக வழங்கியிருக்கலாம். இது பழஞ்சொல். கீதம் என்பதில் கத் > க+ க் > ஈ (தருதல்)>கீ எனப் பின்னுதல் நிகழ்ந்திருக்கவேண்டும். இறுதி து மட்டும் பற்றிக்கொள்ளப்பட்டது. கா து > கா/கீ (ஈ) என பின்னது கொண்டு முன்னது கெடுத்தல். சொல்லின் பகுதியைத் திரித்தல் அயல்மொழிகட்கு வழக்கம். விகுதியை மட்டும் மாற்றாமல் பகுதியில் திரித்தல். கீதம் என்பதில் ஈதல் என்பதன் ஈ ஏறிற்று, ஒலியினை ஈதற் குறிப்பு. ஈதல் என்பது வெகு நுட்பான முனைத்திரிபு ஆகும். ஆ+க்து > ஈ+க்த> க்+ ஈ/ து +அ. எனக்காண்க.
அகர வருக்கத்தவை, குறில் நெடில் பேதமின்றி, ஒன்று மற்றொன்றாகத் திரிதக்கவை ஆனாலும், கவனத்துக்குரியவை. எடுத்துக்காட்டு: அதழ் - இதழ்
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக