சொற்களின் பொருளை நிறுத்துக் காணவேண்டும். அல்லது சிந்தனை பலவாறு ஓடி வழிந்து விடாமல் நிற்பித்துக் காணவேண்டும். யாம் நிறு, நிற்பி என்றசொற்களை இங்குப் பயன்படுத்துவதற்குக் காரணி, இந்த இருசொற்களினின்றும் இது விளக்கமுறுகிறது என்பதுதான். கண்டு என்ற வினை எச்சம் இறுதி முடிபு கொள்ளுதல் என்பதை வலியுறுத்துகிறது. பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை என்று சொற்களிலும் எல்லாமோ அல்லது சிலமட்டுமோ வரலாம்.
நிறு த்திக் கண்டு கொள்ளுதல்> நிறு கண்டு > நிகண்டு என்றாகும். இங்கு ஒரு வினைச்சொல்லும் அதனோடு ஒரு வினைஎச்சமும் கூட்டி இச்சொல் புனையப்பட்டுள்ளது. இப்படிச் சொல்வது எளிய முறையாகும். சமஸ்கிருதத்தில் மற்றும் பாலி மொழியில் வினை, இன்னும் எச்சங்களிலிருந்தும் சொற்கள் புனைவுறும்.
இன்னொரு முறையில்:
நில் என்ற சொல்லில் இரண்டு எழுத்துக்கள். இதில் கடைசி எழுத்துக் குறைந்தால் அதற்கு கடைக்குறை என்று பெயர். அடுத்த சொல் கண் என்னும் சொல். கண் என்ற சொன் முதலெழுத்து நீண்டுதான் காண் என்றாகி வினையானது. சொற்களை நின்று காணுதல் அதாவது ஆராயாமல் செல்லாது சற்று நின்று மொழிபொருள் காரணம் காணுதல். இதன் பொருள் விரித்தால், சென்றுவிடாமல் நின்று கண்கொள்ளப்படுவது என்றாகிறது. கண்ணிற் கொள்ளுதலாது கண்டுகொள்ளுதல். முடிவில்: நி + கண் + து > நிகண்டு ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக