சனி, 12 ஜூன், 2021

மரம் செடிகள் வருவித்த மழை

[இதை நீட்டியும் குறுக்கியும் மாற்றமாகப் பாடி

முடித்துள்ளேன்.  உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

சந்தங்கள் மாறிமாறி வருகின்றன.] 



அடிக்கடி வருகுது  மழை ---  நீரின்றித்

துடிக்குமோ மரக்கிளை இலை?

இடிக்கின்ற பரவையின் அலை --- தூதாகி

இவண்சொன்ன தாலிந்த நிலை!    1


பரவை -  கடல்

இவண் - இங்கே


சலவைத் துணியினைப் போட்டேன் ---  அதற்குள்

சட்டென்று கருத்ததே  முகில்!

விலகி ஒளிந்ததே   பகல் ----  வந்து

விளைந்ததே  ஒருசிறு திகில்         2


முகில் - மேகம்

பகல் - சூரியன்


துணிகளைத் துரத்திடும் வேகம் ----  கொண்டு

தொப்பென் றாகுமுன் எடுத்தேன்;

பணிகளை நிறுத்தியே களைத்தேன் ---- நீங்கள்

பார்த்திருந்தால் இரங்கும் மனம்.        3


துரத்திடும் வேகம் - துரத்துவது போன்ற வேகம்.


ஒருமணிக் கூறிதோ  ஓட  ---  என்னுடன் 

ஒன்றி உழைத்ததென் மூளை.

மறுமணிக் கூறுக்குள்  சுடர் ---   இங்கு

வந்ததும்  இல்லையாம்  இடர்.        4


சுடர் - சூரியன்

இடர் - துன்பம்



மீண்டும் கம்பியில் துணி ---  போட்டு

மேல் தொடர்ந்தேன்என் பணி,

மூண்டது மீண்டும்ஓர் மாரி  ---  ஆற்றில்

முங்கி நனைந்தது போலான  [சேலை]        5


மாரி - மழை.

முங்கி  -  மூழ்கச்செய்து


நேயர்களே   இந்தக் கவிதையில்  சேலை என்ற இறுதிச் சொல்லுக்குப் பதில்

சாரி என்று எழுதினால்,  மேலும் நன்றாக இருக்கும்  ஆனால் இது அயல் திரிபு.

ஆகையால் சேலை என்றே போட்டிருக்கிறேன்.  உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.  

சாரி என்று முடிக்கலாமா?   சாரி என்பதும் சீரை என்பதன் திரிபுதான்.  சீரை என்பது 

மரப்பட்டை குறிக்கும் தமிழ்ச்சொல்.






கருத்துகள் இல்லை: