வான்மீகியார் தம் இராம காதையைத் தொடங்கும்போது ராமர் ஆண்ட நகராக எந்த நகரைக் கூறுவதென்பது ஒரு தீர்வுக்குரிய பொருளாக வந்து முன்னின்றது. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் எந்த எந்த நகரங்கள் இருந்தன என்பதும் அவற்றுள் எது ராமரின் நகர் என்பதும் சிந்திக்க வேண்டியவாயின, .
முனிவர் வான்மீகி வாழ்ந்த நகருக்கு அல்லது காட்டுக்கு அது அயல் ஆயிற்று ஆகவே அயல் என்பதை வைத்துக்கொண்டார் முன் இராமர் ஆண்டதாகக் கொள்ளப்படும் எந்த நகருக்கும் அது அயலே ஆகும். ஆனால் அந்த நகர் அவர் கதைக்கு ஒத்து வரவேண்டும் ஆகவே ஒத்து என்ற சொல் தேர்வு செய்யப்பட்டது.
அய(ல்) +ஒத்து + இ - அயோத்தி என்ற சொல் பிறந்தது.
இராமனின் நாடு நகரம் முதலானவற்றுக்கு அயலானதும் ஆனால் ஏனை எல்லா முறையிலும் அவற்றை ஒத்துமிருக்கும் இடம் என்று பொருள், இறுதி இ விகுதி சொல்லிறுதியாகவும் இடம் என்றும் பொருள் தரும்,
நாட்டை விட்டுக் காடு சென்றோனுக்கு நாடு அயல் என்பதும் குறிப்பு, அவனில்லாத போதும் அவன் இருப்பதை ஒத்த ஆட்சி என்பது "ஒத்து" என்பதன் அடுத்துவரு குறிப்பு.
அயல் என்பதை அய என்று வெட்டியது சரிதான். பயல் பய என்றும் வயல் வய என்றும் தமிழ்ப் பேச்சில் வருதலால் அய என்ற வடிவத்தையே மேற்கொண்டு சொல்லைப் படைத்து ஒரு நகர்ப் பெயர் ஆக்கினார். நிகழ்வுக்கு அயலான நகராயினும் இராமகாதைக்குரிய அசலிடத்துக்கு முற்றும் ஒத்த நகரம் .
வால்மீகி ஒரு தமிழன் தான். வால் என்றால் தூய்மை; மிகு + இ = மிகி ஆயிற்று. தூய்மை மிக்கோன் என்பது பொருள். இவர் ஒரு சங்கப் புலவர்.
வால் மிகி என்பதைத் தமிழில் பொருளுரைத்தால் ஓர் உன்னதப் பொருள் கிடைக்கிறது. சரி, கிருதத்தில் பிரித்துப் பார்த்தாலும் " வளர்ந்த புற்றில் அமர்ந்த மேதை " என்று உயர்ந்த பொருள்தானே வருகிறது என்று வாதம் செய்யலாம். கதைப்படி அவர் பிறந்தது "பால்மிக்கி" ( வால்மிக்கி) என்ற முன்னரே அந்தப் பெயருடன் விளங்கிய ஒரு காட்டுச் சாதியில். அவர்களுக்கு எப்படி அந்தப்பெயர் கிட்டியது? அவர்கள் எல்லோருமா புற்றில் கிடந்து அந்தப் பெயர் பெற்றார்கள்? பின்புதான் சாதிப்பெயர் என்றால் இத்தகைய ஓர் உலகப் புலவனைத் தந்த கூட்டத்திற்கு வால்மிகி என்ற காட்டுச் சாதி என்ற தகுதிதானா பரிசு ? காட்டில் அவர் படித்ததாக புலமை பெற்றதாக எந்தச் செய்தியுமில்லை. கடவுள் அருளால் எழுதினார் என்பது நம்பிக்கையாகலாம் ஆனால் வரலாற்றுச் செய்தியாவது எப்படி ----- என்றெல்லாம் கேள்விகள் எழலாம்
வட இந்தியாவில் பால்மிக்கி என்றொரு காட்டுவாசிக் கூட்டம் வாழ்ந்து வந்தனர். இவரை அந்தக் கூட்டத்துடன் தொடர்புபடுத்திக் கதை புனையப்பட்டது. அவருடைய நூலிலும் இடைச்செருகல்களைச் செய்தனர்.
மரா மரா என்றால் ராம ராம என்று வந்துவிடும் என்றனர்.
மரம் என்பதே தமிழென்று தெரியவில்லை?
முதலில் அது தமிழில் எழுந்து பின் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருத்தல் வேண்டும். தமிழ் மூலம் அழிந்தது.அப்போது எழுத்துள்ள மொழி தமிழ்மட்டுமே.
சீதையைக் கடத்த அண்மையில் உள்ள தமிழ் நாடே மிக ப்
பொருத்தமான இடம். புட்பக விமானம் எல்லாம் கதை.
சீர் > சீ> சீதை.
பின் சீதை > ஸ்ரீ தை > ஸ்ரீதா.
இராமாயணத்துப் பெயர்கள் பலவும் காரணப்பெயர்கள்.
http://sivamaalaa.blogspot.sg/2015/11/valmiki-and-his-mother-tongue.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக