வியாழன், 13 பிப்ரவரி, 2025

ஆபத்து - முன்சொலா முடிபுகள்.

 முன் சொல்லப்படா முடிவுகள் இங்கு கவியில் வருவதுபோல் முன்சொலா என்று திரிபுசெய்து இட்டிருக்கிறோம். மகிழ்வு நமதே.

ஆக்களைப் பற்றிக்கொண்டு செல்வது ஒரு பண்டைப் போர்த்தொடக்கத் தந்திரமாகும்.  முதலில் பயிற்சிபெற்ற கள்ளர்களை அனுப்பி  மாடுகளைக் கவர்ந்து வரச்செய்வர்.  எதிரி நாட்டவன் வெகுண்டெழுவான். போர் தொடங்கிவிடும்.   ஆ பற்று என்பது ஆ பத்து ஆகி ஒரு சொல்லாய்  ஆபத்து என்றாகிவிட்டது. இதுவும் பொருத்தமே.

இந்தச் சொல் இவ்வாறு அமைவதாகச் சொல்வது,  முதன்மையான கண்டறிவு ஆன காரணத்தினால், இது முன்னர்க்  கூறினோம். இது மக்களிடை வழங்கி மொழியிற் புகுந்த ஒரு சொல். 

ஓரு புதுமையான நடப்பு நிகழ்வு மிக்க வலிமையுடன் வந்து தாக்கினால் அதைக் குறிப்பதற்கு ஒரு சொல் வேண்டுமே.

ஆ+ வல் + து >  ஆவற்று >    ஆவத்து > ஆபத்து ( வகரப் பகரத் திரிபு)

இவ்வாறும் இச்சொல் அமையும்.  ஆகையினால் இது ஒரு இருபிறப்பி அல்லது பல்பிறப்பிச் சொல்.

ஆவது ( ஆகக் கூடியது)   அற்றுப் போனாலும்  ஆபத்துத்தான். இது:

ஆ + அற்று > ஆ+ அத்து >  ஆவத்து >   ஆபத்து என்று ஆகும்.

அற்று என்ற எச்சம் அத்து என்று திரியும்.  இன்னோர் அத்து இருக்கிறது. அது வேறு.

இங்கு ஆ என்பது ஆதல் வினை.  இன்னொரு வடிவம்:  ஆகுதல்.  இதில் கு என்ற வினையாக்க விகுதி சேர்ந்துள்ளது.

பிற பின் காண்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

கருத்துகள் இல்லை: