உழையென் றுழைத்தோர் இடுகைமுன் வைத்துப்
பிழையொன் றிருந்தாலும் பேசார்----- குழைவின்றி
நம்நேயர் சென்றிடுவார் நன்றல சுட்டாரே
எம்நாளும் செல்லும் இனிது.
உழையென் றுழைத்து - கடினமாக வேலைசெய்து;
இடுகை முன் வைத்து - ஓர் இடுகையை வெளியிட்டு;
பிழையொன் றிருந்தாலும் = பிழை ஒன்றோ காணப்பட்டாலும்;
பேசார் - தம்முள் அதுபற்றிப் பேசிக்கொள்ள* மாட்டார்கள்
குழைவின்றி - மன வருத்தம் இல்லாமல்;
நம் நேயர் சென்றிடுவார் - நம் வலைத்தள அன்பர்கள் போய்விடுவார்கள்;
நன்றல - அப்பிழைகளை;
சுட்டாரே - எழுதியவரிடம் எடுத்துக்காட்ட மாட்டார்கள்:
எம் நாளும் - எங்கள் காலமும்
இனிது செல்லும்- கசப்பு இல்லாமல் போகும்.
( பின் என்றாவது அதைக் கண்டு திடுக்கிட்டுத் திருத்துவோம் )
என்றபடி
மெய்ப்பு பின்னர்.
* இந்தக் குறியிட்ட பதங்கள் அழிக்கப்பட்டு,
கண்டு மீண்டும் புகுத்தப்பட்டன. 21062021 1033
Remarks: Hacked . restored
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக