வியாழன், 12 நவம்பர், 2015

"இவ்விடம்" அடிக்குறிப்புகள் இலத்தீனில்

இப்போதெல்லம் பல நூல்களில்  அடிக்குறிப்புகள்  தரப்படுகின்றன,   பெரும்பாலும் ஆராய்ச்சி  நூல்களில் இவை இன்றியமையாதவை  ஆகிவிட்டன,  குறிப்புகளைக் கட்டுரையினுள்ளேயே  புகுத்தலாம் என்றாலும்  வாசிப்போருக்கு அது  ஓட்டத் தடையாய் அமைந்து  படித்து முடிப்போருக்கு  மிகுதியான  நேரச்செலவாகவும்   விளைந்துவிடுதல் கூடுமென்பதை    நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.  சிறு எழுத்துரைகளுக்கு  இவை தேவைப்பட மாட்டா.

அடிக்குறிப்புகட்கு வசதி தரும் வெளியீடுகளில்    ஒரே    நூலிலிலிருந்து  ஒரே பக்கத்தில்  ஒன்றுக்கு மேற்பட்ட குறிப்புகள் தரும்படி நேர்ந்தால்  அதே நூலின் பெயரை திரும்பவும்  அச்சிட்டு  மறுதரவுகள்   உண்டாக்குவதை  எப்படி விலக்குவது ?  

அடுத்த குறிப்பில்  முழுவதையும் மீண்டும் எழுதாமல்,    எடுத்துக்காட்டாக  Ibid,  p 27  என்று குறித்து  படிப்போர்  எழுதுவோர் அச்சுக்கோப்பவர்   ஆகியோர் நேரத்தையும் கருத்து ஓட்டத்தையும்  இடையூறு இல்லாமல் செலுத்தலாம், 

இப்போது  இபிட்  ( Ibid  )  என்பதன்  பிறப்பினைத்  தேடிப்  பார்ப்போமே!

இபிட்  என்பதோ ஒரு வெட்டுப் பட்ட பதம்.  அதன் முழுமை  ibidem   என்பதாகும். இது ஓர்  இலத்தீன்  சொல்.

சரி  இந்த  இலத்தீன் சொல் எப்படி எங்கிருந்து வருகிறது?

இவ்விடம் >  இபிடம்   ஆயிற்று.

வகர -  பகர  திரிபு.   வ்வி  > பி .    b

இத்தகைய திரிபுகளில்    p,  b  வேறுபாடில்லை .  சில ஐரோப்பிய மொழிகளை  ஆய்ந்து  இதனை அறிக.

பன்னூல்களும் பயன்படுத்தும்  இதனைத் தந்த பெருமை  தமிழினதாகும்.

இலத்தீன்  ஆசிரியர்கள்  இதில் " இபி "   இங்கு  என்பதாகவும்     டெம்   விகுதி என்றும் கூறுவர் .
ஆனால்  இ  என்பதே   சுட்டு  என்றும்   இடம்  தலம்  குறிக்கும் முழுச்சொல் என்றும்  யாரும்  அறிந்ததுதான்.

  

கருத்துகள் இல்லை: