அரசன் என்ற சொல்லுக்கு அரட்டு என்ற சொல்லே அமைதற்கு உதவியுள்ளது என்பதைக் கூறுகிறோம். கீழ்க்கண்ட இடுகையையும் படித்து ஆராயவும்.
https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html
அரட்டு என்பது மிகுந்த ஒலிசெய்தலுடன் அதிகாரம் செலுத்துதலையும் குறிக்கும். இதிலிருந்து அரட்டன் என்ற சொல் பிறந்தது. அரட்டன் என்ற சொல் முன்னாளில் அரசனையும் குறித்தது. தொடக்கத்தில் அதிகாரம் செலுத்தினவன் அரட்டன் என்ற குறிப்பிடப் பட்டாலும் அரட்டி உருட்டுவதையே ஒரு செயல்முறையாகக் கொள்ளாமல் ஒவ்வொன்றையும் முறைப்படி ஆய்ந்து உதவிக் குழுவினருடன் கலந்தாய்ந்து அரசு நடத்தியவனுக்கு நாளடைவில் வேறு சொல் தேவைப்பட்டது. அதுவும் அர என்ற அடிச்சொல்லையே பயன்படுத்திப் புனையப்பட்டது. அரசு என்ற சொல் நடப்புக்கு வந்தது. இதிலிருந்து அரசன், அரசி என்ற சொற்களும் தோன்றின. இளவரசன் இளவரசி முதலியவையும் உண்டாயின.
அர என்ற அடி : அரவம் என்பதும் ஒலியே யாகும். வேறு பொருட்களும் உள. அர என்பதன் முன் உரு "அர்". அங் எனபதும் ஒலி எழுவதே. அர்ச்சித்தல் ஒலி யால் நடை பெறுவது ஆகும். அர லி என்பதே அரஹர என்று மாறுகிறது. ஒ லியால் உணரப் படு வோன் இறைவன். மந்திரங்கள் ஒலியால் அமைந்தவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக