செவ்வாய், 10 நவம்பர், 2015

வேசி சொல்லமைப்பு

வேசி என்ற சொல் ஓர் இழிவழக்கு என்று சொல்லத் தக்கதாகும்.தமிழரிடைச் சிற்றூர்களில் இன்னும் வழக்கில் உள்ள பதம் ஆகும்.  பொருள் பதிந்தது  பதம். பதி + அம்  =  பதம். பதிதல் -  உள்புகுந்து இருத்தல். 

முன் இடுகைகளில் யகரம்  சகரமாகத் திரியும் என்று கண்டோம்.  மயக்கு > மயக்கை>  மசக்கை  என்பது  முன் இடுகைகளில் நீங்கள் கண்டவற்றுடன் கூடுதல் ஒன்றாக வைத்துக்கொள்க.

வேய்தல் என்றால்  மேல்  போடுதல் ;   மேல்  அணிதல் .  மேலிட்டுக்கொள்ளல்.  .  கூரை வேய்தல் ஓர்  எடுத்துக்காட்டு.   பொது மகளிர் தங்கள் மேனியில்  வாசனைப் பொருள்களைப்  பூசிக்கொள்வதும்,  அழகிய ஆடைகளை  அணிந்துகொள்வதும் மை இன்மணக் குழம்புகள் முதலியவை பூசிக்கொள்வதும் ஆகியன செய்வர்,  தலையிலும்  கழுத்திலும் மார்பிலும்  கைகளிலும் அணிகள் கூடுதலாகத்  தரிப்பர்   இதனால் இவர்கள் வேய்ந்து கொள்பவர்கள் .  மைவிழியார் மனையகல் என்றாள்  ஔவைப்பாட்டி,

கிண்கிணி தண்டை சதங்கை சிலம்பொலி 
எங்கும் இசையுடன்  முழங்க ----  கால்கள் 
தகதிமி தகதிமி தகதிமி தகவென தாளம் போட 
மைவிழி  கைவளை யாட 
மரகத மணி வளை ஆட 
உம்முடன் ஆடுவேன் 
புதுமலர்  சூடுவேன் 
புலவி மன மகிழக் குலவி  அனுதினமும்
புதுமலரணைதனில்  கூடிடுவேன் 

என்பது  கவிஞர்  சந்தானம்  வரைந்த பாடல்.   தேவரடியாள்  தன்    வாடிக்கையாளனிடம்  மலர்க்கணை தொடுப்பவள் என்கிறார்  கவி பாப நாசம்  சிவன் .

ஆகவே :

வேய்தல் >(  வேயி  ) >  வேசி    

என்றமைந்ததே  வரைவின்மகளிரை ( வரம்பு கடந்த மகளிரை ),  பரந்து  ஒழுகும்  பரத்தையரைக்  குறிக்க வந்த  குறைதரம் உடைய சொல்.

வேய்ந்து  மயக்கும் வேயியரை  வேசியர் என்று கண்டுகொள்க .  

இப்போது  மேல் யாம் குறித்த "வரைவின்மகளிர் " என்ற தமிழ்ச்சொல்லை, சமஸ்கிருதத்தில்  எதிர்கொண்டு  மகிழ்ச்சி கொள்வோம்,    வரைவு  =  வரம்பு,  வரையறை.  இல் = இல்லாத,  மகளிர் =  பெண்கள்.  வரைவின்மகளிர் என்பது தமிழில் அமைந்த ஒரு சொன்னீர்மைப் பட்ட தொடர்,  இதை vAravanitA  "வாரவனிதா " என்று   கிருதமொழி  எடுத்துக்கொள்கிறது. இல் என்ற நடுச்சொல்  இல்லையானதுடன், மகளிர் என்பதுக்குப் பதிலாக "வனிதா " என்ற அழகிய சொல் கூட்டப்பெறுகிறது,  வனிதா என்பதும் வனப்பு என்ற தமிழுடன் தொடர்பு உள்ள சொல்.  வாரவனிதா ஈரானிய மொழியில் உள்ளதா என்று தேடிப்பார்க்கவும்.

 வேசி  என்ற தமிழ்ச்சொல்லும்  கிருதத்தில் சென்று  பொருதுகின்றது,  இதனால் கிருதவளம்  பெருகுவதாயிற்று,  வேசி  குறிக்க   27  சொற்கள்  கிருதத்தில்        உள்ளன ,
  ஷுண்டா  என்ற கிருதமொழிச் சொல் மலாய் மொழியில் "ஸுண்டால் "  (பொருள்  வேசி )   என்று திரிந்து வழங்கும்.   "பெரெம்புஅன்  சுண்டால் "
என்பர்

ய  -  ச  திரிபு:    கூடுதல்   எடுத்துக்காட்டுகள் 
http://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_5.html 

http://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_5.html

கருத்துகள் இல்லை: