இதில் மீசுரம் என்ற திரிபின் வருகையை அறிவோம்.
மிகு + உரு + அம் > மீகுரம்.
இதன் சொல்லமைப்புப் பொருள் மிகப்பெரிய உருவத்தை உடையது என்பதுதான்.
இங்கு மீகுரம் என்பது மீசுரம் என்று மாற்றமடையும்.
மி என்பது மீ என்று நீள்வதும் இயல்பான திரிபுதான்.
மிகு+ து > மீது. ஒ நோ: பகு தி > பா தி. ( பாதி)
இது சொல்லிடையிலும் வரும் முதலிலும் வரும்.
பிற மொழித் திரிபுகளை அவ்வந் நூல்களில் கண்டுகொள்க.
சேரலம் > கேரளம்.
ஐரோப்பியத் திரிபுகளில் ch > k ஒலிமாறும்
மிகு உரு அம் என்பதே மீகுரம் > மீசுரம் ஆனது.
பொருந்தும் பொருண்மை பெற்றுலவும் இச்சொல். தெலுங்கில் மேலானது என்று பொருளாம்.
இதை மிசை+ உரு +அம் என்றும் விளக்கலாம். மீசரம் என்பதும் திரிபே. உகரம் அகரமானது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக